“ஊழியர்கள், அவர்களின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு, உடனடியாக நடைமுறைப்படுத்தக்கூடிய, குறிப்பிட்ட உடனடி கருத்துக்களைப் பெறும்போது, அவர்கள் கற்றுக் கொள்ளவும் வளரவும் அதிக வாய்ப்புள்ளது.”
– Gallup இன் 2017 State of the American Workplace அறிக்கை
பின்னூட்டக் கருத்தைப் பகிர்வது – அது நல்லதாக இருந்தாலும் சரி கெட்டதாக இருந்தாலும் சரி – மிகவும் சவாலானதாக இருக்கலாம். நாம் ஒரு உண்மையான சூழ்நிலையில் நம்மை அந்த கோணத்தில் வைத்துக்கொண்டால், பணியில் இருக்கும் ஒரு நபர் தனது பணியைக் கண்டறிவதில் சிரமப்படுகிறார் மற்றும் அவர் தனது பணிகளை திறம்பட முன்னெடுக்க முடியாமல் உள்ளார் என்று கற்பனை செய்து பாருங்கள். இந்தச் சூழ்நிலையில் நீங்கள் உங்களை ஈடுபடுத்தி, அவர் எங்கு தவறு இழைத்தார் என்பதைக் கண்டறிய சிறந்த தெரிவுகளை அவருக்கு ஆலோசனையாக வழங்கினால் என்ன? அதைச் செய்வதிலிருந்து உங்களைத் தடுப்பது எது? இது பணியாளரை நிலைகுலையச் செய்துவிடும் அல்லது அவரது சுயமரியாதையைப் புண்படுத்தும் என்று நீங்கள் கவலைப்படுகிறீர்களா? அவ்வாறெனில், உங்களுக்கு சில உதவிக் குறிப்புகள் தேவை.
இதை நாம் எவ்வாறு செய்வது?
- நேருக்கு நேரான, தனிப்பட்ட உரையாடல் எப்போதும் சிறந்தது.
- அதை தனிப்பட்டதாக ஆக்காதீர்கள் (குறிப்பாக வணிகச் சூழலில், தனிப்பட்ட விடயங்களை இழுக்காமல் தொழில்சார் அக்கறைகளை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்).
- முரண்பாடான கூற்றுக்களால் உங்கள் செய்தியை மழுங்கடிக்க வேண்டாம்.
- உங்கள் தொனி மிகவும் முக்கியமானது, குறிப்பாக எதிர்மறையான செய்தியை வழங்கும்போது அது மிகவும் முக்கியம்.
இதை எப்போது செய்வது?
- அனுதாபத்துடன் ‘ஆக்கபூர்வமாக” கையாளும் உணர்ச்சித் திறன் உங்களுக்கு இருக்கும் பட்சத்தில் நீங்கள் அவதானித்த விடயத்தை முடிந்த வரை விரைவாக ஊழியரும் பகிர்ந்து உங்கள் பின்னூட்டக் கருத்தினை வழங்குவதை உறுதி செய்யுங்கள் (நடந்த ஒன்றைப் பற்றி நீங்கள் கோபமாக இருந்தால், இது சிறந்த நேரம் அல்ல. பின்னூட்டக் கருத்து தெரிவிக்கும் போது நீங்கள் கொண்டுள்ள கோபம் உங்கள் தீர்ப்பை மறைக்கலாம்).
- நடந்துகொண்டிருக்கும் பணிகள் பற்றிய பின்னூட்டக் கருத்துக்களைத் தொடர்ந்து வழங்கலாம் மற்றும் அவ்வாறு வழங்க வேண்டும் (இதில் எந்த குறிப்பிட்ட விதியும் இல்லை. முறையான பணி மதிப்பீட்டு கலந்துரையாடல்களில் மட்டுமே பின்னூட்டக் கருத்து வழங்க முடியும் என்ற நடைமுறையை நீங்கள் கொண்டிராத வரை).
- விடயங்கள் தவறாக நடக்கும்போது மட்டும் பின்னூட்ட கருத்து தெரிவிக்க வேண்டும் என்று கிடையாது. பின்னூட்டக் கருத்து வணிக ரீதியாக முக்கியமானதா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், அவர்கள் சிறப்பாகச் செய்ததைப் பற்றிய ஊக்கமளிக்கும், ஆக்கபூர்வமான கருத்துக்களை பணியாளர்கள் கேட்க விரும்புகிறார்கள் (பணியாளர்கள் செய்யும் சில சிறிய விடயங்களைப் பாராட்ட முயற்சிக்கவும், மேலும் மன உறுதி மற்றும் செயல்திறனில் ஏற்படும் தாக்கத்தைக் கண்காணிக்கவும்).
பின்னூட்டக் கருத்து வழங்குவது மிகவும் உணர்ச்சிகரமான ஒரு விடயம் என்பதில் நீங்கள் தெளிவாக இருக்க வேண்டும். பின்னூட்டக் கருத்து வழங்குவதில் இருந்து உங்கள் எதிர்பார்ப்புகளை நீங்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் அளிக்கும் பின்னூட்டக் கருத்தைப் பொறுத்தவரை, அது உண்மைத் தரவு அடிப்படையிலானதாகவும், உங்களுக்கும் (உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேற) மற்றும் அதனைப் பெறுபவருக்கும் (பலவீனமான விடயத்தைச் சரிசெய்வதற்கு அல்லது தன்னை மேலும் வளர்த்துக் கொள்ள) உதவிகரமாகவும் இருக்க வேண்டும். உங்கள் கருத்தை பெறுபவர் எவ்வளவு தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டுமோ அவ்வளவு தீவிரமாக நீங்களும் அதனை எடுத்துக்கொள்ள வேண்டும்.
உங்கள் பின்னூட்டக் கருத்தை குறிப்பிட்டதாகவும் செயல்படக்கூடியதாகவும் மற்றும் சுருக்கமாகவும் பேணுங்கள். ஒருவேளை நீங்கள் கடைசியாக பின்னூட்டக் கருத்தை வழங்கியதற்கு முன்பு இடம்பெற்ற நிகழ்வுகளைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ள வேண்டாம். நீங்கள் ஒருவருக்கு பின்னூட்டக் கருத்து தெரிவிக்கும் போது (குறிப்பாக நீங்கள் கருத்து வேறுபாடு அல்லது உணர்ச்சி மேலீடுகளை எதிர்பார்க்கிறீர்கள் என்றால், அவரிடமிருந்தும் கருத்துக்களை கேட்கும் வகையில் அவரை அழைக்கவும், ஏனெனில் அவரது தரப்பு கதையை அறியாமல் உங்கள் தீர்மானங்கள் துல்லியமாகவோ அல்லது பக்கச்சார்பற்றதாகவோ இருக்காது). பரிந்துரைகளை திறந்த மனதுடன் உள்வாங்குங்கள் மற்றும் உங்களைப் பற்றிய விமர்சனங்களைப் பெறுவதிலும் திறந்த மனதுடன் நடவுங்கள். மேலும், நீங்கள் அவருக்கு உங்கள் சக்திக்கு ஏற்ப எல்லாவற்றிலும் அவருக்கு துணை புரிவீர்கள் என்று உறுதியளிக்கவும். நீங்கள் ஒரு விஷயத்தை நிரூபிக்க வேண்டும் எனில், குறிப்பிட்ட நிகழ்வுகள் அல்லது நிஜ வாழ்க்கை உதாரணங்களில் இருந்து (உங்கள் சொந்தமானதாக இருக்கலாம்) வெளிப்படுத்துங்கள். ஆனால் நீங்கள் வலுக்கட்டாயமாக அவரை நம்ப வைக்க முயற்சிக்கிறீர்கள் என்று அவரை உணர விடாதிருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
பின்னூட்டக் கருத்தை முடிந்தவரை சமநிலையில் பேணுங்கள் – மேலும் நேர்மறைக் கருத்துக்களுடன் வழிநடத்துங்கள். சுருக்கம் பற்றிய முந்தைய அவதானிப்பு விடயத்திலிருந்து கட்டியெழுப்பி, முறையான பின்னூட்ட கருத்து அமர்வாக இருந்தால், மிக முக்கியமான இரண்டு நேர்மறை மற்றும் இரண்டு “டெல்டா” (மேம்படுவதற்கான விடயங்கள்) விடயங்களுக்கு பின்னூட்ட கருத்தை வழங்குவதை மட்டுப்படுத்த முயற்சிக்கவும். எதிர்மறையானவற்றைப் பற்றி எதுவும் செய்ய முடியாது என்பதால், அடுத்த முறை சிறப்பாகச் செயற்பட என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்பதைப் பற்றி எப்போதும் பேசுங்கள் மற்றும் அவற்றைப் பரிந்துரை செய்யுங்கள்.
நீங்கள் அவர்களின் செயல்திறனை எதிர்மறையாக பாதிக்கவில்லை அல்லது அவர்களை ஊக்கத்தைக் குலைக்கவில்லை என்பதை உறுதிப்படுத்த இந்த அனைத்து வழிமுறைகளையும் பின்பற்ற முயற்சிக்கவும். எல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள் மனிதர்களுடன் அவர்களின் உணர்ச்சிகளைக் கையாளுகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சரியான நேரத்தில் வழங்கப்பட்ட நன்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னூட்டக் கருத்துப் பகிர்வானது செயல்திறனை பெரிதும் மேம்படுத்துவதோடு உங்கள் அணியின் ஐக்கியத்தையும் ஊக்கத்தையும் பலப்படுத்தும்.