spot_imgspot_img

உணவு உற்பத்தித்துறையில் மேற்கொள்ள வேண்டிய புரட்சிகள் மற்றும் மாற்றங்கள்

கொவிட்-19 தொற்று நோய் காரணமாக உணவு உற்பத்தி துறையானது உலக அளவில் பெருமளவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் உலக அளவில் தற்போது உணவு பற்றாக்குறை ஏற்படவுள்ளதாக செய்திகள் எம்மை வந்தடைகின்றதுடன் இவை எம்மை அச்சப்பட வைத்துள்ளன. தொற்றுநோயால் ஏற்பட்ட இடையூறுகள் காரணமாக> உலகெங்கிலுமுள்ள உற்பத்தி அலகுகள், களஞ்சியசாலை வசதிகள் மற்றும் உணவகங்களை மூடுவதற்கான வழிகள் ஏற்பட்டன. இதுதவிர அநேகர் தமது வேலைகளை இழந்தமையும் உணவு உற்பத்தி சங்கிலியில் நிலவிய ஒழுங்கின்மையும் இந்த நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி மற்றும் உரப் பிரச்சினையானது இந்த இக்கட்டான நிலைமையை இரட்டிப்பாக்கியுள்ளது. எனவே> இந்த நிலைமைகளை எதிர்கொள்ள மற்றும் உணவுப் பற்றாக்குறைகளுக்குப் பதிலளிக்கும் முகமாக> எமது இலங்கை நாடானது குறகிய காலத்திற்குள் தமது செயல்முறைகளை மறுபரிசீலனை செய்து> மறுசீரமைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இச்சூழலில் உணவுத் தொழிலை துரித வேகத்தில் சூழ்நிலைக்கேற்ப மாற்றிக்கொள்ள உதவும் ஒரு உறுதியான மற்றும் தீவிரமான மீட்புத் திட்டத்தை உருவாக்குவதும் மிகவும் முக்கியமானதாக உள்ளது.

நாட்டின் உணவு உற்பத்தித் கட்டமைப்பைப் பாதுகாத்தல்

குறுகிய கால தீர்வாக> எமது முதலாவது பணியாக> நாட்டின் உணவு உற்பத்தித் திறனைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டியது அவசியமாகும். இதனூடாக உள்நாட்டு விவசாயம்> உற்பத்தி> பதப்படுத்துதல் மற்றும் உணவு சேவைத் துறைகள் அவற்றின் செயல்பாட்டு மற்றும் செலவுச் சவால்களை எதிர்கொள்ளவும் தொற்றுநோயிலிருந்து மீளவும் உதவும். நீண்ட கால திட்டமாக> அரசாங்கமானது உணவு பானங்கள் மீதான அதன் விதிமுறைகளை மாற்றியமைத்து, தன்னிறைவை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அத்துடன் இரசாயன உர இறக்குமதித் தடை தொடர்பாகவும் அவர்கள் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

உலகளாவிய ரீதியில் கொவிட்-19 காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொள்ளும் அரசாங்கத்தின் செயற்பாடாக எமது உணவுத் தேவையின் பெரும்பகுதியை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வது தொடர்பாக அதிக கவனம் செலுத்த வேண்டியது முக்கியமாகும். இதற்கு பெரிய அளவில் முதலீடுகள் தேவைப்படும் என்பதை மறுக்க முடியாது. எனினும் இந்த செயற்பாட்டில் நாம் வெற்றியடைந்தால்> சமூக மற்றும் பொருளாதார ஆதாயங்கள் குறிப்பிடத்தக்க அளவில் இருக்கும் என்பதையும் மறுப்பதற்கில்லை.

ஒத்துழைப்பு வழங்குவதன் ஊடாக உற்பத்தி இழப்பை குறைத்தல்

தொற்றுநோய் காரணமான முடக்க நிலை ஏற்பட்டமை மற்றும் மக்களின் தேவைப்பாடுகளில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக> உள்நாட்டு விவசாயம்> உற்பத்தி/செயலாக்குதல் மற்றும் விநியோகச் சங்கிலி ஆகியன கணிசமான அளவு பாதிப்பை சந்தித்துள்ளன. குறைந்தபட்சம் 6 முதல் 12 மாதங்கள் வரை அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் இந்த இழப்புகளைக் குறைக்க முடியும். விவசாயிகளுக்கு உதவிகள் வழங்கல் அல்லது உற்பத்தித்திறன் பயிற்சி போன்ற உதவிகளாக இருக்கலாம். அனுபவமுள்ள தொழிலாளர்களுக்கு உற்பத்தியை மேம்படுத்துவதற்கும்> தற்போதைக்கு செலவுகளைக் குறைப்பதற்கும் ஆதரவுத் திட்டங்களை அரசாங்கம் செயற்படுத்த முன் வர வேண்டும்.

உணவு உற்பத்தி/செயல்முறை மற்றும் விநியோகச் சங்கிலி அலகுகளுக்கான ஆதரவானது> பராமரிப்பு மற்றும் மீட்பு வடிவத்தை கொண்டதாக இருத்தல் வேண்டும். உணவு வியாபாரங்களின் பணப்புழக்கத்தை பராமரிக்கவும் அவற்றின் இழப்புகளை சமாளிக்கவும் அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகளை செயல்படுத்தி ஒழுங்குபடுத்த வேண்டுடியது அவசியமாகும். எவ்வாறாயினும்> இங்கு நிலவும் சவால் எதுவெனில்> அத்தகைய நடவடிக்கைகள் குறுகிய காலத்தில் அதிக ஒத்திவைப்பு செலவுகளை ஏற்படுத்தும்> இலங்கையில் இவற்றை தற்போது நடைமுறைப்படுத்துவதற்கான வழி இல்லை. எவ்வாறாயினும், இதற்கு சார்பானதொரு மூலோபாயத்தை செயல்படுத்தினால்> நீண்ட காலம் பயன்களை பெறலாம் என்பதை மறுப்பதற்கில்லை.

தூய்மை மற்றும் சுகாதாரத்தை மேம்பாடு செய்தல்

கொரோனா தொற்று நோய் காரணமாக ஹோட்டல் சார்ந்த உணவக வியாபாரம் கடுமையான பாதிப்புக்களை சந்தித்துள்ளன. நாட்டின் முடக்க நிலைமையின் விதிமுறைகள் நீக்கப்பட்டு தற்போது தளர்வு நிலை காணப்பட்டாலும், இந்த கடினமான நேரத்தில் மக்கள் தாம் நுகர்வு செய்பவை தொடர்பாகவும் அவற்றின் விலைகள் தொடர்பாகவும்; அதிக எச்சரிக்கையுடன் இருப்பதால்> உணவகங்கள் பெரும் இழப்புகளையும் செயல்பாட்டு சவால்களையும் சந்தித்து வருகின்றன. இதுதவிர சுகாதார காரணிகள் காரணமாகவும் மக்கள் இன்னும் உணவகங்களுக்குச் செல்வதில் பெரிதும் ஆர்வம் காட்ட அச்சப்படுகின்றனர். உணவகங்கள் மற்றும் கஃபேக்களில் தூய்மை மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்துதல்> உணவுகளை மக்களின் வீடுகளுக்கு கொண்டு சென்று விநியோகிக்கும் நடைமுறைக்கு மாறுவதே இந்த அச்சத்தை போக்க சிறந்த வழிமுறையாகும்.

இறுதியாக, எமது உணவுத்துறையை வழமைக்க்கு திருப்ப அரசாங்கம் மற்றும் வியாபாரம் ஆகிய இரண்டினதும் பங்களிப்பு தேவைப்படுகிறது. முன்னோக்கி செல்லவுள்ள பாதையானது நிச்சயமற்றும் சவால்கள் நிறைந்ததுமாக தென்படுகின்றன. ஆனால் சரியான முடிவுகளை எடுப்பது இந்த உலகளாவிய உணவுப் பற்றாக்குறையிலிருந்து எம்மை பாதுகாக்கும் என்பதை மறுப்பதற்கில்லை.

Get in Touch

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

spot_imgspot_img

Related Articles

spot_img

Get in Touch

Latest Posts

X