spot_imgspot_img

உங்கள் வேலையை திறம்பட ஏனையவர்களுடன் பகிர்ந்து கொள்வது எப்படி

“ஐயோ கடவுளே இது என்னால் கையாள முடியாத வேலை” என்று நீங்கள் எந்தளவு தூரம் அடிக்கடி மன அழுத்தத்திற்கு ஆளாகிறீர்கள்? இல்லையெனில், உங்கள் அணியிடமிருந்து போதுமான ஆதரவைப் பெறவில்லை என்று நீங்கள் நினைப்பதால், எத்தனை முறை பணியைக் கைவிட்டுவிட நினைக்கிறீர்கள்?

வேலையை திறம்பட ஏனையவர்களிடம் பகிர்ந்து கொள்வது ஒரு தனிக்கலை என்பது உங்களுக்குத் தெரியுமா, இந்தப் பிரச்சினைகள் அனைத்திற்கும் காரணம் நீங்கள் வேலையை திறம்பட ஏனையவர்களுடன் பகிர்ந்து கொள்ளாமை தான். நீங்கள் இதைப் புரிந்துகொண்டு, கடைசி நேரம் வரை காத்திருக்காமல் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் பணியை ஏனையவர்களிடம் பகிர்ந்து ஒப்படைத்தால், கண்டிப்பான காலக்கெடு அல்லது அதிக பணிச்சுமைகள் இருந்தபோதிலும், உங்கள் உற்பத்தித்திறனை அதிகரிக்கவும், உங்களை சாமர்த்தியமாக வைத்திருக்கவும் முடியும். தகுந்த நேரத்தில் பொருத்தமான வேலையை அடுத்தவர்களிடம் பகிர்ந்து ஒப்படைக்க நீங்கள் தயாரா? இதைத் தொடங்குவதற்கு சில உதவிக்குறிப்புகளை ஆராய்வோம்.

உங்களின் கீழ் பணிபுரிபவர், சக ஊழியர் அல்லது யாரேனும் ஒருவரிடம் வேலையை பகிர்ந்து ஒப்படைக்கும்போது, நீங்கள் சரியான நபரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நீங்கள் இன்னும் முக்கியமான ஒன்றில் கவனம் செலுத்துவதற்காக சில வேலையை நீங்கள் அவர்களிடம் ஒப்படைத்திருக்கும் போது, வழிகாட்டுதல் மற்றும் ஒப்படைக்கப்பட்ட வேலையைப் பற்றிய அறிவுரைகளுக்கான எண்ணற்ற கோரிக்கைகளால் உங்களுக்கு தொந்தரவு இருக்காது, இல்லையா? எனவே, அந்த நபர் தேவையைப் புரிந்து கொள்ளக்கூடியவராகவும், அவரிடமிருந்து எதிர்பார்க்கப்படும் பணிகளைச் செய்வதற்கு போதுமான தகுதி மற்றும் திறன்களைக் கொண்டிருப்பதையும் உறுதிசெய்வது ஒரு சிறந்த நடைமுறையாகும். சுருங்கச் சொன்னால், இதய சத்திர சிகிச்சை நிபுணர் ஒரு தாதியிடம் சத்திர சிகிச்சையை ஒப்படைக்க முடியுமா? பணியை ஒப்படைக்கும் போது சரியான நபரைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியமானது. வேலையைச் சுதந்திரமாகவும் திறம்படவும் கையாளும் அளவுக்கு அந்த நபருக்கு நீங்கள் நன்கு விளக்கமளிக்க வேண்டும் என்பதும் அதேயளவு முக்கியமானது. இது மட்டும் இல்லை.

அதிகாரம் மற்றும்/அல்லது வலுவூட்டல் இல்லாத பணிப் பகிர்வு ஒப்படைப்பு எதிர்பார்த்த முடிவுகளைத் தராது. ஒரு எளிய உதாரணத்தை சிந்திப்போம். நீங்கள் ஒரு நிறுவனத்தின் உரிமையாளராக இருந்து, நீங்கள் இரண்டு வாரங்களுக்கு வெளிநாட்டிற்குச் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொண்டால், நீங்கள் இல்லாத நேரத்தில் உங்களுடைய பணியைக் கவனிக்க யாராவது ஒருவர் தேவைப்படுவார். நீங்கள் மற்றொரு தரப்பினருடன் இரு வார காலக்கெடுவுடன் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலையை கற்பனை செய்து பாருங்கள். உங்கள் சார்பாக உங்கள் பிரதிநிதி கையெழுத்திடுவார் என நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என்றால், அவருக்கு அந்த ஒப்பந்தத்தின் தேவை மற்றும் வணிக நோக்கங்கள் குறித்து சரியாக விளக்கப்பட வேண்டும். மேலும், அவர் உங்கள் பிரதிநிதியாகச் செயல்படுவதற்கான சட்டபூர்வ திறனைப் பெற்றிருக்க வேண்டும். அது இல்லாமல் கையெழுத்திட்ட ஒப்பந்தம் செல்லுபடியாகாது. எனவே, நீங்கள் எதைப் பகிர்ந்து கொள்கிறீர்கள், யாரிடம் ஒப்படைக்கிறீர்கள் மற்றும் அந்த நபர் எவ்வாறு ஒப்படைக்கப்பட்ட பணியைச் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள் என்பதை எப்போதும் கவனத்தில் கொள்ளுங்கள். ஒரு பணியை நிறைவேற்றுவதற்கான அதிகாரத்தை நீங்கள் வழங்க வேண்டியிருக்கும் போது, அந்த பணிக்கான பொறுப்பு உங்களிடமே உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள் – நீங்கள் திறம்பட மற்றும் தெளிவான தகவல்தொடர்பாடலுடன் அவற்றை ஒப்படைத்துள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்துவதற்கான அனைத்து மேலதிக காரணங்களும் இதன் அடிப்படையிலானவையே. பணியை மற்றொருவரிடம் பகிர்ந்தளிக்கும் போது பின்வருவனவற்றில் கவனம் செலுத்துங்கள்:

  • ஒப்படைக்கப்பட வேண்டிய வேலையைப் பற்றிய நல்ல புரிதல் உங்களுக்கு இருக்க வேண்டும் மற்றும் நீங்கள் அதனை வேறொருவரிடம் பகிர்ந்தளிக்கத் தயாராக இருக்க வேண்டும்.
  • நீங்கள் யாரிடம் பணியை ஒப்படைக்கப் போகிறீர்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.
  • அந்த நபரிடம் ஒப்படைக்கப்பட்ட பணி(களை) நிறைவேற்ற தேவையான வளங்கள் போதுமான அளவில் உள்ளதா என்பதை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.
  • நீங்கள் உங்கள் ஊழியர்களிடம் ஒப்படைக்கப்பட்ட வேலையின் முக்கியத்துவத்தைப் பற்றி கலந்துரையாடினீர்களா? அதன் முக்கியத்துவம் அவர்களுக்குப் புரிகிறதா?
  • “பகிர்ந்தளிக்கப்பட்ட பணி என்ன” மற்றும் “அது ஏன் தேவைப்படுகிறது” என்பதை அவர்கள் புரிந்துகொள்கிறார்களா?
  • ஒவ்வொரு தனிநபரும் தனக்கு ஒப்படைக்கப்பட்ட பணியை தொடர்ந்து செய்ய முடியுமா?
  • ஏதாவது பணி இவ்வாறு ஒப்படைக்கப்படும் போது இருவழி தொடர்பாடல் உள்ளதா?
  • பகிர்ந்தளிக்கப்பட்ட பணியின் செயல்திறன் / வினைதிறன் மற்றும் செயல்திறனில் அதன் தாக்கத்தை அளவிடுவதற்கான வழிமுறை உங்களிடம் உள்ளதா?
  • ஒப்படைக்கப்பட்ட பணி எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது என்பதைக் கண்காணிப்பதற்கான வழிமுறை உங்களிடம் உள்ளதா?

வெற்றிகரமான பணிப் பகிர்ந்தளிப்பானது தயார்படுத்தல், நம்பிக்கை மற்றும் தெளிவான தொடர்பாடல் ஆகியவற்றைக் கொண்டது. நீங்கள் அதை எவ்வளவு அதிகமாகச் செய்கிறீர்களோ, அவ்வளவு சிறப்பாக நீங்கள் பணியை பகிர்ந்தளிப்பதில் தேர்ச்சி பெறுவீர்கள். எனவே இதனைத் தொடங்குவதற்கு தயங்க வேண்டாம். குறைந்த ஆபத்துள்ள பணிகள் மற்றும் சில பாதுகாப்பு ஏற்பாடுகளை நீங்கள் பணியை வேறு ஒருவரிடம் ஒப்படைக்கும் முதல் சில முறைகளுக்கு முறையாக கவனத்தில் கொள்ள வேண்டும். ஒப்படைக்கப்பட்ட பணி முடிந்ததும், எது நன்றாக முன்னெடுக்கப்பட்டுள்ளது, எது நன்றாக முன்னெடுக்கப்படவில்லை என்பதை மதிப்பாய்வு செய்வதும் முக்கியம்.

சிறப்பாக முன்னெடுக்கப்பட்ட பணிப் பகிர்வு, உங்களுக்கும் உங்கள் அணிக்கும் ஒரு “பன்மடங்கு பலமாக” அமைவதுடன், எந்த நேரத்திலும் தனிநபர்கள் கூடுதலான பணிகளைச் சிறப்பாகச் செய்ய இது இடமளிக்கிறது.

Get in Touch

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

spot_imgspot_img

Related Articles

spot_img

Get in Touch

Latest Posts

X