“இந்தத் தொழில் துறையை மாற்றும் விடயங்களை உண்மையில் தோற்றுவிக்கும் ஒருவர் சிந்தனையாளர் மற்றும் செயல் வடிவம் கொடுப்பவர் என இரட்டைத் திறமையாளர்”
– ஸ்டீவ் ஜொப்ஸ் –
செய்பவராகவும் சிந்திப்பவராகவும் நீங்கள் இருக்க வேண்டுமென எவ்வளவு தூரம் விரும்புகிறீர்கள்? அடுத்த புரட்சிகரமான தொழிலதிபராக மாற நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
உங்களுக்குத் தெரிந்த சில வெற்றிகரமான தொழில்முயற்சியாளர்களைப் பற்றி சிந்தியுங்கள். அவர்களால் எப்படி வெற்றி எனும் ஏணியில் ஏற முடிந்தது என்று நினைக்கிறீர்கள்? ஒரு நபரின் ஆளுமைப் பண்புகள் அவரது தொழில் முனைவுத் திறன்களைத் தீர்மானிப்பதில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கின்றன. ஒரு வெற்றிகரமான தொழில்முயற்சியாளருக்கு இருக்க வேண்டிய முக்கிய பண்புகளைப் பார்ப்போம்.
“தூரநோக்கு” எனும் விடயம்
உங்கள் வணிகத்திற்கான ஒரு தூரநோக்கினை உட்கொண்டு வர நேரம், ஆற்றல் மற்றும் கவனமாக மதிப்பீடு தேவை. நீங்கள் தீர்க்கும் பிரச்சனை, வியாபாரத்தில் உள்ள பிரச்சனைகள் மற்றும் அவை ஒவ்வொன்றையும் சமாளிப்பதற்கான தீர்வுகளைக் கொண்டு வர உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். நீங்கள் ஒவ்வொரு விடயத்தையும் விபரமாக ஆராய்வது உங்களால் முடியாத காரியமாக இருக்கலாம், ஆனால் உங்களுக்கு தெளிவான தூரநோக்கு இருந்தால், ஏனையவற்றை படிப்படியாகக் கையாளலாம்.
தன்னம்பிக்கை, அர்ப்பணிப்பு, உந்துசக்தி மற்றும் ஆர்வம்
உங்களால் முடிந்ததைச் செய்து வெற்றியை அடைவீர்கள் என்று உங்களை நீங்கள் நம்பவில்லை என்றால், வேறு யாரும் உங்களை அவ்வாறு நம்புவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. தன்னம்பிக்கை என்பது ஒரு தொழில்முயற்சியாளருக்கு ஒரு முக்கியமான தேவையாகும், அதை நீங்கள் கொண்டிருந்தால், அது உண்மையில் உங்கள் அர்ப்பணிப்பு, உந்துசக்தி மற்றும் ஆர்வத்தின் வலிமையின் சாத்தியத்தை உச்சப்படுத்தி ஆடும் ஒரு ஆட்டமாகும்.
நீங்கள் ஆபத்தைக் கையில் எடுப்பவரா?
எந்தவொரு புதிய வணிகமும் ஒரு சூதாட்டத்தைப் போன்றது. ஒரு சிறந்த தொழில்முயற்சியாளரின் அடையாளம், அந்த சூதாட்டம் மற்றும் அதில் உள்ள ஆபத்துக்களில் இருந்து அச்சப்படாமல் இருப்பதும் மற்றும் அதற்கு மாறாக அவற்றைக் சரியாகக் கணிப்பிட்டு பகுத்தறிவுடனான தீர்மானங்களை எடுப்பது ஆகியவை அடங்கும். ஒரு தொழிலைத் தொடங்குவதும் அதை நிர்வகிப்பதும் உங்கள் ஆபத்துக்களைக் கவனமாகத் தெரிவுசெய்து, அவற்றை வெற்றிபெறச் செய்வதற்கான திட்டங்களைச் செயல்படுத்தும் ஒரு ஆட்டமாகும். நீங்கள் எந்த விடயத்திலும் காலை வைக்க முன், கணிப்பிடப்பட்ட ஆபத்துக்களை கையில் எடுத்துக்கொள்வது, ஒரு செயலின் நேர்மறை மற்றும் எதிர்மறை விளைவுகளை கணிப்பிடுவது மற்றும் எடைபோடுவது போன்ற கலைகளில் தேர்ச்சி பெறுவது முக்கியம்.
தொடர்பாடல்
எந்தவொரு உறவுமுறையையும் போலவே, வணிக உறவுமுறைகளிலும், தொடர்பாடல் மிகவும் முக்கியமானது. உங்கள் பணியாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் உங்கள் வாடிக்கையாளர்களுடன் நீங்கள் எவ்வளவு திறம்பட தொடர்பாடலை மேற்கொள்கிறீர்கள் என்பது உங்கள் வணிகத்தை நீங்கள் கையாளும் விதத்தையும், உங்கள் வணிகம் மற்றையவர்களால் உணரப்படும் விதத்தையும் தீர்மானிக்கிறது. அணியை உங்கள் பாதையில் கொண்டு செல்ல உங்கள் சிந்தனைகளை நீங்கள் தெளிவாகவும் திறம்படவும் தொடர்பாடல் செய்ய வேண்டும். தகவல் தொடர்பாடல் என்பது இருவழிப் பாதை என்பதையும் நினைவில் கொள்வது அவசியம். உங்கள் அணி அல்லது உங்கள் வாடிக்கையாளர்கள் என்ன சொல்ல வேண்டும் என்பதை விட நீங்கள் சொல்வதன் முக்கியத்துவத்தையும் குறைத்து மதிப்பிட முடியாது.
உங்களால் சூழ்நிலைகளை அனுசரிக்க முடியுமா?
ஒரு வணிக சூழ்நிலையில் ஏற்படக்கூடிய சரியான வழிகளை முன்னெதிர்வு கூறுவது மிகவும் கடினம். எதிர்பாராத நிகழ்வுகள் நிகழலாம், எதிர்பாராத தீர்மானங்கள் எடுக்க வேண்டியிருக்கும், சுருக்கமாகச் சொன்னால், நீங்கள் சமாளிப்பதற்கு தயாராக இல்லாத பல சூழ்நிலைகள் வரலாம். எனவே, மாற்றங்களுக்கு ஏற்றதாக சூழ்நிலைகளை அனுசரிக்கும் திறனைக் கொண்டிருப்பது வணிக உலகில் ஒருவர் வளர்த்துக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான பண்பாகும்.
அதிகார செல்வாக்கு, பேச்சுவார்த்தை திறன், பண முகாமைத்துவம் மற்றும் பயனுள்ள தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளுதல்
நீங்கள் உண்மையில் விரும்பாத ஒரு தயாரிப்பின் சில விளம்பரங்கள் திரையில் எப்படி எதிரொலிக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியும், ஆனால் விளம்பரம் முடிவதற்குள், அந்த தயாரிப்பை எங்கிருந்து பெறலாம் என்று நீங்கள் யோசிக்கிறீர்களா? சுருக்கமாக, ஒரு தொழில் முயற்சியாளராக உங்களுக்குத் தேவைப்படும் அதிகார செல்வாக்கு இதுவாகும். பேச்சுவார்த்தை திறன்களும் அதிகார செல்வாக்குடன் ஒன்றித்துள்ளன. உங்கள் வாடிக்கையாளர்களுடன் மட்டுமின்றி முதலீட்டாளர்கள் போன்ற பிற பங்குதாரர்களுடனும் நீங்கள் அவர்களைக் கையாளும் போது இந்த திறன்கள் மிகவும் உபயோகமாக இருக்கும். இதற்கு நீங்கள் உங்கள் தெரிவுகளை எடைபோட முடியும் மற்றும் அவற்றிலிருந்து மிகவும் இலாபகரமான ஒன்றை நோக்கிச் செல்ல வேண்டும். மேலும், பண முகாமைத்துவம் என்பது ஒரு தொழில்முயற்சியாளராக நீங்கள் மிகவும் கவனமாக கையாள வேண்டிய ஒன்று. உங்கள் நிதியை திட்டமிட்டு கட்டுப்படுத்துவது உங்களுடைய கைகளில் உள்ளது. தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளுதல் என்பது மற்றொரு முக்கியமான தரமாகும். ஏனெனில் இது உங்கள் தொடர்புகளின் மூலமான திறன்களால் சரியான இணைப்புகளை உருவாக்கவும், சந்தை தகவலைப் பெற்றுக்கொள்ளவும் உங்கள் வணிகத்தை விரிவுபடுத்தவும் உதவுகிறது.
நீங்கள் தோல்வியடைந்தால் என்ன செய்வது? நீங்கள் ஒரு பொறுமைசாலியா?
ஒரு வணிகத்தை நடத்துவது என்பது நீங்கள் தொடர்ந்து ஏற்றத் தாழ்வுகளை சமாளிக்க வேண்டியிருக்கும் என்பதை உணர வேண்டியது அவசியம். தோல்வி என்பது உங்கள் அகராதியில் இல்லாததால், நீங்கள் அடிமட்டத்திற்கு வீழ்ந்தாலும் எதனையும் கைவிடக்கூடாது என்பது முக்கியமானது. இதுபோன்ற சூழ்நிலைகளில், உங்கள் அடுத்த நகர்வுகளுக்கு நீங்கள் காத்திருக்கவும், மூலோபாயங்களை வகுக்கவும் பொறுமையாக இருப்பது முக்கியம். குறுகிய கால இலாபம் மற்றும் குறிக்கோள்களில் கவனம் செலுத்துவது வெற்றிபெற போதாது. உங்கள் வணிகத்திலிருந்து இலாபம் பெறுவதற்கு காலம் எடுக்கலாம், எனவே, அதற்காக உழைக்க பொறுமையாக இருப்பதும், அதற்காகக் காத்திருப்பதும் எதனையும் கைவிடாமல் இருக்க உங்களுக்கு உதவும்.
கடைசியாக, உங்களுக்குள் ஒளிந்திருக்கும் தலைவரைக் கண்டுபிடித்தீர்களா?
“நீங்கள் ஒரு தலைவரா?” இது வர்த்தக உலகில் பொதுவாகக் கேட்கப்படும் சொற்பதங்களில் ஒன்றாகும். இதன் சரியாக அர்த்தம் என்ன? இது உண்மையில் மேலே பட்டியலிடப்பட்டுள்ள எல்லாவற்றினதும் கலவையாகும். ஒரு தலைவருக்குள் இருக்கும் தொலைநோக்கு அவர் கொண்டுள்ள அறிவு, திறன்கள் மற்றும் வளங்களை தனது வணிகத்திற்கு மிகவும் பயனளிக்கும் வகையில் வடிவமைக்கக்கூடிய வகையில் ஆபத்துக்களைக் கையில் எடுப்பவர் ஆக இருப்பதே. ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் 114 ஆவது பட்டமளிப்பு வகுப்பிற்கான தொடக்க உரையை (commencement speech for the 114th graduating class at Stanford University) அப்பிள் நிறுவனத்தின் (Apple Inc) இணை ஸ்தாபகரான ஸ்டீவ் ஜொப்ஸ் ஆற்றும் போது, உங்களிடம் ஏற்கனவே உள்ளதைப் பயன்படுத்திக் கொள்ளும்போது அது மேலும் அறிவூட்டுவதாக இருக்கும்.