அநேகர் தற்செயலான சந்திப்புகள் அல்லது தனிப்பட்ட தொடர்பாடல்கள் மூலம்; ஏற்றுமதி சந்தைகளைக் கண்டறிகின்றனர். ஆனால் இவற்றை கண்டறிவதில் இதனை விட நிறைய விடயங்கள் உள்ளன. உங்கள் வழியில் வரும் முதல் வாய்ப்பைப் பெற முன்னர், நீங்கள் அது தொடர்பாக ஆராய்ச்சிகளைப் மேற்கொள்வது அவசியமாகின்றது. சந்தைகளை ஒப்பிட்டுப் பார்க்கவும், சந்தை அணுகலைச் சரிபார்க்கவும், போட்டியாளர்களை அறிந்து பகுப்பாய்வு செய்வதற்கும் நேரம் ஒதுக்குங்கள். இந்த செயற்பாடானது, உங்களுக்கான வெற்றி வாய்ப்பு அதிகமுள்ள சந்தைகளைத் தேர்ந்தெடுக்க உதவும். உங்களுக்கான சரியான ஏற்றுமதி சந்தைகளை கண்டறியும் சில வழிகள் கீழே தரப்பட்டுள்ளன.
ஏற்றுமதி சந்தைகளை இலக்காகக் கொண்டு இலாபம் பற்றிய ஆய்வுகள்
ஏற்றுமதி செய்யும் நாடு அல்லது நாடுகளை தீர்மானிக்கும் போது மற்றொரு முக்கியமான காரணியாக விளங்குவது, நாட்டில் உற்பத்திக்கான சரியான விலையை கண்டறிவதாகும். இது நியாயமானதாக இருக்க வேண்டும் என்பதுடன் போட்டித்தன்மை கொண்டதாகவும் இருத்தல் வேண்டும். ஏற்றுமதியாளர்கள் உற்பத்திக்கான கேள்வி மற்றும் வாடிக்கையாளருக்கு செலுத்த வேண்டிய விலை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டும். அலகொன்றின் விற்பனை விலைக்கு மேலதிகமாக இன்னும் அதிக ஆரம்ப உற்பத்தி விலை மற்றும் இலாபத்தை தீர்மானிக்கும் என கவனத்தில் கொள்ளுங்கள். விற்பனையின் அளவு, தூரம், தளவாடங்கள், கட்டணங்கள், ஏற்றும் செலவுகள் போன்றவை இதில் அடங்கும். விலை நிர்ணயம், ஏற்றுமதியாளர்கள் தாங்கள் ஏற்றுமதி செய்யக்கூடிய பொருளின் அளவு மற்றும் சந்தையிலிருந்து அதன் வருமானம் ஆகியவற்றைப் பற்றிய தெளிவான புரிதலைப் பெற உதவும்.
நிலவும் கேள்வி எத்தகையது?
அனைத்து தொழில்களிலும் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களை பயன்படுத்தப்படும் நாடுகளின் புள்ளிவிவரங்களில் கவனம் செலுத்த வேண்டும். உதாரணமாக, எஃகுக்கான மூலப்பொருளை ஏற்றுமதி செய்யும் வியாபாரத்திற்கு, புதிய எஃகு ஆலைகளை உருவாக்கும் அல்லது பாரிய செயற்பாட்டு எஃகு ஆலைகளைக் கொண்ட நாடுகளின் புள்ளிவிவரங்கள் மற்றும் மூலப்பொருட்களின் தேவை ஆகியவற்றில் கவனம் செலுத்துவது மிக முக்கியமாகும். ஏற்றுமதி செய்வதற்கான சரியான சந்தையானது தடையற்ற இணைப்பை வழங்குகிறது. அதுதவிர ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கும் போதுமான அளவு அந்நிய செலாவணி இருத்தல் மிக முக்கியமாகும்.
வர்த்தக தடைகள் மற்றும் சந்தையை அணுகல்
குறிப்பிட்டதொரு சந்தையில் உங்களைப் போன்ற உற்பத்திகள் அல்லது சேவைகளுக்கு வலுவான தேவை இருக்கலாம். ஆனால் நீங்கள் அதை அணுக முடியுமா என்பதைக் கண்டறிய வேண்டும். சந்தை அணுகலைச் சரிபார்த்து, அந்த சந்தையில் வியாபாரம் செய்வது எளிதா அல்லது கடினமா என்பதைப் பார்ப்பது முக்கியம். நீங்கள் இதற்கு முன் ஏற்றுமதி செய்யவில்லை எனின், முதலில் எளிதான சந்தையைக் கையாள்வதைக் கவனியுங்கள். அந்த வகையில் நீங்கள் மிகவும் சிக்கலான சந்தைகளுக்குச் செல்வதற்கு முன் நன்றாக அதனை ஆhhய்ந்து பாருங்கள். ஒரு நாட்டைத் தேர்ந்தெடுக்கும்போது கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கியமான காரணி வர்த்தகத் தடையாகும். உங்கள் வியாபார நலன்களுக்கு தீங்கு விளைவிக்காததை உறுதி செய்வதற்காக, ஏற்றுமதியாளர்கள், இலக்கு நாட்டின் சட்ட நடைமுறைகள், சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் வியாபாரச் சட்டங்களை முழுமையாகப் கற்றறிய வேண்டும். நீண்ட காலமாக, முன்னோடியில்லாத அரசியல் சந்தர்ப்பங்கள் மற்றும் சிக்கலான சித்தாந்தங்கள் ஒரு குறிப்பிட்ட நாட்டில் உங்கள் வியாபாரத்தை எளிதில் பாதிக்கக்கூடும்.
நீங்கள் ஏற்றுமதி சந்தையை கண்டுபிடிப்பது எங்கே?
ஏற்றுமதி சந்தைகளைக் கருத்தில் கொள்ளும்போது தொழில்முனைவோராக நீங்கள் சிந்திக்க வேண்டிய பல வழிமுறைகள் உள்ளன. இருந்தாலும், சரியான ஆராய்ச்சி மற்றும் தொடர்புகளுடன், உங்கள் வியாபார நலன்களைப் பாதுகாக்கும் சந்தையில் ஊடுருவுவதே முற்றிலும் உங்களுக்கு சாதமாக அமையும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.