படைப்பாற்றல் முற்றிலும் தனியான தொழிலாக அல்லது பொழுதுபோக்காக இருந்த காலம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? அது, இனி மேலும் இல்லை. வேகமாக நகரும் இந்த சமகால உலகில் உங்கள் போட்டியாளர்களிடமிருந்து எழுகின்ற கடினமான சவால்களை எதிர்கொள்ள, உங்கள் பணியிடத்தில் படைப்பாற்றல் மற்றும் படைப்பாற்றல் உள்ளவர்கள் தாராளமாக இருத்தல் வேண்டும். ஒரு தலைவராக, உங்களுக்குக் கீழ் பணிபுரியும் நபர்களிடம் இந்தப் பண்பை ஊக்குவிக்கிறீர்களா அல்லது அடையாளம் காண்கிறீர்களா? பதில் நிச்சயமாக ஆம் என்று இருக்க வேண்டும். இது இல்லை எனில், நவீன பணியிடங்களின் இந்த முக்கியமான அம்சத்தை நீங்கள் எவ்வாறு அணுகுகிறீர்கள் என்பதை வாசித்தறிந்து மறுபரிசீலனை செய்யவும்.
உங்கள் ஊழியர்களை சுயமாகச் சிந்திக்க இடமளித்து, கேள்விகளைக் கேட்க அவர்களுக்கு வாய்ப்பளிக்கவும்
ஊழியர்கள் பல்வேறு கண்ணோட்டங்களைத் தேடும் மற்றும் வெளிப்படையான மற்றும் எந்த விடயத்திலும் ஆர்வமுள்ள ஒரு கலாச்சாரத்தை உருவாக்குங்கள். உங்கள் நிறுவனம் வழக்கமான மற்றும் சரியான நேரத்தில் ஒன்றுகூடி சிந்தனைகளை வெளிக்கொணருவதால் நிறைய பயனடையலாம். எந்தவொரு தனிநபருக்கும் அவர்களின் சுய சந்தேகம் மற்றும் கூச்சம் மட்டுமல்ல, சிறந்த யோசனைகளும் இருக்கக்கூடும். அவர்கள் ஒவ்வொருவருக்கும் அவரவர் நிபுணத்துவத் துறையும், அவரவர் சிந்தனை முறையும் இருப்பதை ஒன்றுகூடிச் சிந்திப்பது அவர்களுக்கு புரிய வைக்கும். இது அவர்களை நிறுவனத்தின் சூழலில் முக்கியமானதாக உணர வைக்கும், இதனால் அணி மற்றும் நிறுவனத்துடனான அவர்களின் பிணைப்பை அதிகரிக்கும். இது அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என்று நீங்கள் நினைக்கவில்லையா?
பன்மைத்துவத்தை ஊக்குவிக்கவும்
இது நிச்சயமாக உங்கள் ஆட்சேர்ப்பு, தக்கவைத்தல் மற்றும் பல்வேறு பின்னணியில் உள்ள ஊழியர்களுக்கான முன்னேற்ற வாய்ப்புகளுடன் ஆரம்பிக்கிறது. இத்தகைய ஒன்றுகூடிச் சிந்திக்கும் அமர்வுகளின் போது (நிரந்தரமாக இல்லாவிட்டால்) சிரேஷ்ட முகாமைத்துவ அதிகாரிகள் தம்மை அதிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும். எந்தவொரு யோசனைக்கும் அல்லது எந்த விதமான சிந்தனைக்கும் அது சரியா அல்லது தவறா என யாரையும் அதற்கு தீர்ப்பு வழங்க அனுமதிக்காதீர்கள். அணி உறுப்பினர்கள் பலம் மற்றும் பலவீனங்கள், கண்ணோட்டங்கள், திறன்கள் மற்றும் வாழ்க்கை அனுபவங்களுடன் வெவ்வேறு பின்னணிகள் மற்றும் பல்வேறு நிலைகளில் இருந்து வருகிறார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். இந்த வகைகளில் எதிலும் உங்களுக்கு பாரபட்சம் இருக்கக்கூடாது. உங்களால் முடிந்தவரை பணிச் சுழற்சிகள் இருப்பதை எப்போதும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், ஏனென்றால் உங்கள் பணியாளர்கள் மற்றவர்களின் பாத்திரத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும், மேலும் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும், மேலும் வித்தியாசமாக இருப்பது அழகாக இருக்கிறது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
குறிப்பு: எவ்வாறாயினும், பன்மைத்துவம் என்பது மிகவும் பரந்த பகுதியாகும், மேலும் இது புத்தாக்க கலாச்சாரத்தை வளர்ப்பதை விட நிறைய வழிகளில் உதவும். இலங்கைச் சூழலில், அனைவருக்கும் சிறந்த பணியிடத்தை எவ்வாறு உருவாக்குவது என்பதை அறிய, World University Service of Canada (WUSC) – Sri Lanka தயாரித்த Diversity and Inclusion Toolkit ஐப் பார்க்கவும்.
புத்தாக்கமான சிந்தனைக்கு ஆதரவாக இருங்கள் மற்றும் வெகுமதி அளியுங்கள்
நீங்கள் பணிபுரியும் சூழல் புத்தாக்கங்கள் மற்றும் ஆக்கப்பூர்வமான சிந்தனையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? எனவே, உங்கள் அணி புத்தாக்கமானதாக இருக்கும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என்றால், எப்போதும் புத்தாக்கங்களுக்கு வெகுமதி அளிக்கவும், பாராட்டவும் மற்றும் ஊக்குவிக்கவும். இவை புத்தாக்கமான விற்பனை உத்திகள் அல்லது அதுபோன்ற வணிக மேம்பாடுகளுக்கு மட்டுப்படுத்தப்பட வேண்டியதில்லை. அன்றாட பணிச்சூழலில் வாழ்க்கையை எளிதாக்கும் எந்தவொரு புத்தாக்கமான செயலும் பாராட்டப்பட வேண்டும், இது அவர்களை அடிக்கடி அவற்றைச் செய்வதற்கு ஊக்குவிக்கும்.
அவர்களின் அறிவை வளரச் செய்யுங்கள்
உங்கள் ஊழியர்களுக்கு நிறைய விடயங்களைப் பற்றி அறிவூட்டலாம். முதலாவதாக, நிறுவனம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை அவர்கள் அறிந்துகொள்வது இன்றியமையாதது. உங்கள் பணியாளர்களுக்கு நிறுவனத்தின் அறிவுத் தளத்தை மேம்படுத்தவும் அதிகரிக்கவும் உதவுவது அவர்களுக்கு மாற்றுத் தீர்வுகளை உருவாக்க, புத்தாக்கத்தை வெளிக்கொணர மற்றும் கற்பனை செய்ய உதவும். நிறுவனத்தைப் பற்றி மட்டுமல்ல, அவர்கள் பணிபுரியும் துறையில், உலகின் புதிய போக்குகள் மற்றும் அவர்களின் பொது அறிவு மற்றும் மாறிவரும் உலகத்திற்குத் தேவையான பிற திறன்களைப் பற்றி அவர்கள் தமது அறிவைப் புதுப்பிக்க வேண்டும். உங்களது தொழில் தொடர்பான வலைப்பதிவுகள், Diriya.lk போன்ற இணையத்தளங்கள் மற்றும் வணிக இதழ்கள் போன்றவற்றை முடிந்தவரை வாசித்து அறிந்து கொள்ளவும், பின்பற்றவும் உங்கள் பணியாளர்களை ஊக்குவிக்கவும். முடிந்தால், LinkedIn Learning, Udemy, Coursera மற்றும் Guru.lk போன்ற மின்-கற்றல் இணையதளங்களில் கிடைக்கும் (பெரும்பாலும் இலவசம்) ஒன்லைன் பாடநெறிகளைப் பின்பற்ற அவர்களை. ஊக்குவியுங்கள். உங்கள் ஊழியர்களின் அறிவு மற்றும் புரிதல் அவர்களின் சொந்த பணிகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படாமல், அவர்கள் தங்கள் சக ஊழியர்களின் பணியைப் புரிந்துகொள்வதும் முக்கியம்.
இதெல்லாம் பெரிய விடயமாகத் தெரிகிறதா?
நீங்கள் எப்பொழுதும் செயல்படும் விதத்தில் நீங்கள் தொடர்ந்து பணியாற்றும்போது, அபாயங்களை கையில் எடுக்கவும், பணிகளைச் செய்வதற்கான புதிய வழிகளைக் கண்டறியவும் வாய்ப்பு இல்லை, இது பணியிடத்தில் படைப்பாற்றல் சாத்தியத்தை இல்லாமல் போகச் செய்கிறது. எனவே, இந்த உதவிக்குறிப்புகளைப் பழக்கப்படுத்துவது உங்களுக்கு எவ்வளவு கடினமாக இருந்தாலும், உங்கள் நிறுவனம் தளைத்தோங்கும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என்றால், அதைப் பின்பற்றுவது ஒரு சிறந்த நடைமுறையாகும்.