- நேர்முகப் பரீட்சையில் நீங்கள் சேர்த்துக் கொள்ள வேண்டிய முக்கியமான கேள்விகள்
- ஒவ்வொரு கேள்வியும் விண்ணப்பதாரர் பற்றி உங்களுக்கு தெரியப்படுத்தும்
- நீங்கள் விண்ணப்பதாரர் தொடர்பாக முடிவெடுப்பதற்கு ஒவ்வொரு கேள்வியும் எவ்வாறு பங்களிப்பு செய்யும்
வேலைக்கான நேர்முகப்பரீட்சையானது உரையாடல் போன்று இருக்க வேண்டும். இரண்டு பேர் கேள்விகளைக் கேட்டும் அதற்கு பதலளி;த்தவாறும் இருப்பர். நேர்முகப்பரீட்சைக்கான கேள்விகள் ஊடாக தகுதியான பணியாளர்கள் மற்றும் அவர்களின் தொழில்முறை தகுதிகள் மற்றும் ஆளுமைகளைப் பற்றி அறிய ஒரு வாய்ப்பாக அமைகின்றது. நேர்முகப்பரீட்சை வெற்றிகரமாக அமைய வேண்டுமாயின், பயனுள்ள கேள்விகளைக் கேட்பது மிகவும் முக்கியமானது. நீங்கள் பணியாளர்களைத் தேடுவீர்களெனின், நேர்முகப் பரீட்சைக்கு முன்னர் கேள்விகளைத் தயாரித்து பயிற்சி செய்வது பயனுள்ளதாக இருக்கும். உங்களில் பெரும்பாலோருக்கு இந்தக் கேள்விகள் ஏற்கனவே பரீச்சியமானது என்ற போதிலும், இக்கேள்விகளின் பின்னாலுள்ள நோக்கத்தை கண்டறிவது முக்கியமானதாகும்.
உங்கள் மனதில் நினைவு கொள்ள வேண்டிய சில முக்கிய கேள்விகளைப் பார்ப்போம்.
01) உங்களைப் பற்றி சற்று கூற முடியுமா?
இந்தக் கேள்வியானது, விண்ணப்பதாரரின் பொதுவான தொழில்முறை பின்னணி மற்றும் தனிப்பட்ட நலன் சார்ந்த விடயங்களை விளக்குவதற்கு தூண்டுகிறது. உங்களிடம் தொழில் பெற விண்ணப்பித்தவர் தொடர்பான அடிப்படைப் புரிதலைப் பெற, ஒரு நேர்முகப்பரீட்சையில் முதலில் இந்தக் கேள்வியைக் கேட்கலாம். பொதுவாக இந்தக் கேள்விக்கான பதிலைத் விண்ணப்பதாரர்கள் கைவசம் வைத்திருப்பார்கள். அது அவர்களது தற்போதைய தொழில், தாம் ஆற்றிய பங்கு மற்றும் தொழில்சார் இலக்குகளை தெரியப்படுத்தும். இந்தக் கேள்வியானது, பின்னர் நீங்கள் கேட்கப் போகும் முக்கிய கேள்விகளுக்கு ஆரம்பமாக அமையும் என்பதையும் நினைவில் வைத்திருங்கள்.
02) உங்களை வெற்றியை நோக்கி தூண்டுவது என்ன?
இந்தக் கேள்வியானது, உங்கள் நிறுவனத்திற்கு வேலை செய்ய தயாராகவுள்ள உங்கள் விண்ணப்பதாரரின் சிறப்பான அர்ப்பணிப்பை அளவிடும் கோலாகும். சக மனிதர்களுக்கு உதவுதல், புதிய விடயங்களை கற்றுக்கொள்வது, நிறுவன அமைப்புகளைப் பயன்படுத்துதல் அல்லது மற்றவர்களுடன் ஒத்துழைத்து செயற்படுவதால் கிடைக்கும் வெற்றிகள் தொடர்பாக தாங்கள் அதிகம் ஆர்வமுள்ள காரணங்களை இந்த கேள்விக்கு பதலளிப்பதன் ஊடாக விண்ணப்பதாரர்கள் தெரிவிக்கக்கூடும்.
03) நீங்கள் மன அழுத்தத்தை எவ்வாறு கையாள்வீர்கள்?
தமக்கு வழங்கப்பட்ட ஒரு சவாலான பணியை நிறைவு செய்ய, தமக்கான கால அவகாசத்தில் அதனை முடிக்க அல்லது புதிய திறன்;களை கற்றுக்கொள்ள ஊழியர்கள் மன அழுத்தத்தை உணரக்கூடும். எனவே ஊழியர்கள் மன அழுத்தத்தை நன்கு கையாண்டு அதிலிருந்து மீள வேண்டும். அதாவது போதிய இடைவேளை எடுப்பது, ஆழ்ந்து சுவாசித்தல் அல்லது இன்னொருவரிடம் உதவி கேட்பது போன்ற நடவடிக்கைகளை இதற்கு பதிலாக கொள்ள முடியும்.
04) உங்கள் நண்பர்கள் மற்றும் சக பணியாளர்கள் உங்களை எப்படி விவரிப்பார்கள் என நினைக்கின்றீர்கள்?
உங்கள் விண்ணப்பதாரரின் பல்வேறு வகையான கண்ணோட்டங்கள் மற்றும் அவர்களின் பணி நெறிமுறைகள் பற்றி தெரிந்துக் கொள்ள இந்த கேள்வியைக் கேட்டுப் பாருங்கள். ஒரு விண்ணப்பதாரர் தமது நண்பர்கள் மற்றும் சக பணியாளர்கள் தான் எவ்வளவு அன்பானவன், கடின உழைப்பாளி மற்றும் அனைத்து விடயங்களுக்கும் கவனம் செலுத்துபவர் என கூறுவதாக இந்த கேள்விக்கு அவர் பதிலளிக்கக்கூடும். இது அவர்களின் ஆளுமை பற்றிய மேலதிக தகவல்களை உங்களுக்கு தரக்கூடும்.
விண்ணப்பதாரியிடம் நீங்கள் கேட்கும் கேள்விகள் ஒரு தொழிலில் அவர் வகித்த பாத்திரத்திலிருந்து இன்னொரு தொழிலின் பாத்திரத்திற்கு வேறுபடும். அதுதவிர உங்கள் நிறுவனத்தின் கலாச்சாரம் மற்றும் கொள்கைகளின் அடிப்படையிலும் மாற்றமடையும். இருந்தபோதிலும் மேலே குறிப்பிட்டுள்ள இந்த அடிப்படைக் கேள்விகளில் சிலவற்றைக் கேட்பது உங்கள் விண்ணப்பதாரரிடமிருந்து சிறந்த தரவுகளைச் சேகரிக்க உதவும். பின்னர் நீங்கள் ஒரு நல்ல முடிவை எடுக்க இவற்றை பகுப்பாய்வு செய்யலாம்.