அந்நிய செலாவணி பற்றாக்குறை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் முயற்சியின் ஒரு கட்டமாக, ‘அத்தியாவசியமற்ற’ என அழைக்கப்படும் பால் சார்ந்த உற்பத்திகள், பழங்கள் மற்றும் மீன் போன்ற 367 பொருட்களுக்கு இலங்கையில் இறக்குமதி கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இவ்வருடம் மார்ச் 30 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பின்படி இந்த 367 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாட்டு தடைவிதிப்பு அறிவிக்கப்பட்டுள்ளதோடு இந்த பொருட்களை இறக்குமதி செய்வதற்கு உரிய செல்லுபடியான அனுமதிப்பத்திரமின்றி இவற்றை இறக்குமதி செய்வதற்கும் தடை விதிக்கப்படுகின்றது.
எனவே, இந்த இறக்குமதித் தடைகள் அல்லது கட்டுப்பாடுகளால் ஏற்படும் இடைவெளிகளைக் குறைக்க நாம் என்ன செய்ய முடியும்? உலகளாவிய ரீதியில் மற்றைய நாடுகள் இவ்வாறான சிக்கலை சமாளிப்பதற்காக சில பொது வழிமுறைகளை மேற்கொள்கின்றன. அவற்றை நாம் இங்கே குறிப்பிடுகின்றோம்.
வர்த்தக மற்றும் பொருளாதார தடைகள்
பொருளாதார தடைகளால் பாதிக்கப்பட்ட சந்தைகளை தவிர்ப்பதன் மூலம் இவ்வகையான தடைகளை வெற்றி கொள்ள முடியும். மேலும் வர்த்தக தடைகளுக்கு உட்படாத பல்வேறு தயாரிப்பு பொருட்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதி மீது அதிக கவனம் செலுத்தலாம். தடைகள் நீக்கப்படலாம் என்று தோன்றினால், குறிப்பிட்ட சந்தையில் நுழைவதையும் சிறிது கால அவசாகத்திற்கு ஒத்தி வைக்க முடியும்.
ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டுப்பாடுகள்
ஒரு குறிப்பிட்ட வர்த்தகத்தில் சந்தை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால் வேறு ஒரு சந்தையை தெரிந்தெடுப்பது மிகவும் எளிய மற்றும் சிறந்த மாற்று வழிமுறையாகும். மேலும் மாற்று அணுகுமுறையாக வர்த்தக கட்டுப்பாட்டுக்குட்பட்ட பொருட்கள் அல்லது சேவைகளை உள்நாட்டில் உற்பத்தி செய்வதை மேம்படுத்துவது மிகச் சிறந்த வழிமுறையாகும். சவால் மிக்க இந்த அணுகுமுறையானது நீண்டகாலத்திற்கு பயனளிக்கும் செயல்முறையாகும்.
சுங்க வரி மற்றும் வரி
இலக்கு சந்தையில், விற்பனைக்கு பின்னர் சிறப்பான சேவைகளை வழங்குதல் இப்பிரச்சினையை சமாளிப்பதற்கு சிறந்த தீர்வாகும். பெறுமதியான பொருட்களாக இருந்தால், நீங்கள் வழங்கும் இந்த சேவை ஊடாக அந்த பொருட்களின் பெறுமதி மென்மேலும் அதிகரிக்கும். சிறந்த உற்பத்திகளை வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து வழங்கி வந்தால், அந்த பொருட்களை அவர்கள் இறக்குமதி செய்வதை தவிர்ப்பார்கள். அத்தகைய உற்பத்தி செயற்பாடுகளில் ஈடுபடும் உள்நாட்டு நிறுவனங்களுடன் நீங்கள் இணைந்து உற்பத்தி செயற்பாடுகளில் ஈடுபடுங்கள்.
இறக்குமதி மற்றும் கட்டண ஒதுக்கீடுகள்
உலகளாவிய ரீதியில் அதிக வரவேற்பு கிடைக்கக்கூடிய நாடுகளுக்கு ஏற்றுமதி செயற்பாடுகளை மேற்கொள்ளுங்கள்;. அத்தோடு ஒதுக்கீட்டிற்கு உட்படுத்தப்படாத தயாரிப்புகள் மற்றும் சேவைகளை உள்நாட்டில் உற்பத்தி செய்வதன் மூலம் நாட்டில் இறக்குமதி பொருட்களை தவிர்த்து இலக்கு சந்தைக்கான பொருட்களையும் சேவைகளையும் நாமே உற்பத்தி செய்யலாம். இதன் மூலம் நாட்டின் பணப்புழக்கத்தை தக்கவைத்துக்கொள்ள முடியும்.
அரசு மானியங்கள்
ஒரு உற்பத்தி பொருளுக்கு வழங்கப்படுகின்ற அரசு மானியங்களானது, வெளிநாட்டு சந்தையில் கொள்வனவாளர்களின் ஈர்ப்பை அதிகரிக்கும். அத்துடன் மதிப்பை அதிகரிக்கவும் உதவுகின்றது. அத்தகைய தயாரிப்புகள் மற்றும் சேவைகளை மனங்கவர் வகையில் சிறப்பான முறையில் சந்தைப் படுத்துவதன் மூலம் நீங்கள் கோருகின்ற மேம்படுத்தப்பட்ட விலையை உங்களால் நியாயப்படுத்த முடியும்.
வர்த்தக தொகுதிகள்
குறிப்பிட்டதொரு அமைப்பில் ஒரு நாடு உறுப்பினராக இல்லாவிட்டாலும், அந்த நாட்டிலுள்ள நிறுவனமொன்றுடன் வர்த்தக உறவில் ஈடுபட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தை அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தையில் பங்குதாரராக முடியும். அத்தகைய நாடு தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தையில் அல்லது விருப்பமான வர்த்தக உறவைக் கொண்ட ஒரு துணை நிறுவனத்தை தேர்ந்தெடுக்கலாம். ஏற்றுமதித் தேவையை தவிர்ப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தையில் உற்பத்தி வசதிகளில் முதலீடு செய்வது மற்றொரு சிறந்த நீண்ட கால தீர்வாகும். தயாரிப்பு அல்லது சேவையை அதன் உணரப்பட்ட மதிப்பை மேம்படுத்துவதற்கும், நியாயப்படுத்துவதற்கும் அதிகரித்து வரும் விலையை மாற்றியமைப்பது நடைமுறைக்கு சாத்தியமான அணுகுமுறையாகும்.
இறக்குமதி கட்டுப்பாடுகளிலுள்ள இடைவெளிகளை சமாளிக்க உலகெங்கிலும் உள்ள நாடுகளால் செயல்படுத்தப்பட்ட சில முக்கிய முறைகளே இவையாகும். இவற்றை இலங்கையின் நிலைமைக்கு ஏற்ப மாற்றி, நாட்டின் பொருளாதார மேம்பாட்டின் நலனுக்காக இவ்வழிமுறைகளை பயன்படுத்துவதே சிறந்த தீர்வாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.