spot_imgspot_img

சொல்வதைச் செய்தல்: இலங்கையில் சுற்றுச்சூழல் முகாமைத்துவ கட்டமைப்புகளை அமுல்படுத்துதல்

சுற்றுச்சூழல் முகாமைத்துவக் கட்டமைப்புகளின் கோட்பாடு சிக்கலானதாகவும் விசித்திரமாகவும் தோன்றலாம். இது சுருக்கமானதாகவும், உங்கள் அன்றாட வணிகத்தின் யதார்த்தங்களுடன் ஒப்பிடுகையில் நீண்ட இடைவெளி கொண்டதாக இருப்பதாகவும் தோன்றலாம். இருப்பினும் அனைத்து வணிகங்களும் சுற்றுச்சூழலுக்குள் செயல்படுகின்றன. அதனுடன் எந்தவொரு சிறிய வழியிலாவது தொடர்புபட்டுள்ளன. அந்த இடைச்செயற்பாடுகள் மற்றும் தாக்கங்களைப் புரிந்துகொள்வது மற்றும் நிர்வகிப்பது பல தொழில்துறைகளுக்கு கட்டாயமாகி வருகிறது. நீங்கள் தேடும் (அதிக மதிப்பு) சந்தைகள் மற்றும் வாடிக்கையாளர்களைப் பொறுத்து அவற்றின் கட்டாயம் அமைந்துள்ளது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இது மிகவும் மதிப்புமிக்க சந்தைகளைக் கைப்பற்றக்கூடிய வகையில், சிறப்பாக தயாராக்கப்பட்ட மற்றும் சிறந்த செயல்திறன் கொண்ட வணிகங்களின் தனித்துவத்திற்கான வேறுபாடாக உள்ளது.

இருப்பினும், செயல்படுத்துவதற்கு இது ஒன்றும் கடினமானது கிடையாது. தெளிவான புரிதலும் சரியான காரணிகளும் வெற்றிகரமான கட்டமைப்பை வடிவமைத்து செயல்படுத்த உதவும். உள்ளூர் நிறுவனங்களில் செயல்படுத்தப்பட்ட சுற்றுச்சூழல் முகாமைத்துவக் கட்டமைப்பு பற்றிய விபரங்களை இங்கே வழங்குகிறோம். இந்த எடுத்துக்காட்டுகள் மூலம் சுற்றுச்சூழல் முகாமைத்துவக் கட்டமைப்பின் சில அம்சங்கள் வெளிப்படும்.

உள்ளூர் வங்கியொன்றால் ஏற்றுக்கொள்ளக்கூடிய சுற்றுச்சூழல் மூலோபாயங்கள்:
  • எரிசக்தி-திறனுள்ள மின்விளக்கு தீர்வுகள் மற்றும் மாற்று எரிசக்தி வளங்களை ஆராய்வதன் மூலம் எரிசக்தி சேமிப்பு
  • காகித நுகர்வைக் குறைப்பதன் மூலம் காகிதக் கழிவுகளைக் குறைத்தல் மற்றும் முடிந்தவரை மற்றும் நடைமுறைச் சாத்தியத்தின் அடிப்படையில் மீள்சுழற்சி செய்வதை ஊக்குவித்தல்
  • காபன் அடிச்சுவட்டு கணிப்பீட்டு செயல்முறை எங்கள் செயல்திறனைக் கண்காணிக்கவும் மற்றும் தொழில்துறையில் உள்ள எங்கள் சகாக்களுக்கு எதிராக எங்கள் முன்னேற்றத்தை அளவிடவும் உதவும்
  • மரபு அல்லாத புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைக்கு நிலைபேண்தகு கடன் அல்லது பசுமைக் கடன்களை வழங்குதல் மற்றும் தனிநபர்களுக்கான பசுமை எரிசக்தி கடன் திட்டம்
  • சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வணிக நடைமுறைகளை நோக்கி நகரும் வகையில் வாடிக்கையாளர்களை ஈடுபடுத்துதல்
  • சுற்றுச்சூழல் சார்ந்த வர்த்தக சமூகப் பொறுப்புணர்வுத் திட்டங்கள் மூலமாக, காற்று, நீர் அல்லது பூமியின் இயற்கையான கலவைக்கு அழிவை ஏற்படுத்தக்கூடிய முக்கியமான சுற்றுச்சூழல் சவால்களைக் கண்டறிந்து அவற்றைத் தீர்த்தல்.
வங்கியால் கைக்கொள்ளப்பட்டுள்ள சமூக மூலோபாயங்கள் 
  • 360 பாகை நிலைபேற்றியல் திட்டத்தை கைக்கொள்வது. இது கூட்டாளர் ஈடுபாட்டின் பொறிமுறையுடன் ஆரம்பிக்கிறது. இங்கு முக்கிய நிலைபேற்றியல் போக்குகள் அடையாளம் காணப்படுகின்ற அதே நேரத்தில், அதிலிருந்து எழும் வாய்ப்புகள் மற்றும் அச்சுறுத்தல்கள் தீர்மானிக்கப்படுகின்றன.
  • சமூகத்தைப் பாதிக்கும் பரந்த முறையான சிக்கல்கள் மற்றும் சமூக-பொருளாதார சவால்களை எதிர்கொள்ளும் சமூக அக்கறையுள்ள வர்த்தக சமூகப் பொறுப்புணர்வு கட்டமைப்பைப் பயன்படுத்துதல்.
  • இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் அபிவிருத்தி வரைபடத்தின் ஒரு பகுதியான மில்லேனியம் அபிவிருத்தி இலக்குகள் மற்றும் நிலைபேண்தகு அபிவிருத்திக்கான 2030 நிகழ்ச்சி நிரல் ஆகியவற்றால் வங்கி வழிநடத்தப்படுகிறது.
  • சமூக அக்கறையுள்ள வர்த்தக சமூகப் பொறுப்புணர்வு கட்டமைப்பின் மூலம் பரந்த சமூக மக்கள் மத்தியில் நேர்மறையான மாற்றத்தைக் கொண்டுவருவதை வங்கி நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • வெளிப்படைத்தன்மை மற்றும் நல்லாட்சி, சமூக ஈடுபாடு மற்றும் பணியாளர் தன்னார்வத் தொண்டு.
இலங்கையில் உள்ள அரச நிறுவனங்களில் பயனுள்ள சுற்றுச்சூழல் முகாமைத்துவக் கட்டமைப்புக்களை ஸ்தாபிப்பதற்கான பரிந்துரைகள்
  • சுற்றுச்சூழல் முகாமைத்துவக் கட்டமைப்பை நிறுவுவது குறித்த முறையான பயிற்சி அரச துறை நிறுவனங்களின் அனைத்து தொடர்புடைய ஊழியர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் மற்றும் ISO 14001 பற்றிய முழுமையான அறிவும் வழங்கப்பட வேண்டும். இதில் சுற்றுச்சூழல் கொள்கையை எவ்வாறு வடிவமைப்பது மற்றும் ISO 14001 மாதிரிகளின் வழிகாட்டுதலின் கீழ் அதன் சாதனை ஆகியவை உள்ளடங்கும்.
  • சுற்றுச்சூழல் கொள்கையைத் திட்டமிடும் போது, பல்வேறு வகையான மாசடைதலைத் தடுப்பது, தொடர்புடைய சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு இணங்குதல், தொடர்ச்சியான முன்னேற்றம் போன்ற தேவையான கூறுகள் சேர்க்கப்பட வேண்டும். மேலும் அது தொடர்புடைய அனைத்து உட்தரப்பு மற்றும் வெளித்தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் வகையில் வெளியிடப்பட வேண்டும்.
  • நிறுவனங்களின் நிறுவன கட்டமைப்பின் பல்வேறு பதவிநிலைகளை உள்ளடக்கிய முறையான சுற்றுச்சூழல் பணிக்குழுக்கள் உருவாக்கப்பட வேண்டும்.
  • அதன் சுற்றுச்சூழல் முகாமைத்துவக் கட்டமைப்பைச் செயல்படுத்தல் பற்றிய தொடர்ச்சியான கணக்காய்வுகள் மற்றும் மதிப்பாய்வுகள் சரியான நேரத்தில் அவ்வப்போது செய்யப்பட வேண்டும்.
  • அனைத்து சுற்றுச்சூழல் திட்டங்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் சுற்றுச்சூழல் அதிகாரி பதவியை நிறுவுதல் வேண்டும்.
  • நிறுவனத்தின் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும் காப்பதற்கும் ஊழியர்களின் மனப்பான்மை மேம்படுத்தப்பட வேண்டும், அதே சமயம் அதைத் தாங்கும் பதவியின் பணிக்கடமையின் ஒரு பகுதியாகக் கருத வேண்டும் (குணவர்தன மற்றும் ஜெயவிக்ரம, 2015 இல் நடத்திய கல்வியியல் ஆய்வின் அடிப்படையில்)

Get in Touch

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

spot_imgspot_img

Related Articles

spot_img

Get in Touch

Latest Posts

X