இலங்கை தற்போது பொருளாதார நெருக்கடியில் உள்ளது. உலகமும் பொருளாதாரத்தின் மந்தநிலையில் சென்று கொண்டிருக்கிறது. இதுபோன்ற சமயங்களில் உங்கள் சிறு மற்றும் நடுத்தர வியாபாரங்களின் அளவை குறைப்பதே வியாபாரத்தை தொடர்ந்து முன்னெடுக்க சிறந்த வழியாகத் தோன்றலாம். இருப்பினும் இதைச் செய்வது எப்போதுமே எளிதானல்ல. பொதுவாக நீங்கள் ஊழியர்களை குறைத்தல், சம்பளத்தை குறைத்தல், செயற்பாட்டு செலவுகளைக் கணிசமான குறைத்தல் போன்றவற்றை செய்ய வேண்டி வரலாம். உங்கள் வியாபாரத்திற்கு பயனளிக்கும் அதேநேரம் செலவினங்களை கட்டுபடுத்தும் சில வழிகள் இங்கே உள்ளன.
முடிந்தவரை வேலைகளின் அளவை வெளிநபர்களிடம் ஒப்படையுங்கள்
உங்களுக்கு உங்கள் சிறு மற்றும் நடுத்தர வியாபாரத்தில் தரித்து நிற்பதற்கு முடியாத அளவு உங்கள் வியாபாரம் பெரிதாவதை காண்பீர்களாயின், உங்கள் பணிகளை வெளிநபர்களிடம் ஒப்படைத்து சேவைகளைப் பெற்றுக் கொள்வது சிறந்த வழியாகும். இணைய வழி விற்பனையாளர்கள், கணக்காளர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் பிறருக்கு வேலைகளை வழங்குவதன் மூலம் செயல்பாட்டில் உள்ள பிற சிறு வர்த்தகர்களை உங்களுடன் இணைத்துக் கொள்ளலாம். அந்த வகையில் உங்கள் வியாபாரத்தில் பணியாளர்களை விரிவுபடுத்தாமல் தொழில்முறை பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம்.
வர்த்தக நடவடிக்கைக்கான நேரத்தின் அளவை குறைத்தல்
ஒவ்வொரு வாரமும் எத்தனை நாட்கள் அல்லது மணிநேரம் உங்கள் விற்பனையகம் திறந்திருக்கும் என்பதை தீர்மானித்தால், தேவையற்ற நேரங்களை குறைக்கலாம். உதாரணமாக திங்கட்கிழமை செயற்திறன் மற்றும் இலாபம் குறைவாக இருந்தால், திங்கட்கிழமை அதனை திறக்காமல் இருப்பது நல்லது. இல்லாவிடின் ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் கடையை மூடலாம். உங்கள் வியாபாரத்தில் காலை நேரங்களில் வியாபாரம் மிகவும் மெதுவாக நடந்தால், காலை 9:00 மணிக்கு பதிலாக காலை 10:00 மணிக்கு திறப்பது உங்களுக்கு அதிக இலாபம் தருவதாக அமையும். இத்தகைய நடவடிக்கைகள் பணியாளர்களின் மன அழுத்தத்தை குறைப்பதற்கும் உதவும்.
குறைவான தயாரிப்புகள் மற்றும் அதிக சேவைகளை வழங்குங்கள்
உங்கள் வியாபாரத்தை அளவிடுவதற்கு நீங்கள் வழங்கும் தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் அளவை குறைப்பதும் சிறந்த வழிமுறையாகும். உங்கள் வியாபாரத்தை ஒருங்கிணைப்பதன் மூலம் இதனை எளிதாக மேற்கொள்ளலாம். இதற்கான அணுகுமுறை உங்கள் தொழிலின் தன்மையைப் பொறுத்தே அமையும். உங்கள் வியாபாரத்தில் குறைந்த அளவிலான தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குவதால் மிகப் பெரும் பயனை அடையலாம். இதன்மூலம் உங்கள் வாடிக்கையாளர்களுக்கு, உங்கள் குழுவினரால் சிறந்த சேவையை வழங்க முடியும். சிறந்த நிபுணத்துவம் குறைவான வாடிக்கையாளர்கள் இடையே அதிக வருவாயைக் கொண்டுவரும் வழிவகுக்கும் என்பதை நீங்கள் காணலாம்.
சிறப்புத் தேர்ச்சி மிக்க ஊழியர்கள்
உங்கள் பணியாளருக்கு நிறுவனத்தின் சூழ்நிலையை விளக்கிக் கூறுங்கள். நிறுவனத்தை இலாபகரமாக வைத்திருக்கவும், அவர்கள் தமது வேலைகளில் தொடர்ந்து இருப்பதற்கு, அவர்களுக்கு புதிய பிரிவுகளை வழங்குங்கள். இது தொழில் வளர்ச்சி மற்றும் ஊக்கமாக இருக்கும். இது எதிர்காலங்களில் பதவி உயர்வுகளுக்கு வழிவகுக்கும். இத்தகைய அதிக பொறுப்புகளை அவர்களுக்கு வழங்குவதன் ஊடாக எதிர்காலத்தில் பணியாளர்களின் திறன் மற்றும் தொழில் பாதை ஊக்குவிப்பு போன்றவற்றுக்கான சிறந்த வழியாகும். இத்தகைய சூழல்களில் நிறுவனமும் ஊழியர்களும் முன்னேற்ற பாதையை நோக்கி செல்லலாம்.
நிச்சயமாக சில நேரங்களில் உங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கு மாறாக, சில பணியாளர்களை பணியை விட்டு அனுப்பலாம். ஆனால் நீங்கள் அவ்வாறு செய்வதற்கு முன்னர் மேற்கூறியவற்றை கவனத்திற் கொள்வது நன்று.
நெருக்கடியில் சிறு மற்றும் நடுத்தர வியாபார அளவை எவ்வாறு குறைப்பது என்பது பற்றிய மேலதிக தகவல்களை திரிய இணையத்தளத்தில் பார்க்கலாம்.