குடும்ப வணிக நிர்வாகம் என்பது இரண்டு பரந்த பகுதிகளை உள்ளடக்கிய ஒரு விடயம் – குடும்பத்தின் நிர்வாகம் மற்றும் வணிகத்தின் நிர்வாகம். ஒரு குடும்ப வணிகத்தின் ஆரம்ப கட்டங்களில் தொழில்முயற்சியாளர் கட்டமைப்பு நன்றாக தொழிற்பட்டாலும், நிறுவனம் விரிவடையும் போது, அது மிகவும் முறைசார்ந்த கட்டமைப்பைப் பின்பற்ற வேண்டும்.
Harvard Business School அறிமுகப்படுத்திய குடும்ப வணிக அமைப்பின் மூன்று-வட்ட கட்டமைப்பானது (Three-Circle Model of the Family Business System) குடும்ப வணிகத்தின் நிலைபேற்றை மையமாகக் கொண்ட ஒரு கட்டமைப்பாக பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இது குடும்ப வணிகத்தில் மூன்று ஒன்றுக்கொன்று சார்ந்த கட்டமைப்புகளைக் குறிக்கிறது – குடும்பம், உரிமையாண்மை மற்றும் வணிகம்.
பெரும்பாலான குடும்பங்கள் குடும்ப வணிகச் சிக்கல்களை (உ.ம்.: குடும்ப நியாயபூர்வம், வாரிசுச் சிக்கல்கள் போன்றவை) முறைசார் வழிமுறையில் கலந்தாலோசிக்க வேண்டிய அவசியத்தைக் காண்கின்றனர். இதற்கு மிகவும் பொருத்தமான இடங்கள் குடும்ப ஆலோசனை மையங்கள், குடும்ப ஓய்விடங்கள் மற்றும் குடும்ப சந்திப்புகள் என அடையாளம் காணப்படுகின்றன.
குடும்ப ஆலோசனை மையம் என்பது ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட, சுயமாக-ஆளப்படும் குழுவாகும். இது ஒரு வணிகம் எதிர்கொள்ளும் சிக்கலான பிரச்சினைகளை, குறிப்பாக, கொள்கை மற்றும் திட்டமிடல் சார்ந்த சிக்கல்களைக் கருத்தில் கொள்கிறது. இது குடும்ப வணிகத்தின் வளர்ச்சி மற்றும் பொதுவான விழுமியங்களுக்கு அணுசரனையளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது பணிப்பாளர் சபை அங்கத்தவர்களிடமிருந்து வேறாக இயக்கப்படுகிறது. இது நிறுவனத்தின் பங்குதாரர் கூட்டங்களுடன் எந்த தொடர்பும் அற்றது. குடும்ப ஆலோசனை மையத்தின் செயல்பாடுகள் பின்வருமாறு:
- குடும்ப உறுப்பினர்கள் வணிகத்தில் எப்படி நுழைகிறார்கள் என்பதைத் தீர்மானித்தல்
- குடும்ப நியாயபூர்வத்தை உறுதி செய்தல்
- குடும்ப வரலாற்றை ஆவணப்படுத்துதல்
குடும்ப சந்திப்புக்கள் என்பது குடும்பத்தின் நிலை மற்றும் அதன் வணிகம் பற்றிய விபரங்களை குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கும் முறைசார் கூட்டங்கள் ஆகும். குடும்பம் மற்றும் வணிகம் இரண்டிலும் உள்ள பிரச்சினைகளை ஆக்கபூர்வமாக விவாதிக்க இது ஒரு சிறந்த களமாகும்.
வீட்டுக்கு வெளியேயுள்ள இடங்களில் சில நாட்கள் பொழுதைப் போக்கும் வகையில் குடும்ப ஓய்வுகள் இடம்பெறுகின்றன. ‘பின்வாங்குதல்’ என்பது இலத்தீன் வினைச்சொல்லில் இருந்து வந்தது, அதாவது “பின் இழுப்பது” என்பதாகும். இது குடும்ப உறுப்பினர்கள் தங்களின் பேதங்களை நீக்கி, அதிக விசாலமான இடத்தில் நேரத்தை செலவிட்டு மற்றும் உத்வேகம் பெறுவதற்கான சூழ்நிலையை உருவாக்குகிறது. இது அனைத்து கவனச்சிதறல்களிலிருந்தும் விடுபட்டு சிறந்த நேரத்தைப் பெறவும், குடும்பம் மற்றும் வணிகத்தில் உள்ள பிரச்சனைகளில் கவனம் செலுத்தவும் இடமளிக்கிறது.
மேற்கூறியவற்றைத் தவிர, ஆலோசகர்கள் சபை மற்றும் தொழில்சார் நிபுணத்துவ முகாமைத்துவம் ஆகியவை குடும்ப வணிகத்தின் செயல்திறன் மற்றும் ஸ்தானத்தை மேம்படுத்துவதற்கான இரண்டு வழிகளாகும்.
ஆலோசகர் சபை
ஒரு வணிகத்தின் ஆரம்ப கட்டங்களில், உரிமையாளர் நிறுவனத்தின் அனைத்து அம்சங்களையும் கையாளலாம். இருப்பினும், அது வளரும்போது, நிபுணத்துவ அறிவு / கருத்தைப் பயன்படுத்துவது முக்கியம். ஆலோசகர் சபை அதைச் செய்வதற்கான ஒரு வழியாகும். பெரும்பாலான குடும்ப வணிக உரிமையாளர்கள் இது நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் மாற்றத்தின் சிறந்த படியாக கருதுகின்றனர்.
தொழில்முறை முகாமைத்துவம்
சில சமயங்களில், நிறுவனத்தின் படிநிலையில் உச்சம் வகிக்கும் குடும்ப உறுப்பினர்கள் தகுதி இல்லாதவர்களாகவோ, துறைசார் அறிவு அற்றவர்களாகவோ அல்லது வணிக கலந்துரையாடல்களில் ஆர்வம் காட்டாதவர்களாகவோ இருக்கலாம். இது அவர்களின் கல்வி மற்றும் தொழில்முறை நிபுணத்துவத்தை நிறுவனத்திற்குள் உட்கொண்டு வரும் வகையில் தொழில்சார் நிபுணர்களை பணியமர்த்துவதன் முக்கியத்துவத்தை ஏற்படுத்துகிறது. அவை நிறுவனத்தின் ஒட்டுமொத்த செயல்திறனை அதிகரிக்கவும், வணிகத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் இடையேயான உறவுப்பாலத்தை நிர்வகிப்பதற்கான சிறந்த வழியாகவும் உதவும். இந்த வகிபாகம் “முகாமைத்துவப் பாலம்” என்று அழைக்கப்படுகிறது.
ஒரு வலுவான குடும்ப ஆட்சி அளவுகோலை உருவாக்கும் செயல்முறைக்கு நிறைய பொறுமை மற்றும் விடாமுயற்சி தேவைப்படுகிறது. ஆனால் இது நீண்ட கால அடிப்படையில் குடும்பம் மற்றும் வணிகம் ஆகிய இரண்டிற்கும் பலனளிக்கும் விளைவை உருவாக்குகிறது. குடும்ப நிர்வாகத்தைப் பற்றிய கூடுதல் தகவலுக்கு, IFC Family Business Governance Handbook குடும்ப வணிக நிர்வாகக் கையேட்டைப் பார்க்கவும்.