இலங்கையர்கள் பரிசுகளை வழங்க விரும்புவதனால் அதனை பொதி செய்வதானது உங்களது பரிசு தொடர்பிலான முதல் அபிப்பிராயத்தினை வழங்குகின்றது. இந்த நிலையில் நீங்கள் பொதி செய்தல் முறை மூலம் எந்த வகையான முதல் அபிப்பிராயத்தினை உருவாக்க முயல்கின்றீர்கள்? நாம் இங்கே பொதி செய்தலில் மாற்றங்கள் உருவாக்க கூடிய சில முன்நடைமுறைகள் சில குறித்து இங்கே பார்வையிடுவோம்.
உங்கள் இலக்குப் பார்வையாளர்கள் பற்றி தெரிந்து வைத்தல்
நாங்கள் கூற வரும் விடயம் சற்று விநோதமாக இருக்கலாம், ஆனால் ஓரு வியாபாரத்திற்கு அதன் இலக்கு பார்வையாளர்களையும் (அல்லது வாடிக்கையாளர்கள்) குறித்து அறிந்து வைத்திருப்பது மிக முக்கியமானதாககும்.
வயது: பொதுவாக இளவயதினர் வண்ணமயமான வடிவமைப்புக்களில் ஈடுபாடு கொண்டவர்களாகவும், ஏனைய வயதுப்பிரிவினர் பழைமைசார் (Classic) வடிவமைப்புக்களையும் விரும்பலாம். எனவே உங்களது தயாரிப்பின் இலக்குப் பார்வையாளர்கள் யார்?
- ஈர்ப்பு: வடிவமைப்புக்கள் அவர்களது பொழுதுபோக்கு மற்றும் விருப்பத்திற்கு ஒன்றிணைந்ததாக அமைய வேண்டும்.
- பெறுமதிகள்: நம்பிக்கை, நிலைபேறுதன்மை மற்றும் ஏனைய நெறிசார் நடைமுறைகளுடன் (Ethical Practices) தொடர்புடைய விடயங்களை இணைக்கவும்.
சிறந்த பொதியமைப்பின் முக்கிய கூறுகள்
- எளிமை: வடிவமைப்பினை தெளிவாகவும், சீரானதாகவும் வைப்பதோடு, அதிக தகவல் வழங்கி இலக்குப் பார்வையாளர்களின் கவனத்தினை சிதறடிப்பதனை தவிர்க்கவும். .
- தெளிவு: உற்பத்தியானது இலகுவில் அடையாளம் கண்டு கொள்ள முடியுமானதாகவும், கூறவரும் செய்தி (Brand Message) தெளிவாக இருப்பதனையும் உறுதிப்படுத்தல்.
- காட்சி தோற்றம் (Visual Appeal): உங்கள் உற்பத்தியின் விவரணத்தினை காட்டும் உயர்தர காட்சிப் படங்கள் அல்லது விளக்கப்படங்களைப் பயன்படுத்தவும். படைப்பாற்றலை உபயோகப்படுத்துங்கள் அது உங்கள் உற்பத்திற்கான புதிய இரசிகர்களை உருவாக்குவதற்கான வாய்ப்பாகும். பொதிசெய்தல் தொடர்பிலான உணர்வினை கண்டறிவதோடு, உயர்தரமிக்க வடிவமைப்பினை வழங்குங்கள்.
- செயற்திறன் (Functionality): பொதி செய்தலானது நடைமுறை சாத்தியத்தில் இலகுவாக திறக்கவும் மற்றும் மூடவும் இருப்பதனையும் உறுதி செய்ய வேண்டும். அது திறக்கும் போது அது கிழியும் வகையிலோ அல்லது பாழாகவோ கூடாது. அது உணவு போன்ற ஒரு உற்பத்தி எனின் தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கவும்.
மேலதிக குறிப்புக்கள்:
- வண்ண உளவியல்: குறிப்பிட்ட உணர்வுகளை வெளிப்படுத்தும் வண்ணங்களை தெரிவு செய்ய வேண்டும். உதாரணமாக நீல வர்ணம் நம்பிக்கை மற்றும் நம்பகத்தன்மை என்பவற்றினை தூண்டும்.
- எழுத்து அலங்காரம் (Typography): பொருத்தமிக்க வாசிக்க இலகுவாக இருக்கும் எழுத்துரு (Font) ஒன்றிணை தெரிவு செய்ய வேண்டும்
- வியாபார நாமத்தின் சீர்தன்மை (Branding Consistency): பொதி செய்தலின் அனைத்து மூலங்களிலும், வியாபாரநாமத்தின் அடையாளத்தினை தொடர்ச்சியாக வெளிப்படுத்தல்
- நிலைபேறுதன்மை: கழிவினைக் குறைக்கும் வகையிலான சூழலுக்கு தீங்கு விளைவிக்காத உற்பத்தி மூலப் பொருட்களை தெரிவு செய்தல். அது இன்றைய நாட்களில் சிறந்த செய்தியினை வெளிப்படுத்தும்
வினைத்திறன் கொண்ட பொதி செய்தலுக்கான உதாரணங்கள்
- ● வடிவமைப்பு குறைந்த பெட்டிகள் (Minimalist Boxes): எளிமையான, தெளிவான வடிமைப்புக்களை நோக்காகக் கொண்ட உயர்ரக மூலப்பொருட்கள் மற்றும் எழுத்து அலங்காரம்
- ● கைப்பணி காகிதப் பைகள் (Kraft Paper Bags): பிரத்தியேக பெயர்கள் மற்றும் அடையாளங்கள் கொண்ட பழமை முறை
- ● கண்ணாடி குவளைகள் (Glass Jars): உணவுப் பொருட்களுக்கான, பழமை பொருந்திய பொருட்களுக்கான சிறந்த முறை
- ● Tissue காகிதம்: மேலதிக பெறுமதியோடு, உற்பத்திகளுக்கு பாதுகாப்பினையும் வழங்கும்.
பொதி செய்தலின் இலக்காக அமைவது உற்பத்திகளை பாதுகாப்பதோடு மட்டுமின்றி, உங்களது இலக்குப் பார்வையாளர்கள் உங்களது உற்பத்தி பற்றி பார்வையாளர்களுக்கு முதல் அபிப்பிராயம் ஒன்றினை உருவாக்குவதுமாகும். இந்த விடயங்களை பரிசீலணை செய்வதன் மூலம் உங்களது செய்தியினை பாரியளவில் இருக்கும் குழுவொன்றுக்கு குறிப்பிட முடியும்.
இந்த விடயங்களை முயற்சி செய்து, உங்களது பின்னூட்டங்களை வழங்குங்கள். உங்களது வெற்றி எங்களது வெற்றியாகும்!