spot_imgspot_img

எண்மான சந்தைப்படுத்தலும் இணையவழியில் வணிகம் செய்தலும் 

எண்மான சந்தைப்படுத்தல் என்பது எண்மான தொழில்நுட்பங்களான இணையம், சமூக  ஊடகங்கள், கைப்பேசி கருவிகள் மற்றும் பிற எண்மான ஊடகங்கள் போன்றவற்றைப்  பயன்படுத்தி உற்பத்திகளையும் சேவைகளையும் மேம்படுத்துகின்ற நடைமுறையாகும். அவை தேடற்பொறி ஊக்கி (SEO), விளம்பரக் கட்டணச் சொடுக்கி (PPC), சமூக ஊடக சந்தைப்படுத்தல் (SMM), மின்னஞ்சல் சந்தைப்படுத்தல், கருத்தாக்கச் சந்தைப்படுத்தல்  முதலிய பல்வகைப்பட்ட நுட்ப உபாயங்களை உள்ளடக்கியவையாக அமைந்துள்ளன.

எண்மான சந்தைப்படுத்தலானது அண்மைக் காலமாக அதிகரித்துவருகின்ற முக்கிய அம்சமாக  மாறியுள்ளது. ஏனெனில், ஆய்வு செய்வதற்கும் உற்பத்திகளையும், சேவைகளையும்  கொள்வனவு செய்வதற்கும் அதிகளவிலான ஆட்கள் எண்மான தொழில்நுட்பங்களிலேயே  தங்கியுள்ளனர்.

தொன்றுதொட்ட சந்தைப்படுத்தல் முறைமைகளிலும் பார்க்க அதிகளவிலான நன்மைகளை  எண்மான சந்தைப்படுத்தல் வழங்குகின்றது. எடுத்துக்காட்டாக, குறிப்பிட்டதொரு  சேவைபெறுநரை அவரவர் விருப்புகளின் அடிப்படையிலும், அவரவர் நடத்தைகளின் அடிப்படையிலும்,  அவரவர் சனத்தொகை அடிப்படையிலும் அணுகி தமது வியாபார சந்தைப்படுத்தல்  முனைப்புகளை மேலும் வினைத்திறனான முறையில் அமைத்துக்கொள்வதற்கு இது  அனுமதிக்கின்றது. இது உச்ச அளவில் முதலீட்டு இலாபத்தைக் கொண்டுவரக்கூடிய  வினைத்திறன் மிக்க சந்தைப்படுத்தல் நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கு துணைபுரிகின்றது.

மேலும், தொன்றுதொட்ட சந்தைப்படுத்தல் முறைமைகளைக் காட்டிலும் அதிக அளவிலான  நெகிழ்ச்சித் தன்மையையும், துரித தன்மையையும் எண்மான சந்தைப்படுத்தல் வழங்குகின்றது. வியாபார நடவடிக்கைகள் குறித்த நேரத்தில் எவ்வாறு செயற்படுகின்றன என்பதை எண்மான  சந்தைப்படுத்தல் முறையில் இலகுவாகக் கண்டறிவதற்கும், பகுப்பாய்வு செய்வதற்கும்  முடியுமாக உள்ளதோடு, அடைவுகளை மேம்படுத்துவதற்கான சமப்படுத்தல்களை  மேற்கொள்வதற்கும் வசதியாக அமைகின்றன. இது ஈடுபாட்டை அதிகரிப்பதற்கும்  மாற்றுவழியை அதிகரிப்பதற்கும் துணைபுரிவதோடு, ஈற்றில் வருமானத்தையும் ஈட்டித்தருகின்றது.

எண்மான சந்தைப்படுத்தலானது நாட்டமுள்ள வாடிக்கையாளர்களை அணுகி அவர்களுடன்  ஈடுபாட்டை மேற்காள்ளும் வகையிலான பல்வகையான எண்மான முறைமைகளைப்  பயன்படுத்துவதன் மூலம் பல்வகைப்பட்ட அணுகுமுறைகளை உள்ளடக்குகின்றது. அத்தகைய  முறைமைகள் உள்ளடக்குவது:

∙ தேடற்பொறி: தேடற்பொறிகளில் தமது இணையதளத்தையும் கருத்தாக்கத்தையும் புகுத்துவதன் மூலம் தமது வணிக நடவடிக்கைகள் வெளிக்கொணரப்படுவதையும் பலதரப்பட்ட இணையவழி ஈர்ப்பையும் மேம்படுத்த முடியும்.

∙          சமூக ஊடகங்கள்: முகநூல், கீச்சகம், படவரி போன்ற சமூக வலைத்தளங்களில் கருத்தாக்கங்களை உருவாக்கிப் பரிமாறுவதன் ஊடாக தொடருநர்கள் வாயிலாக  வணிக நடவடிக்கைகளின் உறவு கட்டியெழுப்பப்படும் என்பதோடு தமது  இணையதளங்களுக்கு தேடுநர்களைக் கொண்டுசெல்லும்.

∙ மின்னஞ்சல்: இலக்குக் குழுக்களுக்கு மின்னஞ்சலை உருவாக்கி அனுப்புவதன் மூலம் தமது சந்தாதாரர்களுடனான உறவு கட்டியெழுப்பப்படுவதுடன் வணிகங்கள் ஊட்டம்  பெறுகின்றன.

∙ கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரங்கள்: கூகிள் விளம்பரங்கள், முகநூல் விளம்பரங்கள் போன்றவற்றைப் பயன்படுத்துவதனூடாக வணிகங்கள் குறிப்பிட்ட ஆட்களைச் சென்றடையலாம். அவை தேடுகை ஊடாக வெளிப்படலாம் அல்லது சமூக  ஊடகங்களில் வெளிப்படலாம்.

எண்மான சந்தைப்படுத்தற் கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்கள் 

தேடற்பொறி ஊக்கி (SEO) கருவிகள்  

1. திறவுச்சொல் தேடல் கருவிகள்: தமது இலக்கு சமூகம் தேடுகின்ற திறவுச்சொற்களையும், சொற்றொடர்களையும் இனங்காண்பதற்கும் தமது இணையதள கருத்தாக்கத்தையும் தகவற்கோவையை மேம்படுத்துவதற்கும் இக்கருவிகள் வணிகத்துக்குத் துணைபுரிகின்றன.

2. இணையதள கணக்குக் கருவிகள்: இக்கருவிகள் இணையதளத்தின் தொழில்நுட்ப மூலக்கூறுகளையும் இணையப்பக்க SEO மூலக்கூறுகளையும் பகுப்பாய்வு செய்வதோடு முன்னேற்றமடைய வேண்டிய பகுதிகளுக்கான உள்ளடக்கங்களையும்  வழங்குகின்றன.

3. பின்னிணைப்புப் பகுப்பாய்வுக் கருவிகள்: தமது இணையதளத்தின் பின்னிணைப்புத் தகவற்பேழையை பகுப்பாய்வதற்கும் உயர்தர பின்னிணைப்புகளைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளை இனங்காண்பதற்கும் இக்கருவிகள் வணிகங்களுக்குத் துணைபுரிகின்றன.

விளம்பரக் கட்டணச் சொடுக்கி (PPC) விளம்பரப்படுத்தற் கருவிகள் 

1. கூகிள் விளம்பரங்கள்: இத்தளம் கூகிள் தேடுகைப் பக்கங்களிலும் கூகிள் திரைத் தளங்களிலும் விளம்பரங்களைத் தயாரித்து ஓடவிடுவதற்கு வணிகங்களை அனுமதிக்கின்றது.

2. முகநூல் விளம்பரங்கள்: இத்தளம் முகநூல் மற்றும் அதன் இணைத்தளங்களான படவரி, பற்றியம் ஆகியவற்றில் விளம்பரங்களைத் தயாரித்து ஓடவிடுவதற்கு வணிகங்களை அனுமதிக்கின்றது.

3. லிங்க்டின் விளம்பரங்கள்: தொழிற்பதவிப் பெயர்கள், தொழிற்றுறைகள் மற்றும் ஏனைய தொழில்சார் தகைமைகள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு  இலக்கு சமூகத்தை மையமாகக்கொண்டு லிங்க்டின் தளத்தில் விளம்பரங்களைத்  தயாரித்து ஓடவிடுவதற்கு வணிகங்களை இத்தளம் அனுமதிக்கின்றது.

சமூக ஊடகங்களின் சந்தைப்படுத்தல் கருவிகள் 

1. சமூக ஊடகங்களின் முகாமைத்துவக் கருவிகள்: தமது சமூக வலைத்தளங்களின் கணக்குகளைப் பேணுவதற்கும் பதிவுகளை ஒழுங்கமைப்பதற்கும் பல்வேறு தளங்களினதும் ஈடுபாடுகளைக் கண்டறிவதற்கும் இக்கருவிகள் வணிகங்களை அனுமதிக்கின்றன.

2. சமூகவியற் செவிமடுத்தல் கருவிகள்: சமூக ஊடகங்களின் தொடர்பாடலைக் கண்காணிப்பதற்கும் பேசுபொருள்களையும் வாய்ப்புகளையும் இனங்காணத்தக்க உற்பத்தி அடையாளங்களைக் கண்டறிவதற்கும் இக்கருவிகள் வணிகங்களை  அனுமதிக்கின்றன.

3. மயப்படல் சந்தைப்படுத்தற் தளங்கள்: செல்வாக்குமிக்கவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளவும் உற்பத்தி அடையாளம் பற்றிய விழிப்பை ஏற்படுத்துகின்ற

சந்தைப்படுத்தல் நடவடிக்கைகளில் செல்வாக்குமிக்கவர்களை முகாமை  செய்வதற்கும் அது சென்றடைவதற்கும் இத்தளங்கள் வணிகங்களை அனுமதிக்கின்றன.

மின்னஞ்சல் சந்தைப்படுத்தற் கருவிகள் 

1. மின்னஞ்சல் சந்தைப்படுத்தல் தளம்: தமது சந்தாதாரர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல்களைத் தயாரித்து அனுப்புவதற்கும் ஈடுபாடு, தொடர்பாடல் போன்றவற்றைக்  கண்டறிவதற்கும் இத்தளம் வணிகங்களை அனுமதிக்கின்றது.

2. சந்தைப்படுத்தல் தானியக்கக் கருவிகள்: தமது மின்னஞ்சல் மூலமான நடவடிக்கைகளை இணையதள செயற்பாடு, மின்னஞ்சல் வாய்ப்புகள் மற்றும் சொடுக்கிகள் போன்றவற்றைக் கொண்டு தானியக்கம் செய்வதற்கு இக்கருவிகள் வணிகங்களை அனுமதிக்கின்றன.

பகுப்பாய்வு மற்றும் அறிக்கையிடற் கருவிகள் 

1. கூகிள் பகுப்பாய்வுகள்: இணையதள சந்தடி, பாவனையாளர் நடத்தை போன்றவற்றைக் கண்டறிவதற்கும் சந்தைப்படுத்தல் உத்திகளை அறிக்கையிடுவதற்கான தகவல்களைப் பகுப்பாய்வு செய்வதற்கும் இத்தளம் வணிகங்களை அனுமதிக்கின்றது.

2. சமூக ஊடகங்களைப் பகுப்பாய்வு செய்யும் கருவிகள்: வணிகங்கள் தமது சமூக ஊடகங்கள் மூலமான சந்தைப்படுத்தலின் தாக்கத்தை ஆராய்வதன் மூலம் சமூக  ஊடகங்களின் ஈடுபாட்டுக்கும் செயற்பாட்டுக்குமான உட்கிடையினை இக்கருவிகள்  வழங்குகின்றன.

3. சந்தைப்படுத்தல் தானியக்க அறிக்கையிடற் கருவிகள்: வணிகங்கள் தமது மின்னஞ்சல் உத்திகளை மேம்படுத்துவதன் மூலம் சந்தைப்படுத்தல் தானியக்க நடவடிக்கை செயற்பாட்டுக்கான உட்கிடையினை இக்கருவிகள் வழங்குகின்றன.

ஒட்டுமொத்தமாக நோக்குகையில், எண்மான சந்தைப்படுத்தற் கருவிகள் மற்றும்  தொழில்நுட்பங்கள் ஆகியன வினைத்திறன் மிக்க வகையில் எண்மான சந்தைப்படுத்தல்  உபாயங்களை நடைமுறைப்படுத்துவதில் வணிகங்களுக்குத் துணைபுரிகின்ற முக்கிய  பங்கினை ஆற்றிவருகின்றன. வணிகங்கள் இக்கருவிகளைப் பயன்படுத்தித் தமது  இணையதளங்களைத் தேடற்பொறிகளுக்குள் கொண்டுசெல்வதற்கும், இலக்குவைக்கின்ற  விளம்பர நடவடிக்கைகளைக் கொண்டு செல்வதற்கும், சமூக ஊடகங்களில்  வாடிக்கையாளர்களுடன் தொடர்பைப் பேணுவதற்கும், செயற்பாட்டுத் தகவல்களைக்  கண்டறிந்து பகுப்பாய்வு செய்வதற்கும் இவை துணைபுரிகின்றன. எண்மான  சந்தைப்படுத்தலுக்கான தளமானது தொடர்ச்சியான மாற்றத்துக்குட்பட்டுக் கொண்டிருப்பதன்  காரணமாக வணிகங்கள் தமது போட்டித் தன்மையில் நின்று நிலைப்பதற்கும் தமது  சந்தைப்படுத்தல் இலக்குகளை அடைந்துகொள்வதற்கும் இத்தகைய புதிய கருவிகளையும்  தொழில்நுட்பங்களையும் பயன்படுத்துவதற்கு நாளது வரையில் தம்மைப்  பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.


Diriya Sri Lanka
Diriya Sri Lankahttps://www.diriya.lk
Diriya.lk is a sustainability and social innovation initiative of Dialog Axiata PLC. The content available herein is aimed solely for the purposes of educating, guiding and assisting Micro, Small and Medium Enterprises (MSMEs) in navigating the challenges of the fast paced business world. As such, Dialog Axiata PLC, its staff, its officers or Directors shall not be liable for any direct, indirect, incidental, special, consequential, or punitive damages or damages for any loss of profits, revenue, business, savings or data, incurred due to the use of the content available on Diriya.lk.

Get in Touch

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

spot_imgspot_img

Related Articles

spot_img

Get in Touch

Latest Posts

X