ஒரு வணிகத்தில் ஈடுபடும்போது நீங்கள் குறைக்க விரும்பும் பல செலவுகளில், கொள்முதல் என்பது நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான காரணிகளில் ஒன்றாகும். பெரிய மற்றும் சிறிய அளவிலான வணிகங்கள் என இரண்டுக்குமே இது பொதுவான ஒன்று. கொள்முதலின் சுருக்கமான கண்ணோட்டம் மற்றும் அதை நீங்கள் மிகவும் திறமையாகவும், செலவு குறைந்ததாகவும் மாற்றுவதற்கான வழிகள் இங்கே தரப்பட்டுள்ளன.
கொள்முதல் மற்றும் வழங்கல் முகாமைத்துவம் என்றால் என்ன?
கொள்முதல் மற்றும் வழங்கலுக்கான பட்டய கற்கை நிலையமானது இலாபகரமான மற்றும் நெறிமுறையான வழிமுறையில் செயல்படுவதற்கு உதவும் வகையில் பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்குவதை உள்ளடக்கிய ஒரு செயல்பாடே இது என வரையறுக்கிறது. கொள்முதலுக்காக ஒதுக்கப்பட்ட வளங்களின் அளவு குறித்து சிலர் அதிக கவனம் செலுத்தாவிட்டாலும், இது எதிர்கால செயல்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு முக்கிய காரணியாக உள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
வாங்குதல் மற்றும் கொள்முதல் இடையே வேறுபாடு உள்ளதா?
ஆம். வாங்குதல் என்பது கொள்முதல் செயல்பாட்டில் ஒரு படி மட்டுமே. மக்கள் இந்த இரு வார்த்தைகளையும் ஒன்றுக்கொன்று மாற்றாகப் பயன்படுத்த முனைந்தாலும், கொள்முதல் செய்வதற்கு அதிக சிந்தனை மற்றும் மூலோபாய திட்டமிடல் தேவைப்படுகிறது.
கொள்முதலில் நீங்கள் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் என்ன?
- துல்லியமற்ற தரவு
- வழங்குநர்களுடனான சிக்கல்கள்
- பொருட்கள் மற்றும் சேவைகளின் தரம் மற்றும் அளவு
- வழங்கல்களில் தாமதம்
- டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் தொழில்நுட்பம்: டிஜிட்டல் யுகத்தில் இது ஒரு புதிய சவாலாகும். டிஜிட்டல் மயமாக்கலை அதிகரிப்பது வழங்கல் சங்கிலியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக ஒருமுகப்படுத்தப்பட்ட திட்டத்தை உருவாக்கும் செயல்முறையைத் தடுக்கலாம்.
கொள்முதல் மோசடியின் அறிகுறிகள் என்ன?
மூலப்பொருள், நுகர்பொருட்கள் அல்லது ஏனையவை என நீங்கள் வெவ்வேறு செலவுகளுக்குப் பொறுப்பான ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுடன் வணிகத்தை நடத்தும்போது கழிவுகள், மோசமான நடைமுறைகள் அல்லது வெளிப்படையான மோசடிக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
உங்கள் வணிகத்திற்கு சவாலாக இருக்கும் ஏனைய வகையான மோசடிகளைப் போலவே, கொள்முதல் மோசடியை சுட்டிக்காட்டும் சில குறிகாட்டிகளை நீங்கள் உற்றுநோக்கலாம்.
நீங்கள் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டிய சில பகுதிகள் இங்கே தரப்பட்டுள்ளன:
- ஆவணங்கள்: தகவலில் தெளிவின்மை அல்லது குறைபாடுகள் இல்லை என்பதை உறுதிப்படுத்த, ஒப்பந்த விவரக்குறிப்புகள் போன்ற ஆவணங்கள் கவனமாக கண்காணிக்கப்பட வேண்டும்.
- உங்கள் ஊழியர்களிடம் கவனம் செலுத்துங்கள்: ஊழியர்களில் ஒருவர் பல சந்தர்ப்பங்களில் ஒப்பந்தக்காரர்களைத் தனியாகச் சந்திக்க வேண்டும் என்று வலியுறுத்துவது போன்ற அடிப்படைச் செயல்கள் உங்களுக்குத் தெரியாத விடயங்களைச் சுட்டிக்காட்டலாம். சிறந்த கொள்முதல் அதிகாரிகள் வழங்குநர்களிடமிருந்து தனிப்பட்ட பலன்களைப் பெறக்கூடாது. எனவே, அவர்கள் தந்திரமாக முறையற்ற விதத்தில் அன்பளிப்புகள் மற்றும் பொழுதுபோக்கு சார்ந்த உபசரிப்புகளை ஏற்றுக்கொண்டால், இடம்பெற்று வரும் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
- ஒப்பந்தங்கள்: ஒரு ஒப்பந்தக்காரரின் முறையற்ற தெரிவு அல்லது ஒரு குறிப்பிட்ட ஒப்பந்ததாரரின் நியாயமற்ற தயவு, (உ.ம். கூடுதல் விலைக்கு ஒப்புதல் அளித்தல், அளவுக்கு அதிகப்படியான கொள்முதல், குறைந்த தரமான பொருட்களை தொடர்ந்து ஏற்றுக்கொள்வது போன்றவை) இடம்பெறும் போது அவை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட வேண்டும்.
- வெளிப்புற காரணிகள்: தேவையற்ற தரகர் அல்லது இடைத்தரகர் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபடும்போது.
பெரிய அளவிலான சேமிப்பு, கூடுதல் தயார்நிலை மற்றும் எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் திறன், குறைக்கப்பட்ட செயல்பாட்டு செலவுகள் மற்றும் இலகுபடுத்தப்பட்ட செயல்முறை ஆகியவற்றை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால் நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், நன்கு பயிற்சி பெற்ற அணியுடன் கொள்முதல் செயல்முறையின் அடிப்படை படிமுறைகளை தயார் செய்து அவற்றைப் பின்பற்ற வேண்டும்.
ஒரு மூலோபாய கொள்முதல் செயல்முறை பின்வரும் படிகளை உள்ளடக்கியது;
- குறிப்பிட்ட தேவையை அடையாளம் காண உள்ளகரீதியாக தேவையை இனங்காணும் பகுப்பாய்வை முன்னெடுத்தல்
- வழங்குநர்களின் சந்தையின் மதிப்பீடு
- நம்பகமான ஆதாரங்களில் இருந்து வழங்குநர் தொடர்பான தகவல்களை சேகரித்தல்
- ஒரு கொள்முதல்/வெளிச்சேவை மூலமான கொள்முதல் மூலோபாயத்தை முன்கூட்டியே உருவாக்குதல்
- ஒரு குறிப்பிட்ட கொள்முதல் மூலோபாயத்தை செயல்படுத்துதல்
- வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சிறந்த வகையில் பொருத்தமானவற்றைத் தெரிவு செய்தல்
- இடைநிலைத் திட்டம் அல்லது ஒப்பந்த வழங்கல் சங்கிலி மேம்பாடுகளைச் செயல்படுத்துதல்