spot_imgspot_img

இலங்கையில் உங்கள் சிறு மற்றும் நடுத்தர வியாபார முயற்சியினை (SME) ஆரம்பித்தல் : படிமுறை வழிகாட்டி

உங்கள் வியாபாரத்தினை ஆரம்பிக்க விரும்பும் நீங்கள் அதனை எவ்வாறு தொடங்க வேண்டும் என்பது தெரியாமல் இருக்கின்றீர்களா? இலங்கையில் உங்கள் சிறு அல்லது நடுத்தர வியாபார பயணத்தினை ஆரம்பிப்பதற்கான ஆரம்ப படிகள் குறித்த தகவல்கள் உங்களுக்காக:

  1. சிறந்த ஆரம்பம்
  • உங்கள் யோசனையை பரீசிலியுங்கள் : உங்கள் இலக்கு சந்தை, தேவையான விடயங்கள் மற்றும் போட்டியாளர்கள் குறித்த விடயங்களை ஆய்வு செய்யுங்கள்
  • வியாபாரத் திட்டம்: உங்கள் வியாபார திட்டத்தினை உருவாக்குவதோடு, சந்தைப்படுத்தல் நுட்பங்கள், மூலதனம் போன்ற விடயங்களை கவனியுங்கள்
  • வியாபார கட்டமைப்பினை உருவாக்குதல்
  • தனி உடைமையாளராயிருத்தல் (இலகுவானது): இலகுவான செய்முறைகளுடன், உடைமையாளருக்கு அதிக பொறுப்புகளைத் தருவது. இது ஆபத்து குறைந்த வியாபாரங்களுக்கு பொருத்தமானது
  • பங்களாருடன் இணைதல் (பல வியாபார உரிமையாளர்களை கருதுதல்): பகிர்ந்தளிக்கப்பட்ட உடைமையாளர்கள் மற்றும் பொறுப்புக்கள். இதற்கு பங்காளருடனான உடன்படிக்கை அவசியம்.
  • தனியார் கம்பெனி (பிரபல்யமிக்க தெரிவு): இதன் மூலம் உடைமைகளுக்கான பாதுகாப்பு காணப்படுகின்றது, அத்துடன் முதலீட்டாளர்களையும் கவரும். சிக்கல்தன்மையான செயன்முறை
  • SME இணை பதிவு செய்தல்:
  • வியாபார நாமத்தினை உருவாக்கல்: தனித்துவமான தெரிவுடன், இலகுவான மற்றும் தொடர்புடைய ஒரு பெயர்
  • தேவையான படிவங்களை பூர்த்தி செய்தல்: வியாபார பதிவு படிவத்துடன், இயக்குனர் மற்றும் செயலாளர் போன்றவர்களின் சம்மதப்படிவங்களையும் பூர்த்தி செய்தல்
  • அரசாங்க பதிவு: படிவங்களை கம்பெனி பதிவாளர் திணைக்களத்திடம் (DRC) சமர்ப்பித்தல்
  • மேலதிக தேவைகளை பூர்த்தி செய்தல்:

வியாபார வங்கி கணக்கு: அதிகாரப்பூர்வமான நிதி பரிவர்த்தனைகளுக்கு ஒரு பிரத்தியேக வங்கிக் கணக்கைத் திறக்கவும்.

அனுமதிகள் மற்றும் உரிமங்கள்: உங்கள் தொழில்துறைக்கு குறிப்பிட்ட அனுமதிகள் அல்லது உரிமங்களை பெறவும் (உதாரணம் உணவுப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல்).

வரிப் பதிவு: வியாபார வரிகளுக்கு பதிவு செய்து உங்கள் வரி விடயங்கள் தொடர்பில் அறிந்து கொள்ளுங்கள்

  • SME ளுக்குரிய வளங்கள் உபயோகம்:

அரசாங்கத் நிகழ்ச்சித் திட்டங்கள்: SME களுக்கான மானியங்கள், கடன்கள் மற்றும் பயிற்சித் திட்டங்களை வழங்கும் நிகழ்ச்சித் திட்டங்களை ஆராயுங்கள்.

வியாபார விருத்திச் சேவைகள்: அரசாங்க நிறுவனங்கள் பெரும்பாலும் சந்தைப்படுத்தல், நிதி மற்றும் மனித வளங்கள் போன்ற பகுதிகளில் வழிகாட்டுதலை வழங்குகின்றன, சம்பந்தப்பட்ட நபர்களுடன் கலந்துரையாடவும்.

  • வினைத்திறனுக்காக தொழில்நுட்பத்தை உபயோகம் செய்தல்:

செலவு வினைத்திறனுடன் கூடிய தீர்வுகள்: செயற்பாடுகளை சீராக்க கணக்கியல்,  (சமூக ஊடக) சந்தைப்படுத்தல்  மற்றும் வாடிக்கையாளர் உறவு முகாமை (CRM) போன்றவைக்கான மலிவான கருவிகளை ஆராயுங்கள்.

ன்லைன் இருப்பு: நீங்கள் ஒரு உள்ளூர் வியாபாரமாக இருந்த போதிலும், உங்கள் இருப்பு நிலையினை அதிகரிக்க ஒரு அடிப்படை வலைத்தளம் மற்றும் சமூக ஊடக கணக்குகளை உருவாக்கவும்

இலங்கையின் SME களுக்கான மேலதிக ஆலோசனைகள்:

  • ஏனைய SME களுடன் இணைப்பினை ஏற்படுத்தல்: அறிவு மற்றும் வளங்களைப் பகிர்ந்து கொள்ள உங்கள் சமூகத்தில் உள்ள பிற தொழில்முனைவோருடன் இணைந்து செயற்படவும்.
  • வாடிக்கையாளர் சேவைக்கு முன்னுரிமை கொடுங்கள்: உங்கள் உள்ளூர் வாடிக்கையாளர்களுடன் நம்பிக்கையையும் விசுவாசத்தையும் வளர்க்க சிறந்த வாடிக்கையாளர் சேவை முக்கியமானது.
  • தொழில்முறை வல்லுனர்களின் உதவியை நாடுங்கள்: சட்ட ஒழுங்கமைப்பிற்கும், பெறுமதியான நுணுக்கங்களை அறிந்து கொள்ளவும் வியாபார ஆலோசகர் அல்லது சட்ட உத்தியோகத்தர்களை அணுக முடியும்.

தகவல் மூலங்கள்:

  • Department of Registrar of Companies (DRC): https://www.drc.gov.lk/
  • Sri Lanka Business Development Center: [Sri Lanka Business Development Center website might be helpful, but a search can’t be provided due to policy restrictions]

Diriya Sri Lanka
Diriya Sri Lankahttps://www.diriya.lk
Diriya.lk is a sustainability and social innovation initiative of Dialog Axiata PLC. The content available herein is aimed solely for the purposes of educating, guiding and assisting Micro, Small and Medium Enterprises (MSMEs) in navigating the challenges of the fast paced business world. As such, Dialog Axiata PLC, its staff, its officers or Directors shall not be liable for any direct, indirect, incidental, special, consequential, or punitive damages or damages for any loss of profits, revenue, business, savings or data, incurred due to the use of the content available on Diriya.lk.

Get in Touch

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

spot_imgspot_img

Related Articles

spot_img

Get in Touch

Latest Posts

X