spot_imgspot_img

மில்லேனியல்கள் உடன் பணியாற்றும் தனித்துவமான பண்பு

இன்றைய காலகட்டத்தில் மில்லேனியல்கள் பணியிடத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர். அவர்கள் தமக்கான சில போக்குகளை ஏற்படுத்தியுள்ளதுடன் பணியிட வரையறைகளையும் தகர்த்துள்ளனர். மேலும் அவர்கள் இலட்சிய ரீதியாக செயற்திறன் மிக்க நபர்களை கொண்ட குழவினராவர். ஆனால் பணியிடத்தில் மில்லினியல்களைக் கையாள்வது பல புதிய சவால்களை உள்ளடக்கியுள்ளதுடன் உங்கள் வாழ்க்கையை எளிதாக்குவதற்கும், பொதுவாக மில்லினியல்களுடன் நன்றாக வேலை செய்வதற்கும் சில நிரூபிக்கப்பட்ட வழிகள் முறைகள் இதோ உங்களுக்காக.

நம்பிக்கை மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யுங்கள்

அனைத்து மில்லினியல்களும் கடினமாக உழைக்கின்றனர். மேலும் நீங்கள் அவர்களை நம்புகின்றீர்கள் என அறிந்தாலோ மற்றும் அவர்களுடன் நீங்கள் வெளிப்படைத்தன்மையுடன் நடந்துகொள்கிறீர்கள் என்பதையும் அவர்களுக்கு தெரியவந்தால், அவர்கள் தமது வேலையை செய்ய அதிக ஆர்வம் காட்டுவார்கள். உதாரணமாக, ஒரு பணியின் சிரமத்தைப் பற்றி அவர்களுக்குத் தெரியப்படுத்துவதற்குப் பதிலாக, அதன் எதிர்கால சவால்கள் பற்றிய உண்மையை அவர்கள் அறிய விரும்புகின்றார்கள். நம்பிக்கை மற்றும் வெளிப்படைத்தன்மையை கட்டியெழுப்புவதற்கு மற்றும் தொடர்பாடல் செய்வதற்கு நீங்கள் சிறந்தவராக இருந்தால், மில்லினியல்கள் உங்களுடன் பணியாற்றுவது எளிதாகும்.

மில்லேனியல்கள் உடன் பிணைப்பு மற்றும் இணைப்பு

மில்லினியல்கள் தாம் குழுவின் ஒரு பகுதியினர் என உணர வேண்டும். இந்த ஊழியர் குழுவினருக்கு ஒத்துழைப்பு முக்கியமானது. தொற்றுநோய் மற்றும் அதனால் ஏற்பட்ட விளைவுகள் இதனை இன்னும் கடினமாக்கியுள்ளது. எனினும் வியாபார உரிமையாளர்கள், எதிலும் ஊழியர்களின் பங்கேற்பு அதிகம் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். கட்டுப்பாடற்ற வகையில் அவர்களை வேலை செய்ய விட்டுவிட்டு, அதைக் கைவிடுவது உற்பத்தித்திறனைக் குறைக்கும். எனவே நீங்கள் வீட்டிலிருந்து பணிபுரியும் போது, அவர்களுடன் தொடர்பில் இருங்கள். வழக்கமான அல்லது குறுகிய நாளாந்த பணிச்சார்ந்த சந்திப்புகளை நடத்துங்கள். அவர்களது கருத்துக்களை கேட்டறிந்து கொள்ளுங்கள்.

உத்வேகம் மற்றும் ஆர்வம்

மில்லினியல்கள் மற்ற ஊழியர்களை விட வேகமாக அதிருப்தி அடையும் போக்கைக் கொண்டுள்ளனர் எனவே, தாம் செய்யும் வேலையில் உத்வேகம் மற்றும் ஆர்வத்தை அவர்கள் உணர வேண்டியது அவசியம். இதைச் செய்வதற்கான சிறந்த வழி எதுவெனில், அவர்களுக்கு பயிற்சி மற்றும் வளர்ச்சிக்கான வாய்ப்பை வழங்குவதாகும். நீங்கள் அவர்களுக்கு வௌ;வேறு விஷயங்களைக் கொடுக்கலாம். அத்துடன் அவர்களுக்கு கருத்துதிர்ப்பு அமர்வுகளை நடத்தலாம்.

மில்லினியல்கள் உங்கள் வியாபாரத்தின் அதிக பெறுமதியை சேர்க்கலாம். எனவே அவற்றை எவ்வாறு கையாள்வது மற்றும் அவர்களை உங்களுடன் வேலை செய்ய வைப்பது எவ்வாறு என்பதை நீங்கள் அறிந்திருந்தால், நீங்கள் செய்த முதலீட்டிலிருந்து நீங்கள் பயனடைவது உறுதி.

மில்லேனியல்களுடன் பணியாற்றும் தனித்துவமான பண்புகள் பற்றி அறிந்து கொள்ள திரிய இணையத்தளத்தைப் பார்க்கவும்.

Get in Touch

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

spot_imgspot_img

Related Articles

spot_img

Get in Touch

Latest Posts

X