spot_imgspot_img

சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் பின்பற்றக்கூடிய சிறந்த செயல்முறைகள்

கொரோனா தொற்றின் விளைவுகள் மற்றும் பாதிப்புகள் உலகளாவிய வர்த்தகத்தில்; இன்றுவரை தொடர்ந்த வண்ணமுள்ளன. இத்தகையதொரு நிலைமையில் நாளாந்தம் மாற்றமடைந்து வருகின்ற வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை டிஜிட்டல் உலகிற்கு உடனடியாக மாற்றியமைப்பது என்பது மிகவும் சவாலானதும் கடினமானதுமான செயற்பாடாகும். எனினும் இந்நோயின் விளைவானது உலகளாவிய ரீதியில் வர்த்தகத்தில் பாதிப்பை ஏற்படுத்தினாலும் ஒரு சில வர்த்தகங்களின் வளர்ச்சிக்கும் அவை ஏதுவாக அமைந்துள்ளதை காண முடியும். இன்று சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் பொருளாதாரத்தில் அதிகார செய்வதோடு அந்த செயற்பாடானது பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் அவசியமான ஒன்றாக அமைந்துள்ளது. உங்கள் சிறிய மற்றும் நடுத்தர தொழில்களின் வளர்ச்சி மற்றும் வெற்றிக்கு உறுதுணையாகக்கூடிய சில வழிமுறைகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.

சந்தைப்படுத்தல் மற்றும் அவற்றிற்கான திட்டங்களில் கவனம் செலுத்தல்

வர்த்தகத்தை பொறுத்தமட்டில் உங்கள் வாடிக்கையாளர்களே முதன்மையானவர்கள். அவர்களை ஈர்த்து அவர்கள் தேவையறிந்து> அந்த தேவைகளுக்கேற்ப சேவை செய்வதே உங்கள் முதன்மை பணியாக இருத்தல் வேண்டும். இதில் சந்தைப்படுத்தல் மிகப்பெரிய பங்கு வகிக்கின்றது. இவ்வாறு செயல்படுகையில் உங்கள் போட்டியாளர்களிடம் இருந்து நீங்கள் வேறுபட்டு இருப்பீர்கள். நீங்கள் தங்கள் மீது அதிக அக்கறை கொண்டவர்களாக வாடிக்கையாளர்களுக்கு தென்படுவீர்கள் இதனால் உங்கள் வர்த்தக நாம குறியீடு வாடிக்கையாளர்களால் அதிகம் விரும்பப்படும். இவ்வாறான நிலையில் உங்கள் வர்த்தக நாம குறியீட்டின் மீது வாடிக்கையாளர்கள் அதிக மதிப்பும், மகிழ்ச்சியான அனுபவத்தையும் பெறுவார்கள். ஒரு போத்தலின் உட்புறத்தில் இருந்து அதன் வெளிப்புறத்தில் இருக்கும் லேபிளை படிக்க முடியாது அல்லவா? இதுபோலவே எமது வாடிக்கையாளர்கள் எம்மீது கொண்டுள்ள அபிப்பிராயத்தை சுய கண்ணோட்டத்திலிருந்து நிர்ணயிக்க முடியாது. உங்கள் வர்த்தக குறியீட்டின் மீது கவனத்தை ஈர்ப்பது பற்றிய திட்டம் தேவைப்படுகிறது. அத்துடன் அதற்கான தனித்துவம் மிக்க ஒரு சில போட்டியாளர்களே இருப்பினும் அவர்களை எதிர்த்து போட்டியிடும் தைரியம் மற்றும் அவர்கள் உங்களை எதிர்த்து போட்டியிட அஞ்சும் நிலையை உருவாக்க வேண்டும்.

தொழில்நுட்பத்தை உகந்த தருணங்களில் பயன்படுத்துங்கள்

தற்கால வியாபாரங்கள் கடும் போட்டி சூழலை எதிர் கொண்டுள்ளது. வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்றுக்கொள்வதற்கு வர்த்தகம் ஒழுங்கமைக்கப்பட்டு கவனத்தை ஈர்க்கக்கூடிய வகையில் அமைவது முக்கியமாகும். வாடிக்கையாளர்களின் முழு நம்பிக்கையை தூண்டும் விதத்தில் நடப்பதும் துல்லியமான தகவல்களை வழங்குவதும் வியாபாரத்தில் முடியாத காரியமாகும். அத்துடன் நாளுக்கு நாள் முன்னேறும் வியாபாரத்தில் நேரத்தை நிர்வகிப்பது மிகவும் கடினமாகும் இத்தகைய சந்தர்ப்பங்களில் உங்கள் வியாபாரத்தை நிர்வகிக்க தன்னியக்க செயற்பாட்டுத் திட்டங்களை மேற்கொள்வது முக்கிய அம்சமாகும். இது உங்கள் குழுவின் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதுடன் நேரத்தையும் சேமிக்கிறது. இதனால் உங்களுக்கு உங்கள் வாடிக்கையாளர் சேவை மீது அதிக கவனம் செலுத்த நேரம் அமைவதோடு அது உங்கள் வளர்ச்சியையும் மதிப்பையும் அதிகரிக்க உதவுகின்றது. இத்தகைய தன்னியக்க தொழில்நுட்பங்கள் உங்கள் எல்லா தரவுகளையும் ஒரே இடத்தில் நிர்வகிக்கவும்> தேவையற்ற> பழைய ஸ்பிரட்ஷீட் அல்லது இயற்பியல்> ஆவணங்களை நீக்கவும் உதவுகின்றது. இத்தகைய புதிய தொழில்நுட்ப முறைகள் பழைய முறைகளில் நிலவிய வியாபார தேக்க நிலையை போக்குவதோடு கூடுதல் பணியாளர்களை நீக்கி பணத்தை மீதப்படுத்தவும்> வர்த்தகத்தின் வளர்ச்சிக்கு சிறந்த திட்டமாகவும் அமைகின்றது.

மனிதவளம்>பயிற்சிகள் மற்றும் மேம்பாட்டு திட்டங்கள்

உங்கள் பணியாளர்கள் நிறுவனத்தின் பணிகளையும் பொறுப்புகளையும் கையில் எடுத்து செயற்படும் வகையில் அவர்களுக்கு பயிற்சிகளை வழங்குங்கள். அவர்களுக்கு தீர்மானம் எடுப்பதற்கான அளவிடுகள் மற்றும் செயற்பாடுகளுக்கான வரையறைகளை உருவாக்கி கொடுப்பதும் அவசியமாகும். உங்கள் மனிதவள மேம்பாட்டு ஒழுங்கமைப்பு சீராக நடைபெறுகின்றனவா என்பதை தொடர்ச்சியான திட்டங்கள் மூலம் நீங்கள் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறான செயற்திட்டங்கள் மூலம் நீங்கள் முதலீடு செய்யும் உள்ளீடு மட்டுமன்றி உங்கள் பணியாளர்களின் சிறப்புத் தேர்ச்சியும் வளர்ச்சியும் மேம்படும். இதனால் உங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் பங்குதாரர்கள் உங்கள் நிறுவனத்தின் நிலைத்தன்மை மற்றும் உயர்தர சேவை என்பவற்றினால் பயனடைவார்கள்.

நிலைத்தன்மை தொடர்பான சிந்தனைகள்

உறுதியுடன் கூடிய பரந்த பார்வை வியாபாரத்தில் முக்கிய அம்சமாகும். உங்கள் நிறுவனம் பற்றிய புரிந்துணர்வு, உந்துதல் சக்திகள் மற்றும் அபாயங்கள் எவை என புரிந்து கொள்ளுதல் அவசியமாகும். கூட்டுறவு உலகில் உங்கள் ஆக்கபூர்வமான சிந்தனைகள் வாடிக்கையாளர்கள்>ஊழியர்கள் மற்றும் வினியோகஸ்தர்களுக்கு மிகவும் உறுதுணையாகவும்> உங்கள் வியாபாரம் சிறப்பாக அமையவும் உதவும். உங்கள் நிறுவனத்தின் திடத்தன்மை என்ன என்பதை மிகத் தெளிவாக வரையறுப்பது>வெற்றிக்கான நடைமுறைகள் மற்றும் இலக்குகளில் கவனம் செலுத்துவது போன்றவை மூலம் உங்கள் நிறுவனத்தின் திடமான செயல்பாடுகளுக்கான நடைமுறைகளை வழிவகுக்கும்.

இவ்வாறான முறைகளை கையாள்வதன் மூலம் உங்கள் சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறையில் சிறந்த நடைமுறைகளை செயல்படுத்தி வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் காணமுடியும்.

Get in Touch

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

spot_imgspot_img

Related Articles

spot_img

Get in Touch

Latest Posts

X