spot_imgspot_img

சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவர் தாம் எதிர்நோக்கும் தடைகளை வெல்வதற்கான உத்திகள்

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி முன்னொருபோதும் இல்லாதது. இது வியாபார நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டையாக உள்ளது. ஆனால் உங்களிடமுள்ள தொழில்முனைவர் கருத்துக்களை கைவிட்டுவிட்டு அதற்கு பதிலாக சிந்தித்து புத்திசாதுர்யமாக செயற்பட வேண்டியது அவசியம். நீங்கள் பொருளாதார தடைகளை சமாளித்து நிலைத்தன்மையை பராமரிக்க விரும்பினால், நீங்கள் செய்ய வேண்டிய விடயங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

தொழில்முனைவர் சுதந்திர மனநிலையுடன் இருங்கள்

வியாபாரமானது கடனற்ற மாதிரியை நோக்கி நகர வேண்டும். இது ஒரு பெரிய முயற்சியாகும். அது பல்வேறு சந்தர்ப்பங்களில் கோரிக்கைகள் மற்றும் வாய்ப்புகள் நிராகரிப்பு போன்ற சவால் நிறைந்த காரணிகளை கொண்டதாக இருக்கும். பல்வேறு சந்தர்ப்பங்கள் மற்றும் கோரிக்கைகள் உங்களிடம் வரும்போது அது தகுதியானது என தோன்றினாலும் உங்கள் வளங்கள் அதன்மூலம் பாதிக்கப்படலாம்.

தொழில்முனைவர் எப்போதும் ஒரு நோக்கத்தை கொண்டிருங்கள்

தலைவர்களுக்கு எதிர்காலம் குறித்த தொலைநோக்குப் பார்வை இருக்க வேண்டும். நெருக்கடியின் மத்தியில் கால்கள் சேற்றில் சிக்கிக் கொள்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. ஆனால் பிரதம நிறைவேற்று அதிகாரியாக, உங்கள் நிறுவனத்தின் வியாபார நடவடிக்கைகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வற்கான நோக்கு உங்களிடம் காணப்பட வேண்டும். உங்கள் குழுவுக்கு வலுவான தலைவராக இருப்பதன் மூலம், எதிர்காலத்திற்கான நோக்குடன் நீங்களும் உங்கள் நிறுவனமும் எந்தவொரு கடினமான பொருளாதாரத்தையும் சமாளித்து வெற்றி பெறலாம்.

கடினமான முடிவுகளை எடுக்க தயாராகுங்கள்

நீங்களும் உங்கள் நிறுவனமும் கடினமான பொருளாதார நெருக்கடியை கடக்க விரும்பினால், நீங்கள் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். நீங்கள் பணியமர்த்துபவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு அல்லது இந்த சந்தர்ப்பத்தில் புதிய உற்பத்திகளை அறிமுகப்படுத்தாதிருக்க தீர்மானித்திருக்கலாம். ஊழியர்கள் பலருக்கு செல்வதற்கு அனுமதி வழங்கல் அல்லது அடுத்த புதிய உற்பத்தி தொடர்பாக ஆய்வுகளை நடத்துதல் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை இடைநிறுத்துவது கடினமானதாக இருந்தபோதிலும், உங்கள் நிறுவன நலன் தொடர்பாகவே உங்கள் முழுமையான சிந்தனையை கொண்டிருத்தல் வேண்டும். இது உங்கள் வாழ்வாதாரம் மட்டுமல்ல உங்கள் குடும்பம், உங்கள் எதிர்காலம் மற்றும் உங்கள் பணியாளர்களுக்கு ஒரு வாழ்வாதாரமாகும்.

செலவுகளை குறைத்தல்

இந்த காலத்தில் முடிந்தளவு செலவுகளை குறையுங்கள். உங்கள் ஊழியர்களின் நிலைமையை புரிந்துகொண்டு செலவுகளை குறைத்தால் அதன்மூலம் தொழில் இழப்பினை தடுக்கக்கூடியதாக அமையும். உங்கள் நிறுவனம் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படாத வகையில் உங்கள் கவனத்தை செலுத்துங்கள்.

இவை எதுவும் இலகுவானதல்ல. ஆனால் தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் வியாபாரத்தை நீங்கள் உண்மையிலேயே உருவாக்க விரும்பினால், இந்த வழிமுறைகள் உங்களை இலக்கு நோக்கி கொண்டு செல்லும்.

சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவர் தாம் எதிர்நோக்கும் தடைகளை வெல்வதற்கான உத்திகள் பற்றிய மேலதிக தகவல்களை திரிய இணையத்தளத்தில் பார்க்கலாம்.

Get in Touch

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

spot_imgspot_img

Related Articles

spot_img

Get in Touch

Latest Posts

X