நாம் அனைவரும் தற்போது மிகவும் சவாலான காலகட்டத்தில் உள்ளோம். உங்கள் ஊழியர்கள் தற்போது தமது வேலையில் முன்பைவிட கவனத்தை இழப்பதாக உங்களால் உணரக்கூடியதாக இருக்கும். அவர்கள் விரைவாக சோர்வடையக்கூடும் என்பதுடன் சில சமயங்களில் விரக்தியடைந்தவர்களாகவும் தோன்றலாம். சேவை வழங்குனர் என்ற வகையில் இது உங்களுக்கு ஒரு பிரச்சினையாக இருக்கலாம். இந்த நிலையை கடந்து செல்வதற்கும், ஊழியர்களை ஊக்குவிப்பதற்கும், நீங்கள் கூற வேண்டிய மற்றும் செய்ய வேண்டிய விடயங்கள் சில கீழே தரப்பட்டுள்ளன.
சவாலான காலத்தில் ஊழியர்கள் ஊக்குவிப்பு மற்றும் அவர்களுடன் தொடர்புகளை பேணுதல்
இத்தகைய காலகட்டத்தில் ஊழியர்கள் ஊக்குவித்தலையே அதிகம் விரும்புகின்றனர். ஒருவருக்கு தனது பிரச்சினையின்போது தனிமைப்படுத்தப்பட்டு விட்டதாக தோன்றலாம். சில சமயங்களில் தாம் போதுமான அளவு பங்களிப்பு வழங்கவில்லை என்றோ அல்லது தாம் மற்றவர்கள் எதிர்பார்க்கும் வகையில் வாழவில்லை என்பதையும் உணரலாம். உயர் அதிகாரியாக, அவர்கள் தனிமைப்படவில்லை என்பதை காண்பிப்பதற்கு, அவர்கள் சவால்கள் தொடர்பாக கலந்துரையாடுங்கள். அவர்களுக்கு தீர்வுகளை வழங்குங்கள். அவர்களது மனதை ஒருநிலைப்படுத்துவதற்காக வேறு உள்ளக செயற்பாடுகளில் அவர்களை இணைத்துக் கொள்ளுங்கள்.
சவாலான காலத்தில் அவர்களுக்கு பொறுப்புகளை வழங்குவதன் மூலம் அவர்களுக்குள் நம்பிக்கையை வளர்த்திடுங்கள்
உங்கள் பணியாளர்களை அவர்களின் திறன்களை வளர்த்துக் கொள்வதற்கு இடமளிப்பதன் மூலம் நீங்கள் அவர்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளீர்கள் என்பதை அவர்களுக்கு காட்டுங்கள். புது திறன்களைப் பயில அவர்களை ஊக்குவியுங்கள். கல்வி வாய்ப்புகள் மற்றும் ஒன்லைன் பயிற்சிகளை அவர்களுக்கு வழங்குங்கள். அவர்களுக்கு பதவி உயர்வுகளை வழங்குங்கள். இது மற்றவர்களையும் ஊக்குவிக்கும். நாடு பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வருகிறது என்ற எண்ணம் ஊழியர்களுக்கு இப்போது இருக்கலாம். எனவே, அவர்கள் இந்த யோசனைகளை முன்வைக்கும்போது, அவற்றை நிராகரிப்பதை விட, அவை செயல்பாட்டில் இருக்கும் வகையில் அவர்களுக்கு உதவுவதும் ஆதரவளிப்பதும் மிகவும் பொருத்தமானது.
நன்மைகள் மற்றும் வெகுமதிகளைப் பற்றி விவாதியுங்கள்
உங்கள் ஊழியர்களுக்கு நீங்கள் வழங்கும் நன்மைகள் அவர்களின் உணர்ச்சித் தேவைகளுடன் பொருந்த வேண்டும் என்பதுடன் அவர்கள் பெறும் பணத்திற்கு அப்பாற்பட்டதாக அது இருத்தல் வேண்டும். இந்த நேரத்தில், நீங்கள் செலுத்தும் சம்பளம் டொலருடன் தொடர்புடையதாக இருக்காது என்பதால், உங்கள் ஊழியர்களின் வாழ்க்கைச் செலவின் சுமையிலிருந்து அவர்கள் விடுவித்துக் கொள்ள நீங்கள் எவ்வாறு உதவலாம் என்பதைப் பாருங்கள். சில நேரங்களில் நீங்கள் வீட்டிலிருந்து வேலை செய்யலாம். இதனால் பயணச் செலவுகளுக்கான பணத்தை மீதப்படுத்தலாம். அவ்வாறு இல்லையெனின், நிறுவனத்தின் நலனை மனதில் வைத்து, இந்த சூழ்நிலையில் அவர்களுக்கு நிதி ரீதியாக நன்மைகளை வழங்கும் வழிகளை நீங்கள் சிந்திக்கலாம்.
இந்த முறைகளை முயற்சித்து, இதற்கு உங்கள் ஊழியர்கள் எவ்வாறு பதிலளிக்கின்றார்கள் என்பதை பாருங்கள். இவை முன்னோடியில்லாத சூழ்நிலைகள் என்பதை நினைவில் கொள்ளுங்கள், இந்த நாட்களில் பரிசோதனையே சிறந்த அணுகுமுறை என்பதை ஞாபகத்தில் வைத்திருங்கள்.
நீங்களும் உங்கள் குழுவும் எடுத்த செயல்களைப் பற்றி கீழே எம்முடன் பகிர்ந்து கொள்ளுமாறு உங்களுக்கு அன்புடன் அழைப்பு விடுக்கின்றோம்.
சவாலான காலகட்டத்தில் ஊழியர்கள் ஊக்குவிப்பு பற்றிய மேலதிக தகவல்களை திரிய இணையத்தளத்தில் பார்க்கலாம்.