வருடமொன்று நிறைவடையும் சந்தர்ப்பமானது உங்கள் வியாபாரத்தின் செயற்திறன் எவ்வாறு இருந்தது என்பது பற்றிப் பார்க்கவும், புதிய ஆண்டு அல்லது எதிர்காலம் குறித்த விடயங்களை கட்டமைக்கவும் சரியான நேரமாகும். விரிவான முறையில் ஆண்டு இறுதி மதிப்பீட்டினை மேற்கொள்வதானது உங்கள் வியாபாரம் குறித்த பெறுமதிமிக்க தகவல்களை வழங்குவதோடு உங்களது பலம், பலவீனங்கள் மற்றும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளின் பகுதிகளை அடையாளம் காணவும் உங்களை அனுமதிக்கிறது.
மதிப்பிட வேண்டிய முக்கிய பகுதிகள்:
· நிதிச் செயற்திறன்:
o உங்கள் வருமான அறிக்கை (Income Statement), இருப்புநிலை (Balance Statement) மற்றும் பணப்புழக்க அறிக்கை (Cash Flow) ஆகியவற்றை பகுப்பாய்வு செய்யுங்கள்.
o உங்கள் கணக்குகள் எவ்வாறு செயற்பட்டன என்பதனை உங்கள் வரவு செலவுத்திட்ட புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடுங்கள்.
o வருவாய், செலவுகள் மற்றும் லாபத்தின் போக்குகளை அடையாளம் காணவும்.
· வாடிக்கையாளர் திருப்தி:
o ஆய்வுகள், மதிப்பீடுகள் மற்றும் நேரடி செயன்றமுறைகள் (Direct Interactions) மூலம் கருத்துக்களை சேகரிக்கவும்.
o தக்கவைக்கப்பட்ட வாடிக்கையாளர் விகிதங்கள் (Customer Retention Rate) மற்றும் Net Promoter Scores குறித்து மதிப்பிடவும்.
o வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தக்கூடிய விடயங்களை அடையாளம் காணவும்.
· செயற்பாட்டுத் திறன் (Operational Efficiency):
o இடையூறுகள் மற்றும் வினைத்திறன் குறைந்த நிலைகளில் உங்கள் வியாபாரச் செயன்முறைகள் எவ்வாறு உள்ளது என்பதனை மதிப்பீடு செய்யுங்கள்.
o உங்கள் ஊழியர்களின் செயற்தினை மதிப்பிடுவதோடு, அவர்களுக்கான பயிற்சி தேவைகள் உள்ளதா என்பதனை அடையாளம் காணவும்.
o உங்கள் சரக்கு இருப்பு மற்றும் விநியோக செயற்திறன் உத்திகளை மதிப்பாய்வு செய்க.
· சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை:
o உங்கள் சந்தைப்படுத்தல் பிரச்சாரங்கள் மற்றும் விற்பனை உத்திகளின் செயற்திறனை பகுப்பாய்வு செய்யுங்கள்.
o உங்கள் விற்பனைக் குழுக்களின் செயற்திறன் மற்றும் அவர்கள் புதிய விற்பனை வாய்ப்புக்களை உருவாக்கும் செயற்பாடுகளை மதிப்பீடு செய்யுங்கள்.
o உங்கள் சந்தையின் எல்லை மற்றும் வாடிக்கையாளர் அளவு என்பவற்றினை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகளை அடையாளம் காண்க.
· வியூக இலக்குகள் (Strategic Goals):
o நீண்டகால வியூக இலக்குகளை அடைவதற்கான உங்கள் நிலை குறித்து மதிப்பிடுங்கள்.
o உங்கள் இலக்கு மற்றும் நோக்கு (Mission and Vision) பொருத்தமான நிலையில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த அவற்றை மீள் மதிப்பீடு செய்யுங்கள்.
o உங்கள் வியூக திட்டங்களில் தேவையாக உள்ள மாற்றங்களை அடையாளம் காணவும்.
வருடஇறுதி மதிப்பீட்டின் மூலமான நன்மைகள்:
· தகவலறிந்து முடிவெடுத்தல்: ஒரு முழுமையான மதிப்பீடு உங்கள் எதிர்கால தீர்மானங்களை சிறப்பாக மேற்கொள்ள தகவல்களை வழங்குகிறது.
· செயல்திறனில் வினைத்திறன் அதிகரிப்பு (Improved Performance): முன்னேற்றத்திற்கான விடயங்களை அடையாளம் காண்பதன் மூலம், உங்கள் வியாபார செயற்திறனை மேம்படுத்த நீங்கள் நடவடிக்கை எடுக்கலாம்.
· இடர் முகாமைத்துவ வினைத்திறன்: உங்கள் வியாபாரத்தின் நிதி ஆரோக்கியம் மற்றும் செயற்பாட்டு அபாயங்களை மதிப்பிடுவது சாத்தியமான சவால்களைத் குறைக்க உதவுகின்றது.
· பொறுப்புடைமை அதிகரிப்பு: தெளிவான இலக்குகளை அமைத்தல் மற்றும் முன்னேற்றத்தைக் கண்காணித்தல் போன்ற விடயங்கள் ஊழியர்களிடையிலான பொறுப்புணர்வை வளர்க்கிறது.
· முதலீட்டாளர் நம்பிக்கை விருத்தி: நன்கு செயற்படுத்தப்பட்ட வருட இறுதி மதிப்பீடு மூலமாக நீங்கள் வெற்றிகரமான வியாபாரத்தினை நடத்துவதற்கான உங்கள் உறுதிப்பாட்டை முதலீட்டாளர்களுக்கு நிரூபிக்க முடியும்.
வினைத்திறன்மிக்க மதிப்பீட்டை நடத்துவதற்கான மேலதிக உதவிக்குறிப்புகள்:
· உங்கள் ஊழியர் குழுக்களை தயார்படுத்துங்கள்: உங்கள் ஊழியர் குழுக்களை அவர்கள் அறிந்த தகவல்களையும், பின்னூட்டங்களையும் பகிர்ந்து கொள்ள ஊக்குவிக்கவும்.
· தரவு மற்றும் பகுப்பாய்வுகளைப் பயன்படுத்தவும்: உங்கள் பகுப்பாய்வுகள் மற்றும் தரவுகளை தீர்மானம் மேற்கொள்வதற்கான செயற்பாடுகளில் பயன்படுத்தவும்.
· நேர்மையாகவும் குறிக்கோள் கொண்டவராகவும் இருங்கள்: பலவீனங்களையும் சவால்களையும் அடையாளம் காண வெட்கப்பட வேண்டாம்.
· தெளிவான இலக்குகளை அமைக்கவும்: புதிய ஆண்டுக்கான குறிப்பிட்ட, அளவிடக்கூடிய, அடையக்கூடிய, பொருத்தமான மற்றும் நேர முகாமைத்துவத்துடனான இலக்குகளை உருவாக்கவும்.
· வெற்றிகளைக் கொண்டாடுங்கள்: உங்கள் ஊழியர்களின் சாதனை அடைவுகளுக்கு அங்கீகாரம் கொடுத்து வெகுமதிகள் வழங்கவும்.
மேற்குறிப்பிட்ட விடயங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தது என்று நம்புகின்றோம். உங்கள் வியாபாரம் தொடர்பிலான அடுத்த முடிவுகள் எவ்வாறு அமைகின்றது என்பதனை அறிவதனை நாங்கள் மகிழ்ச்சியுடன் எதிர்பார்ப்பதோடு, அவற்றினை எங்களுடனும் பகிர்க!
>>>மூலோபாய திட்டமிடல் (Strategic Planning); நோக்கம், இலக்கு மற்றும் குறிக்கோள்கள்