உங்கள் வணிகம் செழிக்க மிகவும் முக்கியமான காரணி போதுமான பணத்தை கையில் வைத்திருப்பது என்று ஒருவர் வாதிடலாம். செலவுக் கட்டுப்பாடு மற்றும் பட்ஜெட் ஒழுக்கம் இரண்டும் முக்கியமானவை என்றாலும், பணமே முன்னோடி. எனவே, உங்கள் பணத் தேவை குறித்த துல்லியமான முன்னறிவைக் கொண்டிருப்பது அவசியம். பணப்புழக்க முன்னறிவு, மதிப்பிடப்பட்ட பண வரவுகள் (செலவுகள்) மற்றும் வரவுகள் (வருமதிகள்) ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு நிறுவனத்தின் எதிர்கால நிதி நிலை பிரதிபலிக்கப்படுகிறது.
நீங்கள் கணக்கியல் மென்பொருள் அல்லது கணிப்புத்தாள் மென்பொருளைப் பயன்படுத்தாவிட்டால், காகிதத்தில் அல்லது கணக்கியல் புத்தகங்களைப் பயன்படுத்தி கைமுறையாக இதைச் செய்யலாம். நீங்கள் கணிப்புத்தாள் மென்பொருளைப் பயன்படுத்தினால், மென்பொருளிலேயே பல அட்டவணைகளை இலவசமாகக் காணலாம். இல்லையெனில், இணையத்தில் கிடைக்கும் பல இலவச அட்டவணைகளைப் பயன்படுத்தலாம்.
எப்படியிருந்தாலும், உங்கள் பணப்புழக்க முன்னறிவைத் தயாரிப்பது உங்கள் அளவிடக்கூடிய பண வரவுகளைக் கண்டறிவதில் ஆரம்பிக்க வேண்டும். இவை பின்வருவனவையாக இருக்கலாம்:
- வணிக வருவாய்
- ஆரம்ப முதலீடு (மூலதனம்)
- கடன்கள்
- சொத்துக்களை விற்பதன் மூலம் கிடைக்கும் வருமானம்
- உங்கள் வணிகத்திற்கு செலுத்தப்படும் றோயல்டிகள் அல்லது உரிமக் கட்டணம்
இப்போது, செலவுகளைக் கணக்கிடுவதற்கான நேரம் இது. வழக்கமான செயல்பாட்டு செலவுகள் தவிர, பின்வருவதைப் போன்ற பிற செலவுகள் இருக்கலாம்:
- நிதி சேவை கட்டணம்
- புதிய சொத்துக்களை வாங்குதல்
- கடன் திருப்பிச் செலுத்துதல்
- பங்குஇலாபத் தொகை
பாதுகாப்பின் இலாபமட்டத்தைப் பெற, எதிர்பார்த்ததை விட விரைவில் உங்கள் செலவுகள் ஏற்படும் என்று கருதும் அதே வேளையில், எதிர்பார்க்கப்படும் வரவுகள் எதிர்பார்த்த திகதி(களுக்கு) அப்பால் தாமதமாகும் என்று கருதுவது பாதுகாப்பானது. மேலும், உங்கள் வணிகம் மற்றும் அதன் சுற்றுச்சூழலைப் பற்றி உங்களுக்கு நல்ல புரிதல் இருப்பதால், நீங்கள் எதிர்பார்த்ததை விட சற்றே அதிகமாகவும், எதிர்பார்க்கப்படும் வரவுகளை விட சற்று குறைவாகவும் இருப்பதன் மூலம் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கலாம். இதைச் செய்வதன் மூலம், திட்டமிட்டபடி விடயங்கள் நடக்கவில்லை என்றால், நீங்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு ஒரு காப்பு வளையத்தை உருவாக்கியிருப்பீர்கள். முன்னறிவு உங்கள் தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்படும் நிதி நிலையை கண்காணிக்கவும், அதற்கேற்ப உங்கள் நடத்தையை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. உங்கள் பணப்புழக்கத்திற்கு ஏதாவது சவாலாக இருந்தால், அது நடக்கும் வரை காத்திருக்காமல் அதைச் சமாளிக்கலாம். இல்லையெனில் அது உங்கள் வணிகத்தை மோசமாகப் பாதிக்கும்.
உங்களுக்கு பணப்புழக்கச் சவால்கள் இருக்கும்போது, அவற்றைச் சமாளிக்க நீங்கள் சில விடயங்களைச் செய்யலாம்.
- உங்களுக்கு சலுகைக் காலத்தை வழங்க வழங்குநர்களுடன் (இருக்கும் பட்சத்தில்) பேச்சுவார்த்தை நடத்துதல் (இதனால்தான் விற்பனையாளர்கள் உட்பட உங்கள் கூட்டாளர்களுடன் நீண்டகால, நம்பிக்கை அடிப்படையிலான உறவுகளை நீங்கள் எப்போதும் கட்டியெழுப்புவதை எதிர்பார்க்க வேண்டும்).
- உங்கள் வணிக வடிவத்தின் விரிவான பகுப்பாய்வு மற்றும் குறைக்கக்கூடிய அல்லது தவிர்க்கக்கூடிய சாத்தியமான செலவுகளைக் கண்டறிவதற்கான செயல்பாட்டைச் செய்யுங்கள் (Pareto Law அல்லது 80/20 விதி இதற்கு உதவும் – இந்த விடயத்தில், உங்கள் செலவுகளில் 20% செலவுகளை சமாளிப்பதன் மூலம் 80% செலவுகளுக்கு தீர்வு காணலாம்).
- ஏதேனும் பணப் பற்றாக்குறையை ஈடுகட்ட, தேவைப்பட்டால் குறைந்த விலையில் பொருட்களை (சொத்துக்கள் மற்றும் சரக்குகள் என இரண்டாகவும் இருக்கலாம்) விரைவாக விற்பனை செய்யலாம்.
- உங்கள் சொத்துக்களில் இருந்து கூடுதல் வருவாயைப் பெறுவதற்கான வாய்ப்புகளைத் தேடுதல் (உங்கள் கட்டிடத்தின் ஒரு பகுதியை நீங்கள் வாடகைக்கு விட முடியுமானால், கூடுதல் பணத்தை ஏன் சம்பாதிக்கக்கூடாது?).
- உங்களுக்கு வருமதியாகவுள்ள கடன்களை அதிக செயல்திறனுடன் வசூலித்தல் (உங்களுக்கு பணத்தட்டுப்பாடு இருந்தால், உங்கள் கடனாளிகளுக்கு பகுதி பகுதியாகப் பணம் அல்லது குறைக்கப்பட்ட தொகையில் பணம் செலுத்துவதற்கான தெரிவுகளை வழங்கலாம்)