இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (SMEs) மத்தியில், வினைத்திறனான விற்பனையின் நுணுக்கங்களைப் பற்றி புரிந்து கொள்வது நீடித்த வெற்றி மற்றும் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது. இலங்கையில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு, வியூகங்கள் நிறைந்த விற்பனை நடைமுறைகளை செயற்படுத்துவது வியாபாரங்களில் பெருமளவு தாக்கத்தினை ஏற்படுத்தும்.
இலங்கையில் சிறு மற்றும் நடுத்தர வியாபாரங்களுக்கான வளர்ச்சி வியூகங்கள்:
உங்கள் வாடிக்கையாளர்களை அறிந்து கொள்தல்
உங்கள் விற்பனை தளத்தினை உருவாக்கும் முன், உங்கள் இலக்கு வாடிக்கையாளர்களை புரிந்துகொள்ள முழுமையான ஆய்வினை மேற்கொள்ளுங்கள். கலாச்சார விடயங்கள், பிராந்திய விருப்பத்தேர்வுகள் மற்றும் உங்கள் நுகர்வோரின் தனிப்பட்ட தேவைகளை கருத்திற் கொள்ளுங்கள். உதாரணமாக ஒரு சில்லறை விற்பனை நிலையமாக இருக்கும் போது, நீங்கள் குறிப்பிட்ட பகுதி மற்றும் அதன் செயல்திறன் குறித்து அறிவது அவசியம். உள்ளூர் சமூகத்துடன் பிரதிபலிக்கும் வகையில் உங்கள் செய்தியை மாற்றியமைப்பது நம்பிக்கையை உருவாக்குவதோடு, அது நீண்ட கால உறவுகளையும் ஏற்படுத்துகின்றது.
நீடித்த உறவுகளை உருவாக்குங்கள் (Build long lasting relationships)
இலங்கையில் தனிப்பட்ட தொடர்புகள் மகத்தான மதிப்பை கொண்டிருக்கின்றன. எனவே விரைவான பரிவர்த்தனைகளை விட உறவை கட்டியெழுப்புவதற்கு முன்னுரிமை கொடுங்கள். வலையமைப்பை கட்டியெழுப்பல், உள்ளூர் நிகழ்வுகளில் கலந்துகொள்வது என உங்கள் சிறு மற்றும் நடுத்தர வியாபாரங்கள் மீது நம்பிக்கையையும் நல்லுறவையும் ஏற்படுத்த சமூகங்களுடன் இணைந்து நேரத்தை முதலீடு செய்யுங்கள். வாடிக்கையாளருடன் நாம் மேற்கொள்ளும் உண்மையான உரையாடல் நிச்சயமாக அவர்களை மீண்டும் உங்களோடு வியாபாரத்தில் ஈடுபட ஊக்குவிக்கும்.
பெறுமதி தொடர்பிலான கருத்து பரிமாற்றம் (Value Communicate)
உங்கள் வியாபாரம் அல்லது சேவை கொண்டு வரும் தனித்துவமான பெறுமதி குறித்து கருத்துக்களை பரிமாறுங்கள். அத்துடன் நீங்கள் வழங்கும் விடயங்கள் எவ்வகையில் வாடிக்கையாளரின் பிரத்தியேக தேவைகளை பூர்த்தி செய்கின்றது என்பதனையும் தெளிவு படுத்துங்கள்.
மேலும் வீடியோக்கள் – சந்தைப்படுத்தல் – சந்தைகளை அடையாளம் காணுதல் & ஊடுருவுதல்
டிஜிட்டல் இருப்பு மற்றும் தொழில்நுட்பத்தை உள்வாங்குதல்
பயனருக்கு இலகுவாக இருக்கும் இணையதளம் (User-friendly website), டிஜிட்டல் வர்த்தக முறை மற்றும் எப்போதும் தொடர்பு கொள்ளும் வகையிலான சமூக வலைதள கணக்கு போன்றவை ஊடாக உங்களது டிஜிட்டல் இருப்பை உறுதிப்படுத்துங்கள். டிஜிட்டல் தளங்கள் வாயிலாக எட்ட முடியாத இடங்களை சென்றடையுங்கள்.
போட்டித்தன்மைமிக்க விலையமைப்பு
சந்தை விலை தொடர்பில் அறிந்து செயற்படுவதோடு, சந்தை ஆய்வுகளை நடாத்தி தரத்தினை தொடர்ந்து பேணும் வகையில் போட்டித்தன்மை கொண்ட விலை நிர்ணயத்தினை மேற்கொள்ள வேண்டும். இன்னும் விஷேட வெகுமதிகள், விலைக்கழிவுகள், வாடிக்கையாளர் விசுவாச நிகழ்சித்திட்டங்கள் (Loyalty Programs) என்பவற்றை ஒழுங்கு செய்து வாடிக்கையாளர்களை கவரவும், அவர்கள் தொடர்ந்து நிலைத்திருக்கவும் முயற்சிகளை மேற்கொள்ள முடியும்.
உங்கள் விற்பனை குழாத்திற்கு வலுவளித்தல் (Empowering your sales team)
ஊழியர்களின் பயிற்சிகள், வினைத்திறன் தொடர்பாடல், உற்பத்தி தொடர்பிலான அறிவு (Product Knowledge) மற்றும் ஏனைய விடயங்களுக்காக முதலீடு செய்வது உங்கள் வியாபார வெற்றிக்கு மிக முக்கியத்துவமானதாகும்.
மாறும் வியாபார அமைப்புகளுக்கு இசைவாகுதல் (Adapt to Dynamic Business Landscape)
சந்தைப் போக்குகள், நுகர்வோர் நடத்தை மற்றும் பொருளாதார மாற்றங்கள் ஆகியவை குறித்து தெரிந்து கொள்ளுங்கள். சந்தைக் கேள்வி மாற்றத்திற்கு (Changing Demands) ஏற்ப உங்கள் விற்பனை வியூகங்களை மாற்றியமைக்கவும் மற்றும் எப்போதும் மாறி வரும் வணிக அமைப்பில் வரும் வாய்ப்புகளைப் பயன்படுத்தவும் இசைவாக்கம் அடைந்து கொள்ளுங்கள்.
வாடிக்கையாளரை நிலைநிறுத்திய அணுகுமுறை
அதிக வினைத்திறனான வாடிக்கையாளர் சேவை மிக முக்கியமானது. வாடிக்கையாளர் பின்னூட்டங்களுக்கு, முன்னுரிமை வழங்குவதோடு, பிரச்சினைகளை உடனடியாக நிவர்த்தி செய்து, திருப்தியான வாடிக்கையாளர்களை உருவாக்குவது உங்கள் வியாபார நாமத்திற்குரிய நம்பிக்கைகுரிய பிரதிநிதிகளாக உங்களை மாற்றும்.
இந்த வியூகங்களை கடைப்பிடிப்பதன் மூலம் சிறு மற்றும் நடுத்தர வியாபார (SME) உரிமையாளர்கள் இலங்கையில் தங்களது டிஜிட்டல் இருப்பினை அதிகரிக்க முடியும் என்பதோடு, இலங்கை சந்தையில் தங்களுக்கு தேவையாக இருக்கும் பிரத்தியேக வாடிக்கையாளர்களையும் கவர்வதற்கு முடியும்.