அண்மைய ஆய்வுகள் சில தெளிவான முடிவுகளை வெளிப்படுத்தியிருக்கின்றன. அதன்படி வேலைத்தளங்களில் உள்ள பணியாளர்கள் அபரிமிதமான அழுத்தங்களுக்கு முகம் கொடுப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறிய அல்லது நடுத்தர நிறுவனமாக (SME) இருந்த போதும், அல்லது நீங்கள் சிறு வியாபாரம் ஒன்றின் நிறுவனராக இருந்த போதும் அனைத்தும் பணியாளர்களில்/ஊழியர்களில் தங்கியிருக்கின்றது. இந்த சந்தர்ப்பத்தில் நீங்கள் பணி அழுத்தத்தினை எவ்வாறு இனம் கண்டு அதனை எவ்வாறு குறைப்பது?
பணி அழுத்தங்கள் தவிர்க்க முடியாதவை, ஆனால் நீங்கள் நிர்வாகம் செய்பவர்களாக இந்த சந்தர்ப்பத்தில் எவ்வாறு உங்களது ஊழியர்களுக்கு ஆதரவினை வழங்க முடியும் என்பதனை கவனிப்பது மிக முக்கியமானதாக காணப்படுகின்றது.
இந்த சந்தர்ப்பத்தில் நீங்களோ அல்லது உங்கள் முகாமைத்துவ அணியோ பணி அழுத்தம் தொடர்பில் காண்பிக்கும் கரிசணையானது, உங்கள் நிறுவனத்தின் கலாச்சாரம் குறித்தும் அதன் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பு குறித்தும் பறைசாற்றுவதாகவே அமையும். பணிவருகை மீதான ஈர்ப்பு, சிறந்த ஒன்றிணைப்பு மற்றும் பணிமீதான ஈடுபாடு என்பன நிறுவனத்தின் இசைவாகு தன்மையினை அதிகரிக்கும் என்பதோடு, சிறந்த வாடிக்கையாளர் சேவை அமைய காரணமாகும்.
உங்களை நீங்கள் அடுத்தவர் கோணத்தில் இருந்து அவதானிப்பது சிறந்த விடயங்களில் ஒன்றாகும். ஒருவர் அழுத்தத்திற்கு முகம் கொடுத்தால் நீங்கள் அதனை அவரது கோணத்தில் இருந்து பார்ப்பதானது அவரின் துன்பங்கள் குறித்து அறிய உதவியாக இருக்கும். (ஊழியர்களின்) பணிவருகை இது தொடர்பில் அவதானிக்க முக்கிய அளவுகோலாக காணப்படுகின்றது. இதன் வாயிலாக நாம் ஊழியர் ஒருவர் பணி வருகையில் காட்டும் ஆர்வம், அவர் சந்திப்புக்களில் பங்கேற்க காட்டும் ஆர்வம் என்பன குறித்தும் அறிய முடியும். அத்துடன் குறிப்பிட்ட ஊழியருடன் தனிப்பட்ட முறையில் பேசுவதும் சிறந்த முடிவுகளைத் தர முடியும்.
அவர்களின் வலிகளுக்கு அர்த்தம் வழங்குங்கள்
ஒரு தெளிவான கலந்துரையாடல் மூலம் நீங்கள் அவர்களின் வலியை அடையாளம் காண முடியும் என்பதோடு அவர்கள் தங்களைப் பற்றி பேசவும் ஊக்குவிக்கலாம். ”நானும் பணியழுத்தத்திற்கு முகம் கொடுத்துள்ளேன். ஆனால் உங்களுடையது வித்தியாசமானதாக இருக்கலாம், எனவே நீங்கள் இது பற்றி எனக்கு விளக்க முடிந்தால் சிறப்பு.” என வினாக்களை தொடுக்கலாம். அத்துடன் இது உங்கள் ஊழியரின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வைப் பற்றி நீங்கள் அக்கறை கொண்டுள்ளீர்கள் என்பதனை சொல்ல ஒரு நல்ல வாய்ப்பு, எனவே அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள். எந்த நிலையிலும் அவர்களின் வலியை அற்பமாக கருத வேண்டாம், அது அதனை அதிகரிக்கவே செய்யும்.
உண்மையாக உதவ முயலுங்கள்
நாம் எப்படி உதவ நினைக்கிறோம் என்பதும், எவ்வாறு உதவியாக இருக்கப் போகின்றோம் என்பதும் இரண்டு வெவ்வேறு விடயங்கள். நாம் இதனை அடையாளம் கண்டு பதில்களை வழங்க முடியும். ஊழியர்கள் தங்களின் மனப் பாரங்களை இறக்க நேரம் ஒதுக்குங்கள், அதேநேரம் தீர்வுகளை வழங்க முன் அவர்களின் கதையை பூரணமாகக் கேளுங்கள். உண்மைகளை சேகரிக்க முயற்சி எடுப்பதோடு, அது தொடர்பில் நாம் குறிப்பிட்ட பணியில் உள்ள மற்றொரு ஊழியருடனும் கலந்துரையாட முடியும். குறிப்பிட்ட ஊழியர்களுக்கும் ஒரே மாதிரியான துன்பங்கள் காணப்படலாம். அல்லது அவர்கள் துன்பங்களை வேறு வகையில் கையாளலாம்.
உதவியின் சிறந்த வடிவத்தினை கையாளுங்கள்
வேலையுடன் நேரடியாக தொடர்பில்லாத போதும் துன்பங்களை அனுபவித்தவர்கள் ஆறுதல் வழங்குவதற்கான சிறந்த நிலையில் உள்ளனர். சிறந்த நிர்வாகத் தலைவர்கள் அவர்களை ஒரு வழிகாட்டியுடன் இணைக்க முயற்சி செய்யலாம்.
குறிப்பிட்ட வேலையொன்றின் சிரமம் பற்றி நீங்கள் அதைச் செய்யும் சந்தர்ப்பத்தில் உங்களுக்குத் தெரியும். இது தொடர்பில் மேலும் அறிந்து கொள்ள குறிப்பிட்ட ஊழியர்களுடன் ஓரிரு நாட்கள் பணியாற்ற முடியும். “உங்களுக்கு ஒரு சுமை இருக்கிறது – நான் கொஞ்சம் உதவுகிறேன்” என கூறுவது ஊழியர்களின் சிரமங்கள் குறித்து உங்களுக்கு ஒரு பார்வையைத் தருவது மட்டுமல்லாமல், நிச்சயமாக ஒரு முதலாளியாக உங்களை மேம்படுத்தவும் செய்யும்.
இன்று மக்கள் தங்கள் பெரும்பாலான நேரத்தை வேலையில் செலவிடுவதோடு, சம்பளத்தை விட திருப்தி, நிம்மதி உணர்வு போன்றவற்றையே எதிர்பார்க்கின்றனர் என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம். எனவே உங்கள் பங்கு வேலையில் மட்டுமல்ல, பொது வாழ்க்கையிலும் அவர்களின் நல்வாழ்வுக்கு இன்றியமையாததாக இருக்கும். நீங்கள் மற்றவர்களுக்கு எவ்வாறு ஆதரவளிக்கிறீர்கள் என்பதைப் பற்றி தனித்துவமாக சிந்திப்பதன் மூலம் உங்கள் நிறுவனத்தில் சிறந்த வேலைக் கலாச்சாரத்தை உருவாக்க முடியும்.
>>>சொல்வதைச் செய்தல்: இலங்கையில் சுற்றுச்சூழல் முகாமைத்துவ கட்டமைப்புகளை அமுல்படுத்துதல்