spot_imgspot_img

கவர்தலுக்கான வடிவமைப்பு

நீங்கள் ஒரு புதிய ஒரு வணிகத்தைத் தொடங்கியுள்ளீர்கள் அல்லது பல தசாப்தங்களாக வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்து வரும் ஒரு நிறுவனத்தை வைத்திருக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம் – எப்படியிருந்தாலும் நீங்கள் வழங்கும் சலுகைகள் பற்றி உலகிற்கு தெரியப்படுத்துவதும், சிறந்த முறையிலான சந்தைப்படுத்தல் வடிவமைப்புமே உங்கள் வெற்றிக்கான பிரதான அடிப்படைகளாக இருக்கின்றன. இன்றைய டிஜிட்டல் யுகத்தில், நாம் அதிக எண்ணிக்கையான தகவல்களுடன் தொடர்புபட வேண்டியிருக்கின்றது.

தடைகளை தகர்த்து அனைவருக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் விளம்பரங்களை உருவாக்க சக்திவாய்ந்த வடிவமைப்பு அவசியமாகின்றது.

முக்கியமான வடிவமைப்பை உருவாக்க தேவையாக இருக்கும் சில முக்கிய படிகள் கீழே காணப்படுகின்றன.

நீங்கள் கூற வரும் பிரதான தகவலை இனம் காணுங்கள்

நீங்கள் ஒரு சமூக வலைதள இடுகை (Social Media Post) அல்லது ஒரு டிஜிடல் துண்டுப்பிரசுரத்தினை (E-Flyer) என எதனை வடிவமைத்த போதும், முதலில் நீங்கள் கூற வரும் தனித்துவமான செய்தியைக் கண்டறியுங்கள். உங்களது வடிவமைப்பும், நீங்கள் எழுத முனைகின்ற விடயமும் இதனை அடிப்படையாக கொண்டதாகவே அமைந்திருக்க வேண்டும். அதிகப்படியான செய்திகளை தவிர்ப்பது நல்லது அது உங்கள் பார்வையாளர்களை குழப்ப முடியும் என்பதோடு, அது உங்களது விளம்பரத்தினை இலகுவில் மறக்கடிக்க கூடிய தோற்றப்பாட்டினையும் உருவாக்கலாம்.

காட்சி இணக்கப்பாடு

வர்ணம் (Colour) மனித உணர்வுகளுடன் சம்பந்தப்பட்ட ஒன்று என்பதால் அது உங்களது வியாபாரச் சின்னத்தின் காட்சிக் கட்டமைப்புடன் தொடர்புபடுகின்ற மிக முக்கிய அம்சமாக அமைகின்றது. எனவே உணர்வுகளுடன் சம்பந்தப்படும் வகையில் உங்களது வியாபாரச் சின்னத்திற்கான வர்ண தொகுதியை தெரிவு செய்யுங்கள். இதற்கு உதாரணமாக Spa வியாபாரச் சின்னம் பச்சை மற்றும் நீல வர்ணங்களுடன் தொடர்புட்ட வர்ணதொகுதியினை தெரிவு செய்வதனை குறிப்பிடலாம். இங்கே தெரிவு செய்யப்படும் வர்ணங்கள் அமைதியினை வெளிப்படுத்துவதாக அமைகின்றன. மறுமுனையில் ஊக்க பான (Energy Drink) வியாபாரச் சின்னமானது தெளிவாக வெளிப்படுத்தும் சிவப்பு மற்றும் செம்மஞ்சல் நிறங்களை பயன்படுத்துவதனையும் இதற்கு மற்றுமொரு உதாரணமாக குறிப்பிட முடியும்.

வர்ணமும், காட்சியினையுடைய தொனி அமைப்பும் (Visual Tone) வடிவமைப்பின் முக்கிய மூலகங்களாக இருப்பதோடு, அவை நீண்ட காலம் நிலைத்திருக்க கூடிய ஒரு அடையாளத்தினையும் உங்களது வியாபாரச் சின்னத்திற்காக கொடுக்கின்றன. இது உங்களது வாடிக்கையாளர்களை உங்களது சந்தைப்படுத்தலோடு இலகுவில் தொடர்புபடுவதற்கு உதவுகின்றது.

பேசும் படங்கள்

ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளை சொல்லும். அத்துடன் அது தகவல் சுமையினை ஏற்படுத்துவதாகவும் கருதப்படுவதில்லை. உண்மையில் கவரக் கூடிய படங்கள் உங்களது பார்வையாளர்கள் உங்களது சமூக வலைதள இடுகையினை (Social Media Post) பார்வையிடுவதில் அல்லது ஒரு டிஜிடல் துண்டுப்பிரசுரத்தை (E-Flyer) வாசிப்பதில் தீர்மானம் செலுத்துவதாக அமைகின்றன. வடிவமைப்பாளர்களுக்கு இலவசமாக பெறக்கூடிய படங்கள் (Free Images) உள்ளடங்கலாக படநூலகத் தொகுதியினை (Stock Image Library) அணுகுகின்ற (Access) வசதிகள் தற்போது காணப்படுவது சிறப்பான விடயமாகும்.

இங்கு குறைவான வார்த்தைகளே அதிகம் என்பதனால், சுருக்கமான மற்றும் தெளிவான தாக்கம் ஏற்படுத்தக்கூடிய விவரணங்களை உபயோகியுங்கள். பொதுவாக உங்கள் கருத்தினை வெளிப்படுத்த தேவையற்ற அனைத்தினைம் அகற்றலாம்.

வெகுமதிகளுடன் முன்னேறுங்கள்

உங்கள் பார்வையாளர்களுக்கு உங்களது சேவை மூலமாக கிடைக்கும் வெகுமதிகள் பற்றி தெரியப்படுத்த வேண்டியிருக்கின்றது. இதில் பொதுவான தவறுகள் நடப்பது அவதானிக்கப்பட்டிருக்கின்றது. குறிப்பிட்ட விபரம் பற்றிய கூடுதல் தகவல்களை வழங்குவதனை தவிர்த்து வெகுமதிகளை காட்சிப்படுத்தலுக்கு கொண்டு வருவதன் மூலமாக நுகர்வோருக்கு நாங்கள் என்ன செய்ய முடியும் என்பதனை வெளிப்படுத்தலாம். உதாரணமாக Spa சிகிச்சையில் பயன்படுத்தப்படும் எண்ணெய்கள், சிகிச்சை நேரம் என்பவற்றினை கூறுவதனை தவிர்த்து அந்த சிகிச்சையில் கிடைக்கும் அனுகூலங்களான அமைதி, மனவழுத்த நிவாரணம் போன்ற விடயங்களில் கவனம் செலுத்த முடியும்.

உங்களது பார்வையாளர்கள் நீங்கள் வழங்குகின்ற அதிக விபரங்களை விட நீங்கள் அவர்களை உணர வைப்பதற்கே அதிக முக்கியத்துவம் வழங்குவார்கள் என்பதனை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

தைரியமாக இருங்கள்

நாங்கள் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய சில விடயங்களை இங்கே குறிப்பிட்ட போதும், தைரியமாக இருக்க வேண்டியதனை நீங்கள் நினைவில் கொள்ளுங்கள். சிறப்பான வடிவமைப்பானது படைப்புச் சுதந்திரம் வழங்கப்பட்ட போது பிறந்திருப்பதோடு, புதிய விடயங்களை தொடர்ந்து பரிசோதனை செய்வதும் முக்கியமானது.

உயர்தரமான சேவை வழங்கும் நிறுவனங்கள் சிறந்த வடிவமைப்பினை படைப்பது கிடையாது. கிடைக்கப்பெறும் ஒப்பந்த அடிப்படையில் இயங்குகின்ற ஆர்வமுள்ள குழுவோ அல்லது தனிநபரோ மிகவும் கவர்ச்சிகரமான பிரச்சாரங்களை செய்ய முடியும். இது மிகப் பெரிய வியாபார நாமங்களின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்ததும் அவதானிக்கப்பட்டிருக்கின்றது. எனவே நீங்கள் வெற்றிக்காக பணியாற்ற வேண்டியவர்கள் இவர்களாகவே அமைந்திருக்கின்றனர்.

ஊழியர்கள் மகிழ்ச்சிக்கு செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை பற்றி அறிந்து கொள்ள திரிய இணையத்தளத்தைப் பார்க்கவும்.

Get in Touch

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

spot_imgspot_img

Related Articles

spot_img

Get in Touch

Latest Posts

X