spot_imgspot_img

குடும்ப வணிகம் மற்றும் தொடர்புடைய பிரச்சினைகள்

குடும்ப வணிகம் என்பது வணிகத்தின் பழமையான வடிவங்களில் ஒன்றாகும். இது ஒரு குடும்பத்தின் உறுப்பினர்களுடன் தொடர்புபட்டது, எனவே இது இரண்டு நிறுவனங்களின் குறுக்குவெட்டாக, ஸ்தாபக/உரிமையைக் கொண்டுள்ள குடும்பம் மற்றும் வணிகம் ஆகியவற்றைக் கொண்டது. பங்குதாரர்கள், முகாமையாளர்கள், பணிப்பாளர் சபை அங்கத்தவர்கள், ஆலோசகர்கள் மற்றும் ஊழியர்களின் பாத்திரங்களை வகிக்கும் உரிமை, வாழ்க்கைத் துணைகள், பிள்ளைகள், பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் போன்ற குடும்ப உறுப்பினர்களிடம் பெரும்பாலாக உள்ளது.

குடும்ப வணிகங்களின் உரிமையாளர்கள் வழக்கமாக பல தசாப்தங்களாக உரிமையை தலைமுறையிலிருந்து தலைமுறைக்கு கைமாற்றம் செய்கிறார்கள். இது ஒரு ஆசீர்வாதமாக இருக்கலாம். ஏனெனில் இது அத்தகைய குடும்பங்களை அன்றாட வாழ்க்கையில் நெருக்கமாகப் பிணைக்கின்றது. மற்ற வணிகங்களை விட குடும்ப வணிகங்கள் மிகவும் நெகிழ்திறன் கொண்டவை என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. வணிகத்தை கட்டியெழுப்பவும், அதை அவர்கள் பெற்றுக் கொண்ட நிலைமையை விட சிறந்த நிலையில் அடுத்த தலைமுறைக்கு கைமாற்றம் செய்யவும் உரிமையாளர்கள் உறுதியுடன் இருப்பதால் இது நிகழ்கிறது. இத்தகைய நிகழ்வுகள் பாரம்பரியம் மற்றும் மாற்றத்தின் சரியான கலவையாகும். இருப்பினும், குடும்ப வணிகங்கள் சிக்கல்களிலிருந்து விடுபடவில்லை. குடும்ப வணிகங்களில் பொதுவான சில சவால்கள் இங்கே தரப்பட்டுள்ளன.

உறவுமுறை குற்றச்சாட்டுகள்

Image by John Hain from Pixabay

குடும்ப வணிகங்களில், பெரும்பாலான நேரங்களில் குடும்ப உறுப்பினர்களுக்கு உரிமையாளருடனான உறவின் அடிப்படையில் பணிப் பதவிகள் வழங்கப்படுகின்றன. குடும்பம் அல்லாதவர்களை பணிக்கு அமர்த்தும் அத்தகைய நிறுவனங்களில், அவர்கள் ‘குடும்ப வாரிசுகள்’ மீது தங்கள் திறமைகளை நிரூபிக்க வேண்டிய அவசியத்தை தொடர்ந்து உணர்கிறார்கள். அவ்வாறு இல்லையெனில் அவர்கள் தங்களுக்கு தகுதியுடையதாக கருதும் பதவி உயர்வு அல்லது வரப்பிரசாதங்களை அத்தகைய வாரிசுகளின் செல்வாக்கினால் கிடைக்காது போகலாம் என்று அச்சப்படுவார்கள். இது நிகழாமல் தடுக்க, உரிமையாளர்கள் குடும்ப உறுப்பினர்கள் அல்லாதவர்கள் தொடர்பில் நியாயமான கொள்கைகளைச் செயல்படுத்த வேண்டும். குடும்ப அங்கத்தினர்கள் தலைமைப் பதவிக்கு நேரடியாக அமர்த்தப்படாமல், ஒரு முறையான திட்டத்துடன் வணிகத்தில் படிப்படியாக அறிமுகப்படுத்தப்படுவதும், அவர்கள் வளரும்போது தங்களை நிரூபிக்கச் செய்வதும் முக்கியம். புதிய குடும்ப உறுப்பினர்கள் வணிகக் களம் மற்றும் ஏற்கனவே உள்ள பணியாளர்களைப் பற்றிய சிறந்த புரிதலுடன் வணிகத்தில் இணைவதும் முக்கியம்.

வாரிசு சிக்கல்கள்

Image by mohamed Hassan from Pixabay 

“நிறுவனத்தை அடுத்து யார் கைப்பற்றப் போகிறார்கள்?” 

கூடிய விரைவில் இது தொடர்பில் முடிவெடுப்பது, வாரிசுகளை சீர்படுத்துவதற்கு அதிக நேரத்தையும் இடத்தையும் விட்டுச்செல்கிறது. இது நிறுவனத்திற்குள் உள்ள கலாச்சாரம் மற்றும் செயல்முறைகளை அனுபவிப்பதற்கான வெளிப்பாட்டைக் கொடுப்பதுடன், ஒரு சுமூகமான கைமாற்றத்தை உறுதி செய்யும். இருப்பினும், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அல்லாதவர்கள் பிணக்குகளை சந்திக்க நேரிடும்.

“நீங்கள் குடும்பத்திற்கு முதலிடம் கொடுக்கப் போகிறீர்களா?”
“வாரிசு என்பது குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டும் தானா?”
“குடும்ப உறுப்பினர் அல்லாதவர்களின் தகுதிகள் மற்றும் அனுபவத்தின் மீது என்ன மதிப்பு செலுத்தப்படுகிறது?”

இந்தப் பிரச்சினைகளை நாம் எவ்வாறு கையாள்வது? இங்கே சில உதவிக்குறிப்புகள் தரப்பட்டுள்ளன.

  • நிதானமான மற்றும் இடையூறு இல்லாத சூழலில் அனைத்து விடயங்களையும் கலந்துரையாடவும், ஏற்றுக்கொள்ளவும் குடும்பரீதியாக தீர்மானிக்கவும்;
  • கூடிய விரைவில் புதிய தலைமுறையை இதற்கு தயார்படுத்துங்கள்;
  • நடுநிலையான களத்தில் கூட்டத்தை நடத்துங்கள்;

உணர்ச்சிபூர்வமான தீர்மானங்களிலிருந்து வணிகத்தைத் தள்ளிவைத்தல்

குடும்ப வணிகத்திலிருந்து குடும்ப உறவுகளைத் தள்ளிவைப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது, இது எதிர்மறையான மற்றும் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். உதாரணமாக, உங்கள் குடும்ப உறுப்பினர் ஒரு சவாலான சூழ்நிலைக்கு முகங்கொடுத்தால், அவருக்கு வேலையில் அதிக நெகிழ்வுத்தன்மையைக் கொடுப்பதை நீங்கள் பரிசீலிக்கலாம். இது தொழில்முறை தீர்மானங்களைப் பாதிக்கக்கூடும். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தால், அவர்கள் விடுமுறையைக் களிக்கும் போதோ அல்லது இரவு உணவு மேசையில் கூட ஒருவருக்கொருவர் முரண்படக்கூடும். நீங்கள் ஒரு குடும்ப வணிகத்தை சொந்தமாக வைத்திருந்தால், வேலை நேரத்தில் உணர்வுபூர்வமான பிணைப்புகளை தள்ளி வைப்பதன் முக்கியத்துவத்தை நீங்கள் உணர வேண்டும். அத்துடன், குடும்பத்துடன் செலவளிக்கும் நேரத்தில் வேலையைப் பற்றி கலந்துரையாடாமல் இருக்க வேண்டும்.

குடும்ப வணிகங்கள் நுண், சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் துறையின் அடித்தளமாக உள்ளன. மேலும் உலகின் பல பெரிய நிறுவனங்கள் இந்த வகையில் தொடங்கப்பட்டன, மேலும் சில இன்னமும் குடும்ப வணிகங்களாகவே உள்ளன. அவை எவ்வளவு முக்கியமானவை மற்றும் இன்றியமையாதவை என்பதையும், இந்த வணிகங்கள் வழங்கக்கூடிய வளர்ச்சி வாய்ப்புத் திறனையும் இது காண்பிக்கிறது. குடும்ப உறவுகளை நிர்வகித்தல், குடும்பம் அல்லாத உறுப்பினர்களின் திறமைகளுக்கு நியாயமான மதிப்பளித்தல் மற்றும் வணிகத்திற்கு எது சிறந்தது என்பதில் கவனம் செலுத்துதல், அனைத்து தரப்பினரிடமும் மிகுந்த அனுதாபத்துடன் ஈடுபடுதல் – இவை அனைத்தும் இந்த வணிகங்கள் செழிக்க உதவும்.

Get in Touch

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

spot_imgspot_img

Related Articles

spot_img

Get in Touch

Latest Posts

X