பொருளாதார பேரழிவுகள் எதிர்பாராமல் (நிறுவனங்களை) தாக்க முடியும், இதனால் பல்வேறு தொழிற்துறைகளின் வியாபாரங்கள் கணிசமான அளவில் பாதிக்கப்படுகின்றன. எனினும் குழப்பங்கள் இருந்த போதும் புத்தாக்கம் மற்றும் இசைவாகும் தன்மை கொண்ட வியாபாரங்கள் தப்பி பிழைத்திருப்பதோடு, குறித்த வியாபாரங்கள் இக்கட்டான நிலையினைத் தாண்டி செழித்தோங்கி இருந்ததனையும் வரலாறு காட்டுகின்றது. பொருளாதார நெருக்கடி உருவாகிய சந்தர்ப்பங்களில் துன்பங்களையும், இக்கட்டான நிலைகளையும் ஒரு வாய்ப்பாக மாற்றிய வியாபாரங்களினது வெற்றிக் கதைகளை இந்தக் கட்டுரையில் நாம் ஆராய்வோம். குறிப்பாக நாம் குறிப்பிட்ட வியாபாரங்கள் செழித்தோங்க எவ்வகையான உத்திகள் உதவியது என்பதனையும், வியாபாரங்கள் பொருளாதார மந்த நிலை ஒன்று ஏற்படும் போது சிக்கல் ஒன்றில் இருந்து தம்மை மீளக்கட்டமைத்துக் கொள்ள உபயோகம் செய்ய வேண்டிய வினைத்திறனான படிமுறைகள் பற்றியும் பார்ப்போம்.
நெகிழ்வுத்தன்மையினை உருவாக்குவதோடு (சந்தை மாற்றங்கள் தொடர்பில்) விழிப்பாக (Agile) இருத்தல்: பொருளாதார பேரழிவுகளின் போது, மாறிவரும் சந்தை நிலைமைகளுக்கு ஏற்ப விரைவாக மாறும் வியாபாரங்கள் பெரும்பாலும் வெற்றியாளர்களாக உருவெடுக்கின்றன. சந்தை நிலைமைகள் குறித்து விழிப்பாக இருக்கும் நிறுவனங்கள் தங்கள் வியாபார மாதிரிகளை மீள மதிப்பீடு செய்வதோடு, செயற்பாடுகளைச் சீராக்கி சந்தையில் மீண்டும் போட்டியிட வளங்களை மேம்படுத்துகின்றன. உதாரணமாக Airbnb மற்றும் Uber போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் பாரம்பரிய தொழில்களை சீர்குலைத்த 2008ஆம் ஆண்டு பொருளாதார மந்தநிலையின் போது பங்கீட்டுப் பொருளாதாரம் ஊடாக மூலதனம் பெற்றிருந்தன. மாற்றமடையும் நுகர்வோர் தேவைகளை பூர்த்தி செய்யும் அவர்களின் ஆற்றல், மற்றைய வியாபாரங்கள் பின்னடைவுக்கு உள்ளான இடங்களில் வெற்றி பெற உதவியது.
புத்தாக்கம் மற்றும் படைப்பாற்றலை ஊக்குவித்தல்: நெருக்கடியான நிலைகளில், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் படைப்பாற்றலை வளர்த்தெடுப்பது வியாபாரங்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். ஊழியர்களை தமது வியாபார தலைப்பிற்கு வெளியே சிந்திக்க ஊக்குவிப்பதும், புதிய தீர்வுகளைக் கண்டறிவதும் குறிப்பிட்ட தொழில்துறையில் மாற்றத்தை ஏற்படுத்தும். General Electric போன்ற நிறுவனங்கள் பொருளாதார மந்த நிலையின் போது மீளப்புதுப்பிக்கத்தக்க சக்தி மூலங்களின் முதலீடு செய்ததன் மூலம் புதிய வளர்ச்சி வாய்ப்புகளை கண்டுபிடித்திருந்தன. இந்த உத்தியானது மேற்குறிப்பிட்ட நிறுவனத்தினை விஸ்தீரனப்படுத்தியதோடு மாத்திரமின்றி குறித்த நிறுவனம், வளர்ந்து வரும் பசுமைப் பொருளாதாரத்தில் (Green Economy) அவர்களை முன்னணி பெற காரணமாகியது.
வருவாய் வழிகளை பன்முகப்படுத்துதல்:ஒரு வருவாய் வழியினை மாத்திரம் நம்பியிருக்கும் வியாபாரங்கள் பொருளாதார அதிர்ச்சிகளினால் நிலைகுலைய முடியும். எனவே இந்த விடயத்தினை சீராக்க வருமான மூலாதாரங்களை பன்முகப்படுத்த வேண்டும். இவ்வாறு வருமான வழிகளை பன்முகப்படுத்துவது சரிவுகளை சமாளிப்பதற்கு உதவியாக இருக்கும். உதாரணமாக நவநாகரீகத்துறை வியாபாரங்கள் (Fashion Retailers) கொவிட்-19 வைரஸ் தொற்று ஏற்பட்ட காலத்தில் தங்கள் ஒன்லைன் இருப்பை விரிவுபடுத்தி இருந்ததோடு, சர்வதேச சந்தைகள் குறித்தும் ஆய்வு செய்திருந்தன.
தொழில்நுட்ப விடயங்கள், டிஜிட்டல் மாற்றங்கள் என்பவற்றினைப் பயன்படுத்துதல்: பொருளாதார இடர்களை எதிர்கொள்வதில் தொழில்நுட்ப முன்னேற்றம் முக்கிய பங்கு வகிக்கின்றது. டிஜிட்டல் உலகில் நடைபெறும் மாற்றங்களை எதிர் கொள்ளும் வியாபாரங்கள், தமது வியாபார வினைத்திறனை அதிகரித்து விரிவான வாடிக்கையாளர் தொகுதி ஒன்றை அடைவதன் மூலம், புதிய வருவாய் வழிகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
கொவிட்-19 வைரஸ் Remote Work இல் எழுச்சி ஒன்றை ஏற்படுத்தியதோடு, நிறுவனங்கள் டிஜிட்டல் கருவிகளை தேர்ந்தெடுக்கும் நிலை ஒன்றை தோற்றுவித்தது. அத்தோடு, Virtual வேலைச் சூழலுக்கு ஏற்ப தங்களை இசைவாக்கி கொள்ள தூண்டியிருந்தது.
பொருளாதார பேரிழப்புக்கள் பெரும் சவால்களை உருவாக்குகின்றன. ஆனால் அவை வியாபாரங்கள் புதிய விடயங்களை புகுத்துவதற்கும், வியாபாரங்கள் வளர்வதற்கும் வாய்ப்புகளை தோற்றுவிக்கின்றன. மாற்றமடையும் சந்தைகள் குறித்து விழிப்பாக இருப்பதும், படைப்பாற்றலை ஊக்குவிப்பதும், வருவாய் வழிகளைப் பன்முகப்படுத்துவதும், புதிய தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்துவதும், வியாபாரங்கள் சவால்களை கடப்பதற்கு உதவுவதோடு மட்டுமின்றி, வியாபாரங்கள் நெருக்கடியான காலங்களில் செழித்தோங்கவும் உதவுகின்றது. ஏனைய வியாபாரங்களின் வெற்றிகளில் இருந்து கற்றுக் கொள்வதன் மூலம், நிறுவனங்கள் நெகிழ்வான மற்றும் வளமான எதிர்காலத்தினைப் பெற்றுக் கொள்ள முடியும்.
Content Provided by Content Commune – the.content.commune@gmail.com