spot_imgspot_img

உங்கள் வணிகம் திறம்பட இயங்குகிறதா என்பதை எப்படி அறிவது?

ஒரு வணிகத்தை நடத்துவது மிகவும் இலகுவானதாக இருக்கும், இல்லையா? வருவாயை அதிகரிக்கச் செய்வதும், செலவுகளைக் குறைப்பதும், நேர்த்தியான இலாபத்தை அடையப்பெறுவதற்கு வழிகோலும். எனவே, அடிப்படையில், நீங்கள் கவனம் செலுத்த வேண்டியது எதுவெனில் தொடர்ந்து, நிலைபேறான வழியில் உங்கள் வருமானத்தையும் இலாபத்தையும் அதிகரிப்பதாகும்.

இது மிகவும் எளிமையான விடயமாகத் தோன்றினாலும், சில சமயங்களில் கிட்டத்தட்ட மிக இலகுவாக முன்னெடுக்கப்படலாம் என்றாலும், உங்கள் வணிகம் எவ்வளவு திறம்பட இயங்குகின்றது என்பதை அறிந்துகொள்ள நீங்கள் கருத்தில் கொள்ளக்கூடிய பல அளவுகோல் செயல்பாடுகள் உள்ளன. நீங்கள் வணிக செயல்பாட்டை திறம்பட முன்னெடுக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்த, பின்வரும் காரணிகளில் கூடுதல் கவனம் செலுத்தலாம்:

  • புதிய விற்பனைகளுக்கான வாய்ப்பு (எத்தனை புதிய விற்பனை வாய்ப்புகளை நீங்கள் பெறுகிறீர்கள், மாதாந்தம் அல்லது ஆண்டுதோறும் என்று வைத்துக் கொள்ளலாம்?)
  • புதிய விற்பனைகளை மேற்கொள்ளுதல் (எத்தனை புதிய விற்பனை வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டு, இறுதியில் உண்மையான விற்பனையாக மாற்றம் பெறுகிறது?)
  • பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை (குறிப்பிட்ட நேரத்தில் எத்தனை பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன? இது அதிகரித்து வருகிறதா அல்லது குறைகிறதா அல்லது தொடர்ந்தும் சீராக இருக்கிறதா?)
  • பரிவர்த்தனைகளின் அளவு (உங்கள் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை மாறினாலும், பரிவர்த்தனையின் சராசரி அளவைக் கருத்தில் கொண்டால், அளவு வேறு திசையில் பயணிக்கக்கூடும்)
  • ஒரு விற்பனைக்கான இலாப வரம்பு (வேறு ஒரு காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இன்று நீங்கள் ஒரு விற்பனைக்கு அதிகமாகவா அல்லது குறைவாகவா இலாபம் ஈட்டுகிறீர்களா?)
  • விலை அதிகரிப்புகள் (விலை அதிகரிப்புக்கு சந்தை தயாரா? உங்களுக்கு வேறு தெரிவு இல்லையா? போட்டியாளர்கள் என்ன செய்கிறார்கள்?)
  • இலாப-நட்ட சமநிலைப் புள்ளிகளைக் குறைத்தல் (இலாப-நட்ட சமநிலைப் புள்ளி என்பது ஈட்டுகின்ற ஒவ்வொரு கூடுதல் ரூபாவும் இலாபத்தை நோக்கிச் செல்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். உங்கள் வணிகம் அனுபவத்தின் மூலமாகக் கற்றுக்கொண்டு வளர்ச்சி காணும்போது, உங்கள் இலாப-நட்ட சமநிலைப் புள்ளியைக் குறைக்க முடிந்தால், நீங்கள் வணிகத்தை விஸ்தரிப்பதால் புதிய செலவுகள் மற்றும் தேவைகள் இருந்தாலும் உங்கள் இலாபத்தை நீங்கள் அதிகரிக்க முடியும்)
  • செலவு கூடிய செயல்பாடுகளை நீக்குதல் (அனைத்து செலவுகளும் சமமாக ஏற்படுத்தப்படுவதில்லை. வணிகத்தின் அனைத்து அம்சங்களிலும் உங்கள் மேலதிகாரிகள் தேவையற்ற செலவுகளைக் குறைப்பதன் மூலமும், செலவு குறைந்த – ஆனால் அதேநேரத்தில் தரத்தில் இணையான வகையில் விடயங்களைச் செய்வதற்கான வழிகளைக் கண்டுபிடிப்பதன் மூலமும் ஒவ்வொரு சேமிப்பையும் தொடர்ந்து தேடிக் கண்டறிய வேண்டும்)

ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, வெளிச்செல்லும் பணத்தை விட பண வரவு குறைவாக இருந்தால், நீங்கள் சற்று சிக்கலில் உள்ளீர்கள், ஏனெனில் உங்களது வணிகம் பணப் பற்றாக்குறைக்கு முகங்கொடுக்கும். பணப் பற்றாக்குறை இருப்பது ஒரளவுக்குப் பரவாயில்லை, சில நேரங்களில் வணிகங்கள் (குறிப்பாக அமெஸான் அல்லது ஊபெர் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள்) இந்த நிலைமையின் கீழ் நீண்ட காலத்திற்கு செயல்படுகின்றன, ஆனால் அது இறுதியில் தீர்த்து வைக்கப்படல் வேண்டும். இவ்வாறு தீர்த்து வைப்பது பற்று, கடன்கள், மூலதன முதலீடு போன்ற வடிவங்களில் இருக்கலாம்.

சிறந்த வருவாயை ஈட்டுங்கள், உங்கள் செலவுகளைக் குறைத்து, சிறந்த இலாபத்தை அடையப்பெறுங்கள். ஒரு சில தகவல் விபரங்களுடன் அதை எளிதாக முன்னெடுக்க முடியும்!

Get in Touch

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

spot_imgspot_img

Related Articles

spot_img

Get in Touch

Latest Posts

X