spot_imgspot_img

தொற்றுநோயிலிருந்து உங்கள் வியாபாரத்தை முன்செல்ல எவ்வாறு பல்வகைப்படுத்துவது?

தொற்று நோயானது பல்வேறு வகையான சவால்களைக் கொண்டு வந்துள்ளது. இவ்வளவு காலத்திற்குப் பிறகு, உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான நாடுகள் இன்னும் அதன் பல தாக்கங்களுடன் போராடி வருவதை காணக்கூடியதாக உள்ளது. நீங்கள் ஒரு வியாபாரத்தை நடத்துகின்றவராக இருப்பின், அதை எவ்வாறு பல்வகைப்படுத்துவது என்பதை அறிய விரும்பினால், கீழே உள்ள விடயங்களை பின்பற்றுங்கள்.

வியாபாரத்தை மேம்படுத்த எப்போதும் அனுசரியுங்கள்

தற்போது நிலவும் சூழ்நிலையைப் பற்றி கவலைப்படுவதற்கு பதிலாக, உங்களுக்கும் உங்கள் வியாபாரத்திற்கும் கிடைக்கும் வாய்ப்புகளைப் சரிவர பயன்படுத்த முயற்சி செய்யுங்கள். அனைத்து நடவடிக்கைகளில் இணையம் ஊடாக இடம்பெறுவதால் உங்கள் வாடிக்கையாளருக்கான பூகோள தடைகள் (கற்பனை அல்லது வேறு) இனி இருக்காது. மாறிவரும் பணிச்சூழல் மற்றும் புத்தாக்கமான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம், உங்கள் குழு மிகவும் ஆக்கப்பூர்வமாக சிந்திக்கலாம். புதிய தீர்வுகளை உருவாக்கலாம். தொலைநிலைப் பணி உங்கள் வியாபாரத்திற்காக செயல்படுவதை நீங்கள் காணலாம், இது உங்கள் பணி இட செலவுகளைக் (அலுவலக வாடகை, பயன்பாட்டுக் கட்டணங்கள், எரிபொருள் கொடுப்பனவுகள்) குறைக்க நீண்ட கால வாய்ப்பை வழங்குகிறது. நீங்கள் இதுவரை ஆராயாத ஒரு துறையில் உங்கள் தயாரிப்பு அல்லது சேவைக்கான புதிய சந்தையை நீங்கள் அடையாளம் காணலாம்.

வியாபாரத்தை மேம்படுத்தும் சேவை அல்லது உற்பத்தி

புதிய வடிவத்திற்கு ஏற்ப சில மாற்றங்கள் தேவைப்படலாம். உதாரணமாக ஒரு மணி நேர வகுப்பு நேருக்கு நேர் நடைபெற்றால் நன்றாக இருக்கலாம், ஆனால் குறுகியதாக இருந்தால் இணையம் ஊடாக அதனை நடத்துவது சாலச் சிறந்தது. உங்களின் மிகவும் பிரபலமான டிஷ், டிலிவரி போன்றவற்றை சமூக ஊடகம் ஊடாக வாடிக்கையாளருக்கு அறிவிக்கலாம்.

தொடர்பாடலை உரிய முறையில் பயன்படுத்துங்கள்

உங்கள் வாடிக்கையாளர்கள், பங்குதாரர்கள், விநியோகத்தர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் பிற பங்குதாரர்களை அடைய ஒரு தகவல் தொடர்பு திட்டத்தை உருவாக்குங்கள். இந்த நேரத்தில் உங்கள் வியாபார கொள்கைகள், செயல்பாடுகளில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது அவர்களுடன் நீங்கள் பணியாற்றும் அல்லது கூட்டுப்பணியாற்றுவதற்கான புதிய வழிகள் குறித்து அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

உங்கள் ஊழியர்களுக்கு சவால் விடுங்கள்

நெருக்கடியின் மத்தியிலேயே புத்தாக்கம் பிறக்கிறது. உங்கள் பணியாளர்கள் தொடர்பாக கணித்து அவர்களை மேலும் உந்துதலாக இருக்கச் சொல்லுங்கள். ஏனென்றால் நாம் அனைவரும் இயற்கையான போட்டியாளர்கள என்பதால் எமக்கு முன்னுள்ள சவாலை ஒரு போட்டியாக மாற்றுங்கள். புத்தாக்கம் மற்றும் சவால்களை எதிர்கொள்ளவதால் கிடைக்கும் பலன்களை அவர்களுக்கு கூறுங்கள்.

நம்பிக்கையை கைவிடாமல் நேர்மறையான அணுகுமுறையைக் கொண்டிருப்பது முக்கியம். உங்கள் ஊழியர்களிடையே இதனை எடுத்துரைப்பது முக்கியம். வெள்ளிப் படலத்தை தொடர்ந்து தேடினால் அதனை கண்டறிவது நிச்சயம்.

தொற்றுநோயிலிருந்து உங்கள் வியாபாரத்தை முன்செல்ல எவ்வாறு பல்வகைப்படுத்துவது பற்றி அறிந்து கொள்ள திரிய இணையத்தளத்தைப் பார்க்கவும்.

Get in Touch

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

spot_imgspot_img

Related Articles

spot_img

Get in Touch

Latest Posts

X