உங்கள் வியாபாரத்தில் வீட்டிலிருந்து பணியாற்றும் ஊழியர்கள் எவ்வாறு நிர்வகிக்கப்படுகிறார்கள் என்பது அதன் வளர்ச்சியில் தாக்கம் செலுத்தும் முக்கிய காரணியாகும். இங்கு சரியாக வேலை நடைபெறவில்லை எனில் உற்பத்தித் திறன் மட்டுமன்றி இது பணியாளர்களின் மன உறுதியையும் பாதிக்கக் கூடும் என்பதை நினைவில் வைத்திருங்கள். உங்கள் வியாபாரத்தின் வெற்றியானது வீட்டிலிருந்து பணிபுரியும் ஊழியர்களின் நம்பிக்கையை உருவாக்குவதோடு அவர்களின் ஈடுபாட்டையும் அதிகரிக்கச் செய்யும். ஊழியர்களை இலக்காகக் கொண்ட சவால்மிக்க செயற்பாட்டை திறமையாக எதிர்கொள்வதற்கான வழிமுறைகளைக் கொண்ட சுருக்கமான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
எதிர்பார்ப்புகளை உரிய நேரம் மற்றும் திட்டத்துடன் அமைத்துக் கொள்ளுங்கள்
நீங்கள் செயற்திட்டங்களை அமைக்கும்போது வழிகாட்டல்கள், விதிமுறைகள், அடிப்படை மதிப்பாய்வு போன்றவற்றை ஊழியர்களுக்கு வழங்குவதில் அதிக கவனம் செலுத்துங்கள். அவர்களுக்கு ஏற்படும் வியாபார ரீதியான சந்தேகங்கள், கேள்விகளுக்கு துல்லியமாகவும்> தெளிவாகவும் விடை கொடுப்பதற்கு தயாராக இருங்கள். அத்துடன் ஊழியர்களுக்கு எதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும், மைல்கற்கள் எவை? செயல்திறன் இலக்குகள் எவை? போன்றவற்றை தெளிவாக விவரியுங்கள். ஒவ்வொரு குழு உறுப்பினரையும் எவ்வாறு அணுக முடியும் என்ற வழிகாட்டல்களை அவர்களுக்கு வழங்கி தொடர்புகளை ஏற்படுத்துங்கள். நிறுவனத்தைப் போலவே முகாமையாளர்களுக்கும் அவர்களுக்கான கொள்கைகள், பணியாளர் மாற்றங்கள்> நிறுவனத்தின் வெற்றிகள் மற்றும் வீட்டில் வேலை செய்வதற்கான உதவிக் குறிப்புகள் குறித்த மாற்ற விதிகளை உடனுக்குடன் புதுப்பிப்பதற்கான அறிவுரைகளை வழங்க வேண்டும். இது பணியாளர்களின் தொழில் மற்றும் குடும்ப சமநிலையை பேணுவதற்கு உதவுவதோடு அவசியமற்ற குழப்பங்கள், தெளிவின்மையை போக்கி முழுமையான ஈடுபாட்டுடன் அலுவலக மற்றும் வீட்டு வேலைகளை ஒழுங்காக, அதற்கான நேர அடிப்படையில் வீட்டிலிருந்து செய்ய உதவியாக இருக்கும்.
ஊழியர்களை ஊக்குவித்து அவர்களிடம் அதிக நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள்
உங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்து பணியாற்றும்போது அலுவலகத்தில் வேலை செய்வதைப் போன்று நேரடியாக கண்காணிக்க முடியாது. எனினும் இதனால் அவர்கள் வேலை செய்யவில்லை என்று சந்தேகப்பட முடியாது. உங்களுக்கு அவர்கள் மீது அவநம்பிக்கை ஏற்படும் பட்சத்தில் நீங்கள் முதலில் அவர்களை ஏன் வேலைக்கு அமர்த்துனீர்கள் என்பதையோ அல்லது அவர்கள் மீதான அவநம்பிக்கைகான காரணத்தை முதலில் ஆராயுங்கள். இத்தகைய சந்தர்ப்பங்களில், பணியாளர்கள் மீது அவநம்பிக்கை ஏற்படும் பட்சத்தில் நீங்கள் தொலைதூர பணி மேற்பார்வையாளராக செயல்பட வேண்டிய தேவை ஏற்படுகிறது. சவால் மிக்க இச் செயற்பாட்டில் நீங்கள் உங்கள் பணியாளர்களைப் பற்றியும், அவர்கள் தனிப்பட்ட தேவைகளை அடையாளம் கண்டு கொள்வதுடன், அவர்களுடனான தகவல் தொடர்பாடல்களை அதிகரிப்பது போன்றவற்றின் மூலம் பணியாளர் நலன்களில் உறுதுணையாக இருப்பதோடு அவர்கள் மீதான நம்பிக்கையையும் வளர்த்துக்கொள்ள முடியும்.
உங்கள் பணியாளர்களை தனித்துவம் மிக்கவர்களாக நடத்துங்கள்
வெற்றிகரமான வியாபாரங்களில் அதன் முகாமைத்துவமானது பணிபுரியும் நபர்களின் பலம்> பலவீனம் மற்றும் அவர்களது தேவைகள் போன்ற தகவல்களை நன்கு அறிந்து இருப்பதன் மூலம் அவற்றைப் பயன்படுத்தி அவர்களது வளர்ச்சிக்கு உதவுவதுடன் அவர்களை ஊக்குவிக்க முடியும். இந்த முகாமைத்துவ செயற்பாட்டையே தொலைதூர பணியின் போதும் அதன் சீரான செயற்பாட்டை கண்காணிப்பதற்கு பயன்படுத்தலாம். உதாரணமாக> உங்களிடம் 12 உறுப்பினர்கள் கொண்ட ஒரு குழு இருந்தால் அவர்கள் ஒவ்வொருவரதும் தனிப்பட்ட தேவைகளை தெரிந்து இருப்பதோடு அவர்கள் ஒவ்வொருவரது தேவையும் வேறு வேறானவை என்பதை உணர வேண்டும். இவர்களில் சிலர் காலை நேரத்தில் வேலை செய்யதையும்> சிலர் இரவு நேரங்களில் வேலை செய்வதையும் பெரிதும் விரும்புவதாக இருக்கலாம். எனவே அவர்களது தனித்துவத்தை மதிப்பளித்து அதற்கேற்ப செயல்பட அனுமதிக்க வேண்டும். அவர்கள் தங்கள் பணி முடிந்தவுடன் அவர்களை தனி நபர்களாக கருத வேண்டும். இவ்வாறான முகாமைத்துவ முடிவுகளால் சிறப்பான பலனை பெறலாம்.
வீட்டிலிருந்து வேலை செய்யும் உங்கள் ஊழியர்களை நீங்கள் நிர்வகிக்கும் போது நீங்கள் பின்பற்றக்கூடிய மூன்று அடிப்படை மூல உபாயங்கள் இவையே. இந்த செயல்முறை சவால் மிக்கதாயினும் சரியான செயல்படுத்தல் மற்றும் திட்டமிடல் மூலம் நீங்கள் பல சாதகமான பலன்களை அனுபவிக்க முடியும்.