இலங்கை போன்ற வளர்ச்சியடையும் நாடொன்றில் காணப்படும் சிறிய நிறுவனமொன்று பின்பற்றுகின்ற அடிப்படையான மனிதவள முகாமைத்துவ நடைமுறைகள்
ஆட்சேர்ப்பு, மற்றும் ஆட்தேர்வு
- வினைத்திறன் மற்றும் தெளிவு: தேவையான ஆற்றல்கள் மற்றும் அனுபவத்தினை காட்டும் தெளிவான, சுருக்கமான வேலை விவரணங்களில் கவனம் செலுத்துங்கள். ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்ய உள்ளூர் வேலை நிரல்கள், ஊழியர் பரிந்துரைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் போன்ற செலவு குறைந்த முறைமைகளைப் பயன்படுத்தவும்.
- நேர்முகத் தேர்வுத் நுட்பங்கள்: குறிப்பிட்ட வேலைக்கு அத்தியாவசியமான விடயங்களை மையமாகக் கொண்டு கட்டமைக்கப்பட்ட நேர்முகத் தேர்வுகளை நடத்துங்கள். நேர்முகத் தேர்வு செயற்பாட்டில் பொருத்தமான நபர்களை ஈடுபடுத்துங்கள். அத்துடன் திறன் தொடர்பான கேள்விகளைக் கேட்குமாறு அவர்களைக் கோருங்கள்.
- கலாச்சார ஒற்றுமை: இலங்கையின் வேலையிடங்களில் பெறுமதி கொண்ட பண்புகளாக கருதப்படும் பணி நெறிமுறை, விடாமுயற்சி மனப்பான்மை, ஏனையோரினை மதித்தல் மற்றும் கூட்டாக வேலை செய்யும் திறன் கொண்ட பண்புகளை வெளிப்படுத்தும் ஆளுமைகளை தேடுங்கள்.
கொடுப்பனவுகள் மற்றும் வெகுமதிகள்:
- சட்ட இணக்கம்: அதிகுறைந்த சம்பளம், மேலதிக நேர ஊதியம் (OT) மற்றும் EPF மற்றும் ETF போன்ற கட்டாய அனுகூலங்களுடன் தொடர்புடைய இலங்கை தொழில் சட்டங்களுக்கு இணங்குவதை உறுதிப்படுத்தல். தொழில் திணைக்களம் வழிகாட்டல்களை வழங்க முடியும். https://labourdept.gov.lk
- போட்டித்தன்மைகொண்ட கொடுப்பனவுகள்: வளங்கள் குறைவாக இருக்கும்போது, திறமைகளை ஈர்க்கவும் தக்கவைக்கவும் போட்டித்தன்மை கொண்ட சம்பளங்களை வழங்குங்கள். சம்பளத்துடன் கூடிய விடுமுறை அல்லது போக்குவரத்து மானியம் போன்ற அடிப்படை நன்மைகள் மற்றும் மருத்துவம், உணவு, பராமரிப்பு சேவைகள் போன்ற பிற நன்மைகளை கருத்திற் கொள்ளுங்கள்.
செயல்திறன் முகாமை:
- சீரான தொடர்புமுறைகள்: தெளிவான எதிர்பார்பார்ப்புக்களோடு, ஆக்கபூர்வமான சந்திப்புக்களை மேற்கொண்டு தெளிவான பின்னூட்டங்களை வழங்கவும்.
- ஊக்குவிப்பு: நேர்மறையான பணிச்சூழலை பேணுவதற்கு ஊழியர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரத்தில் கவனம் செலுத்துவதோடு, சாதனைகளைக் கொண்டாடுங்கள்.
பயிற்சி மற்றும் விருத்தி:
- தேவைகளை அடையாளம் காணுதல்: உங்கள் வேலையாட்களிடம் காணப்படும் ஆற்றல் இடைவெளிகளை கண்டறிவதோடு அதனை மதிப்பிடுங்கள் மற்றும் தேவைகளின் அடிப்படையில் பயிற்சிக்கு முன்னுரிமை அளிக்கவும்.
- அரச ஆதரவுகள்: அரசாங்க பயிற்சி திட்டங்கள் அல்லது மலிவான தனியார் நிறுவனங்களின் பயிற்சித்திட்டங்கள் குறித்து ஆராயுங்கள்.
- முறைசாரா கல்வி: ஊழியர்களிடையே அறிவு பகிர்வு மற்றும் வேலைப் பயிற்சி ஆகியவற்றை ஊக்குவியுங்கள். உங்கள் குழுவில் நீங்கள் மாதாந்த அமர்வுகளை நடத்த முடியும் என்பதோடு, ஒவ்வொருவரையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளக் கூடிய கற்றல்களைக் கொண்டு வருவதற்கு கூற முடியும்.
பதிவுகளைப் பேணுதல்:
- ஆவணங்களைப் பேணுதல்: தொழிலாளர் சட்டங்களுக்கு இணங்குவதை உறுதிசெய்ய ஊழியர்களுடனான ஒப்பந்தங்கள், அவர்களின் வரவு மற்றும் சம்பளங்கள் மற்றும் செயற்திறன் மதிப்புரைகளின் ஒழுங்கமைக்கப்பட்ட பதிவுகளை வைத்திருங்கள்.
மேலதிக குறிப்புக்கள்
- தொழில்நுட்பத்தில் ஆர்வம் காட்டுங்கள்: ஊதியம் மற்றும் நேரக் கட்டுப்பாடு போன்ற அடிப்படை கருமங்களை நிர்வகிக்க இலவச அல்லது குறைந்த விலை கொண்ட மனிதவள HR மென்பொருள் குறித்து ஆராயுங்கள்
- வழிகாட்டலை நாடுங்கள்: சிக்கலான சூழ்நிலைகளுக்கு சிறு மற்றும் நடுத்தர வியாபார அமைப்புக்ககளில் நிபுணத்துவம் பெற்ற மனிதவள ஆலோசகர்களிடமிருந்து ஆலோசனை பெறுவதை தொடர்பில் சிந்தியுங்கள்.
- பணி–வாழ்க்கை சமநிலையை ஊக்குவித்தல்: ஊழியர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் பளுவினைக் குறைப்பதற்கும் நெகிழ்வான பணி ஏற்பாடுகள் அல்லது குழந்தை பராமரிப்பு ஆதரவினை வழங்குதல்.
நினைவில் வைத்திருங்கள்
நேர்மறையான வேலைத்தளம் ஒன்றைக் கட்டமைப்பதானது ஒரு சிறு நிறுவனத்திற்கும், ஒரு அபிவிருத்தி அடைந்த நாட்டிற்கும் மிகவும் முக்கியத்துவமிக்கதாகும். ஊழியர்களை மரியாதையோடு நடாத்துவதோடு, அவர்களுக்கு வளர்வதற்கான வாய்ப்புக்களையும் ஏற்படுத்தி, சீரான தொடர்பாடல்களுக்கு வழிவகைளை செய்யுங்கள்.
இந்த அடிப்படையான மனிதவள முகாமைத்துவ நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம், உங்கள் வேலைளத்தளத்திற்கான ஆழமான அடித்தளம் ஒன்றினை நிறுவவும், நிறுவனத்திற்கு தேவையான ஆளுமைகளை கவர்வதற்கும் முடியுமாக இருக்கும்.