குடும்ப வணிகத்தின் ஆரம்ப கட்டத்தில், பெரும்பாலான நிர்வாகரீதியான தீர்மானங்கள் உரிமையாளரால்/ஸ்தாபகரால் எடுக்கப்படுகின்றன. எவ்வாறாயினும், அவர் தனது குடும்ப உறுப்பினர்களை வணிகத்திற்குள் கொண்டுவந்தால், மற்றும் வணிகத்தின் விரிவாக்கத்துடன், மிகத் தெளிவான குடும்பரீதியான வணிக நிர்வாகக் கட்டமைப்பைக் கொண்டிருக்க வேண்டும். உங்கள் வணிகத்தின் வளர்ச்சியின் சரியான கட்டத்தில் சரியான நிர்வாக கட்டமைப்புகள் பலத்திற்கு முக்கியமாகும். எனவே, உங்கள் வணிகத்தின் தற்போதைய நிலைமட்டம் மற்றும் அதற்கேற்ப செயல்படுத்தப்பட வேண்டிய நிர்வாகக் கட்டமைப்பைக் கண்டறிவோம்.
நிலைமட்டம் 1: ஸ்தாபகர்(கள்)
இந்த கட்டத்தில், வணிகமானது ஸ்தாபகரால் (களால்) அவர்களின் நிறுவனத்தின் வெற்றிக்கு தீர்க்கமான பொறுப்புடன் சொந்தமாக அவரால்/அவர்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான முடிவுகளை அவர்களே எடுப்பார்கள். இந்த கட்டத்தில், கிட்டத்தட்ட அனைத்து முடிவுகளும் ஒருவரால் அல்லது ஒருவருக்கொருவர் தொடர்ந்தும் தொடர்பில் இருக்கும் ஒரு சிறிய குழுவால் எடுக்கப்படும். வங்கி, நிதி, போன்ற சில துறைகளில் நிபுணர்களிடம் ஆலோசனை கேட்கும் அரிதான சம்பவங்களும் இருக்கலாம்.
வணிகம் இன்னும் தொடக்க நிலையில் இருந்தாலும், அதன் எதிர்காலத்தைத் திட்டமிடத் தொடங்குவதற்கு ஒருபோதும் காலம் தாழ்த்தத் தேவையில்லை. அடுத்த வாரிசுக்கான திடடத்தை கொண்டு வர இதுவே சரியான தருணம். வழிநடாத்துவதற்குச் சாத்தியமான தலைவர்களை அடையாளம் கண்டு, காலப்போக்கில் அவர்களைச் செதுக்குவது எதிர்காலத்தில் தலைமையின் கைமாற்றத்தை எளிதாக்கும்.
நிலைமட்டம் 2: அடுத்த தலைமுறை
இது “உடன்பிறப்பு கூட்டாண்மை” என்றும் அழைக்கப்படுகிறது. இங்குதான் பணிப்பாளர் சபையும், உரிமையாண்மையும் அடுத்த தலைமுறைக்கு கைமாற்றப்படுகிறது. ஒருவேளை ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் இதனுடன் தொடர்புபடக்கூடும். வணிகத்தின் வளர்ச்சியில் தனிப்பட்ட ஆர்வமுள்ள தனிநபர்களுடன் சேர்ந்து சந்தைப் பங்கை விரிவுபடுத்தி, புதிய சிந்தனைகள் மற்றும் தயாரிப்புகளுடன் வெளிவருவதால், இந்த கட்டத்தில் புதிய தலைமைத்துவம் செழிக்கும். இருப்பினும், அதிகமான குடும்ப உறுப்பினர்கள் நிறுவனத்தின் நிர்வாகத்தில் தீவிரமாக ஈடுபடுவதால், மோதல்கள் மற்றும் நிர்வாக சிக்கல்கள், பொதுவாக ஏற்படுவது சாதாரணமான ஒரு விடயம். குறிப்பிட்ட சொந்தபந்தங்களுக்கு முன்னுரிமையளித்தல் மற்றும் பரிச்சய அடிப்படையிலான நியமனங்கள் ஆகியன எழக்கூடிய இரண்டு பொதுவான பிரச்சினைகள். இந்த கட்டத்தில், வணிக செயல்முறைகளை நெறிமுறைப்படுத்துவது, திறமையான தகவல் தொடர்பாடல் மூலோபாயங்களை உருவாக்குவது மற்றும் வாரிசு திட்டத்தை விரிவுபடுத்துவது முக்கியம். நிறுவனத்தின் நிர்வாகப் பணிகளுக்காக குடும்பத்தைத் தாண்டி வெளித்தரப்பு வளங்களைத் தேடத் தொடங்கும் நிலைமட்டமும் இதுதான்.
நிலைமட்டம் 3: குடும்ப மரபு
குடும்ப மரபு என்பது Cousin Confederation, Cousin Consortium அல்லது Family Dynasty என்றும் அழைக்கப்படுகிறது. இந்தக் கட்டத்தில், பிள்ளைகள், ஒரு தாய் வயிற்று உறவற்ற சகோதர,சகோதரிகள் மற்றும் பிள்ளைகளின் வாழ்க்கைத்துணை உட்பட, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அதிகமான மக்கள் வணிகத்துடன் தொடர்புடையவர்கள் என்பதால், வணிகத்தின் நிர்வாகம் படிப்படியாக சிக்கலானதாக மாறுகிறது. இவர்களில் பெரும் எண்ணிக்கையிலான நபர்கள் குடும்பத்தின் பல்வேறு கிளைப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதால், நிறுவனம் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் மற்றும் பொதுவான நடைமுறை எவ்வாறு அமைக்கப்பட வேண்டும் என்பதில் அவர்களுக்கு வெவ்வேறு எண்ணங்கள் இருக்கலாம். மேலும், முந்தைய தலைமுறைகளில் குடும்பத்தில் இருந்த ஏதேனும் முரண்பாடுகள் தாய் வயிற்று உறவற்ற சகோதர,சகோதரிகள் உறவினர் தலைமுறையினருக்கும் தெரிவிக்கப்படும். இதன் விளைவாக, இந்தக் கட்டத்தில் பொதுவாகக் கவனிக்கப்பட வேண்டிய குடும்ப நிர்வாகச் சிக்கல்கள் அடங்கும். எனவே, இந்த கட்டத்தில் பல கொள்கைகளை உள்வாங்கிக்கொள்ள வேண்டும். இவற்றில் அடங்குபவை வருமாறு,
- குடும்ப உறுப்பினர் வேலைவாய்ப்பு
- குடும்ப பங்கு உரிமைகள்
- பங்கு பணப்புழக்கம்;
- பங்கு இலாபக் கொள்கை
- வணிகத்தில் குடும்ப உறுப்பினர் வகிபாகங்கள்
- குடும்ப பிணக்குக்கான தீர்வு
- குடும்ப பணி இலக்கு மற்றும் தூர நோக்கு
இந்த நிலைமட்டங்கள் வணிக மேம்பாடு ஒரு நேரியல் செயல்முறை என்பதைக் குறிக்கும் அதே வேளையில், அனைத்து நிறுவனங்களும் இந்த மூன்று நிலைமட்ட முன்னேற்றம் அல்லது வளர்ச்சியை அடிப்படையில் அனுபவிப்பதில்லை. சில வணிகங்கள், உரிமையாளர்களால் நிர்வகிக்கப்படும் ஒரு நிறுவனத்திற்கு அப்பால் மாற்றம் காணாதவை, மற்றவை இறுதியில் வெளி தரப்பினரையும் உள்வாங்குவதாக அமையலாம். மேலும், பங்குச் சந்தையில் நிரற்படுத்தப்பட்ட சில நிறுவனங்கள் கூட்டாக கட்டுப்பாட்டு பங்குகளை வைத்திருக்கும் ஒரு குடும்பத்தால் நிர்வகிக்கப்படலாம். எனவே, வணிகத்தின் தன்மை மற்றும் பொருந்தக்கூடிய ஒழுங்குமுறை கட்டமைப்பைப் பொறுத்து, குடும்பக் கட்டுப்பாட்டில் உள்ள வணிகம் சரியான நிர்வாகக் கட்டமைப்பைப் பின்பற்றுவது அவசியம்.