spot_imgspot_img

வணிக உரிமை – ஒரு துரித வழிகாட்டல்

நீங்கள் வணிக உலகில் காலடியெடுத்து வைக்கும் போது, நீங்கள் செல்ல விரும்பும் திசையைப் பற்றிய புரிதல் உங்களுக்கு இருக்கும், ஆனால் நீங்கள் அந்த முதல் முக்கியமான அடியை எடுத்து வைப்பதற்கு முன் கருத்தில் கொள்ள வேண்டியவை ஏராளம் உள்ளன. ஒரு தொழில்முயற்சியாளராக, நீங்கள் சொந்தமாக ஒரு தொழிலைத் தொடங்கலாம், படிப்படியாக அதை கட்டியெழுப்பலாம். நீங்கள் ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு வணிகத்தை கொள்முதல் செய்யலாம் அல்லது உங்களை பங்குதாரராக்கும் வகையில் வணிகமொன்றின் மீது முதலீட்டைச் செய்யலாம். ஒரு தொழிலைத் தொடங்குவதற்கான மற்றொரு வழி, பல்வேறு நன்மை தீமைகளைக் கொண்ட வணிக உரிமையாக்கல் ஆகும். இந்த ஆக்கத்தில், ஒரு வணிக உரிமையை சொந்தமாக வைத்திருப்பது மற்றும் இயக்குவது பற்றிய தீர்மானத்தை நீங்கள் எவ்வாறு மேற்கொள்வது என்பதைப் பார்ப்போம்.

வணிக உரிமையாக்கம் என்றால் என்ன என்பதைப் பார்க்கும்போது, நிர்ணயிக்கப்பட்ட பகுதிகளில், தாய் நிறுவனத்தின் வணிக கட்டமைப்பைப் பயன்படுத்த, ஒரு தனிநபருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ தாய் நிறுவனத்தால் வழங்கப்படும் பிரத்தியேக உரிமையாக நாம் இதனை வரையறுக்கலாம். இது வணிக உறவும் கூட. இதில் உரிமையாளர் மற்றொரு தரப்பினரின் வர்த்தகநாமம், தயாரிப்பு, வணிக கட்டமைப்பு மற்றும் செயல்முறையை போதுமான ஒப்பந்த தொகையில் பயன்படுத்துவதற்கு அங்கீகாரம் அளிக்கிறார்.

ஒரு வணிக உரிமையைப் பெறும்போது வெற்றிக்கான திறவுகோல் உங்கள் ஆர்வங்களுக்கும் வணிக இலாபத்திற்கும் இடையில் சரியான சமநிலையைக் கண்டறிவதாகும். இது தெளிவாக ஒரு சவாலாக உள்ளது, ஆனால் அவை ஒவ்வொன்றும் முன்வைக்கும் பல தெரிவுகளையும் இயக்கவியலையும் கவனமாக ஆராய்வதன் மூலம் அதை சமாளிக்க முடியும்.

எனவே, வணிக உரிமையாக்க கட்டமைப்பில் என்ன நடக்கிறது?

அடிப்படையில், வணிக உரிமை என்பது பொருட்கள் மற்றும் சேவைகள் விநியோகிக்கப்படும் ஒரு வழிமுறையாகும். ஒரு வணிக உரிமையில் குறைந்தபட்சம் இரண்டு மட்டங்களில் நபர்கள் உள்ளனர். ஒன்று வணிக உரிமை வழங்குநர் மற்றும் வணிக உரிமை பெறுநர். வர்த்தகநாமத்தின் வர்த்தக முத்திரை/வர்த்தக முத்திரைப் பெயர் மற்றும் வணிக கட்டமைப்பைக் கொண்டிருப்பவர் உரிமையாளர். உரிமையாளரின் பெயர் மற்றும் கட்டமைப்பின் கீழ் வணிகத்தை மேற்கொள்வதற்கான உரிமையைப் பெற்று, உரிமத்தொகை மற்றும்/அல்லது ஆரம்பக் கட்டணத்தைச் செலுத்துபவரே வணிக உரிமை பெறுநர் ஆவார்.

எனவே, நீங்கள் ஒரு வணிக உரிமையை வாங்கும்போது, ஒரு குறிப்பிட்ட வர்த்தக முத்திரை மற்றும்/அல்லது வணிகக் கோட்பாட்டைப் பயன்படுத்துவதற்கான உரிமையையும் நீங்கள் வாங்குகிறீர்கள். நீங்கள் நடத்தும் தொழிலும், மற்ற எல்லாத் தொழில்களும் ஒரே பெயரில் நடத்தப்படுவதைப் போலவே இருக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தயாரிப்புகள், கருவிகள், விளம்பர உதவி மற்றும் பயிற்சி போன்றவற்றை நீங்கள் வணிக உரிமை வழங்குநரிடமிருந்து வாங்க வேண்டியிருக்கலாம் – இவை உங்கள் செயல்பாட்டின் மதிப்பை அதிகரிக்கவும் செயல்படுத்தவும் அவர்கள் உருவாக்கிய விடயங்கள்.

வணிக உரிமையானது உங்கள் உரிமையாண்மையின் கீழ் வந்ததும், அதன் செயல்பாடுகள் வணிக உரிமை ஒப்பந்தத்தின் விதிமுறைகளின் கீழ் இயங்கும். இது வணிக உரிமையின் முக்கிய நன்மையாகக் கருதப்படுகிறது. வணிக உரிமை வழங்குநரால் வழங்கப்பட்ட வணிக வடிவம், வர்த்தக பெயர் மற்றும் ஆதரவு கட்டமைப்பு ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொள்ளும் திறன் இதன் மூலமாகக் கிடைக்கிறது. KFC, McDonald’s, Taco Bell மற்றும் Burger King போன்ற சில பரிச்சயமான வர்த்தகநாமங்களை நாம் நோக்கினால், அவை அனைத்தும் இலங்கையிலும் பல நாடுகளிலும் இயங்கும் வணிக உரிமை ஏற்பாடுகளாகும். உள்ளூர் வணிக உரிமையாளர்கள் யார் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அல்லது மிக முக்கியமாக, இவை வணிக உரிமை வடிவங்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?

ஒரு வணிக உரிமையை வாங்குதல்

வணிக உரிமம் சார்ந்த வணிகத்தில் நுழைவதன் நன்மை தீமைகளைப் பார்ப்போம். இது இலாபகரமானதாகத் தோன்றினாலும், இது ஒரு எதிர்மறையான பக்கத்தைக் கொண்டிருக்கலாம். குறிப்பாக வணிக சாமர்த்தியம் இல்லாதவர்களுக்கு இது பாதகமாக அமையலாம்.

எனவே, தாய் நிறுவனத்திடமிருந்து நீங்கள் பெறும் உதவி மற்றும் வணிக உரிமையின் வெற்றி வீதம் பெரும்பாலும் வணிக உரிமை வழங்குநரின் நற்பெயர் மற்றும் கிடைக்கும் சந்தை வாய்ப்புகளை அடிப்படையாகக் கொண்டது என்பது முக்கிய நன்மைகள் என்பது உண்மையே. இதன் மறுபக்கத்தைப் பற்றி பேசுகையில், வணிக உரிமை வடிவங்களைப் பின்பற்றும் உலகளாவிய பெருநிறுவனங்கள் தங்கள் உள்ளூர் வணிக உரிமை பெறுநர்கள் தத்தமது பகுதிகளுக்கு ஏற்றவாறு வழங்கல்களை பிரத்தியேகமாக வடிவமைத்துக் கொள்ள இடமளிப்பது வழக்கமான நடைமுறையாகும். சில சமயங்களில், இது சந்தையில் நுழைவதற்கும் ஊடுருவுவதற்கும், உள்ளூர் போட்டியாளர்களுடன் போட்டியிடுவதற்கும் முக்கியமாகும். McDonald’s இல் உங்களுக்குப் பிடித்த McRice அல்லது Pizza Hut இல் உள்ள Birizza பற்றி யோசித்துப் பாருங்கள், இவை நிச்சயமாக மற்ற நாடுகளில் உள்ள உணவுப் பட்டியலில் இல்லை.

இருப்பினும், வணிக உரிமையாளராக இருப்பது கடினமாகவும் இருக்கலாம். ஏனெனில் நீங்கள் தாய் நிறுவனத்திற்கு எவ்வளவு கட்டுப்பட்டிருக்கிறீர்கள், இது உங்கள் சொந்த வணிகத்தின் மீது உங்களுக்கு எந்தக் கட்டுப்பாட்டையும் கொடுக்காது, மேலும் உங்கள் சொந்தப் பெயர் வர்த்தகநாமத்துடன் மிகக் குறைவாகவே தொடர்புடையது ஆகியவற்றில் இது தங்கியுள்ளது. உதாரணத்திற்கு, உலகளாவிய செயல்பாட்டிற்காக வணிக உரிமை வழங்குநர் சில புதிய நடைமுறைகள் அல்லது புதிய வர்த்தகநாம தொனிப்பொருள் ஒன்றை உள்வாங்கிக்கொண்டால், நீங்கள் அதனைப் பின்பற்றுவதைத் தவிர வேறு வழியில்லை. ஒப்பந்தத்தின் அடிப்படையில், இத்தகைய மாற்றங்கள் உங்களுக்கு பெரும் தொகையை செலவழிக்க நிர்ப்பந்திக்கக்கூடும்.

நீங்கள் அறிந்திருக்க வேண்டிய ஆவணங்கள் என்ன?

வணிக உரிமையை வாங்கும் போது, தேவையான அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்து உறுதி செய்து கொள்வது அவசியம். அத்தகைய சில ஆவணங்கள் பின்வருமாறு.

  • செயல்பாட்டுக் கையேடு(கள்)
  • பயிற்சி திட்டங்கள்
  • சட்ட ஆவணம் – வணிக உரிமை ஒப்பந்தம் மற்றும் வணிக உரிமையை வழங்கும் சுற்றறிக்கை
  • வணிக உரிமை சந்தைப்படுத்தல் பொருட்கள் – பிரசுரங்கள், பயன்பாடுகள், பத்திரிகை வெளியீடுகள் மற்றும் இணையப் பக்கங்கள்
  • வணிக உரிமை செயல்பாடுகள் கையேடு
  • வணிக உரிமைப் பதிவு விண்ணப்பம்(கள்)
  • வணிக உரிமை வழங்குநரின் வர்த்தகநாம வழிகாட்டுதல்கள்

நீங்கள் ஒரு வணிக உரிமை ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முன், நீங்கள் சேகரிக்க வேண்டிய தகவல்கள் நிறைய உள்ளன. முதலில் நீங்கள் வணிக உரிமை வழங்குநரின் முழுமையான பின்னணி சரிபார்ப்பைச் செய்ய வேண்டும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மேலே பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் நீங்கள் சேகரிக்கக்கூடிய பிற தொடர்புடைய ஆவணங்களையும் நன்கு வாசித்து, ஆய்வு செய்யுங்கள். வணிக உரிமை ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முன், அதில் தோன்றும் அனைத்தையும் சரிபார்க்கவும். மேலும், ஒரு வழக்கறிஞர், வணிக ஆலோசகர் மற்றும் வணிக உரிமை ஒப்பந்த சட்டத்தில் அனுபவம் வாய்ந்த கணக்காளர் ஆகியோரின் ஆலோசனையைப் பெற மறக்காதீர்கள்.

நன்கு அறியப்பட்ட வர்த்தகநாமத்தின் உரிமையாளராக மாறுவது, உங்களுக்காக வரையப்பட்ட அனைத்துப் படிகளும் வெற்றிக்கான எளிதான பாதையாக இருக்கலாம், மேலும் உங்கள் வரவுசெலவுத் திட்டத்தின் பெரும்பகுதி உங்களுக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் விட்டுக்கொடுப்பது சுயாதீனமான தீர்மானங்களை எடுப்பதற்கான சுதந்திரமாக இருக்கலாம், மேலும் நீங்கள் விடயம் எதுவென்றாம் சந்திக்க வேண்டிய முக்கிய நிதிக் கடப்பாடுகளுக்கு முகங்கொடுப்பதுடன் நிலைமையில் இது முடிவடையும். நீங்கள் வணிக உரிமை இயக்குராக மாற விரும்புவது, ஆபத்துக்கான உங்களின் ஆர்வத்தையும், அனைத்து கட்டமைப்புகள் மற்றும் செயல்முறைகளைக் கொண்டு வருவதற்கான உங்கள் ஆர்வத்தையும் சார்ந்தது. அல்லது ஏற்கனவே இயங்கும் ஒருவரிடமிருந்து அனைத்தையும் (உரிய தொகையைச் செலுத்தி) பெற்றுக்கொள்ளுங்கள். மற்ற இடங்களில் அவை மிகவும் இலாபகரமானவையாக இருக்கக்கூடும்.

Get in Touch

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

spot_imgspot_img

Related Articles

spot_img

Get in Touch

Latest Posts

X