நமது பண்டையகாலத் தலைவர்கள் எப்படிப் படைகளை உருவாக்கி அவர்களைப் போருக்கு அழைத்துச் சென்றார்கள், அவர்கள் உயிருடன் பார்க்க முடியாத காரணங்களுக்காகப் போராடினார்கள் என்று நீங்கள் எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா? ஆபிரகாம் லிங்கன் எப்படி அமெரிக்க உள்நாட்டுப் போருக்கு முற்றுப்புள்ளி வைத்தார் என்று எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா? இதற்கான விடை மிகச் சுலபமானது. அவர்கள் தங்கள் இலக்கை நோக்கி மக்களின் நம்பிக்கையை வெல்வதில் சிறந்தவர்கள். எனவே, உங்களைப் போன்ற ஒரு தொழில்முனைவோருக்கு இந்த திறன் ஏன் தேவையாகவுள்ளது?
தொழிலதிபர் ஒருவர் மாற்றத்திற்கான முகவராக இருப்பதால், ஒரு நபரின் கண்ணோட்டத்தை திறம்பட பரிமாற்றிக் கொள்வதும், மாற்றிக் கொள்வதும் தொழில்முனைவோர் ஒருவருக்கு இருக்கக்கூடிய மிக முக்கியமான திறன்களில் ஒன்றாகும்! நீங்கள் ஒரு புதிய தயாரிப்பு அல்லது சேவை, ஒரு புத்தாக்கம் ஆகியவற்றை வெளிக்கொண்டு வந்து, அவர்கள் இதுவரை அனுபவித்திராத இந்தப் புத்தாக்கத்தை வாங்க மற்றவர்களை அழைக்கிறீர்கள். வாடிக்கையாளர்கள் உங்கள் தயாரிப்பை கண்மூடித்தனமாக நம்பி வாங்க முன்வரமாட்டார்கள். முதலீட்டாளர்கள் தங்கள் திறமை மற்றும் திறன் மீது நம்பிக்கை வைக்க முடியாத நிறுவனங்களுக்கு முதலீடு செய்வதில்லை. அத்தகைய பங்குதாரர்களை நீங்கள் கவனமாக உங்கள் மீது நம்பிக்கையை ஏற்படுத்தச் செய்ய வேண்டும், இங்குதான் அடுத்தவர்களை உங்கள் மீது நம்பிக்கை கொள்ளச் செய்கின்ற உங்கள் திறன் முக்கியமானது. நீங்கள் அடுத்தவர்களை உங்கள் மீது நம்பிக்கை கொள்ளச் செய்வதற்கு உதவும் சில உதவிக்குறிப்புகளைப் பார்ப்போம்.
- நம்பிக்கையுடனும் ஆர்வத்துடனும் இருங்கள்:
லெய்செஸ்டர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில் (study published by researchers at the University of Leicester), பிரைஸ் அன்ட் ஸ்டோன் (2004) (Price & Stone (2004)) இன் முடிவுகள் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது மிகவும் நம்பிக்கையான உரையாடலில் பங்குகொள்பவர் மிகவும் திட்டவட்டமாக சரியான தீர்ப்புகளை வழங்குகிறார் மற்றும் அதிக அறிவாற்றல் கொண்டவர் என்று மக்கள் கருதுகின்றனர். நீங்கள் எந்த உற்சாகமும் நம்பிக்கையும் இல்லாமல் அவர்களிடம் சென்றால், உங்கள் தயாரிப்பின் மீது உங்களுக்குக் கூட நம்பிக்கை இருக்காது என்பதை வாடிக்கையாளர்கள் விளங்கிக் கொள்வார்கள். அத்தகைய ஒன்றை அவர்கள் ஏன் வாங்க வேண்டும்? - மேலும் செல்வாக்குடையவர்களாக மாறுங்கள்:
நீங்கள் சொல்லும் ஒரு விடயத்தைச் சொல்வதற்கு நீங்கள் தகுதியானவர் என்று அவர்கள் நம்புவதற்கான காரணங்களை நீங்கள் முன்வைக்க முடியும். வைத்தியர்கள் கழுத்துப்பட்டி மற்றும் வெள்ளை மேலாடை அணிவதற்கும், பொலிஸார் சின்னம் அணிவதற்கும் ஒரு காரணம் இருக்கிறது – அது அவர்களின் அதிகாரம் மற்றும் நம்பகத்தன்மையின் புலப்படும் அடையாளங்கள். அந்த நம்பகத்தன்மை அல்லது செல்வாக்குமிக்க சக்தி இல்லாமல், நீங்கள் யாரையும் உங்கள் மீது நம்பிக்கை கொள்ளச் செய்ய முடியாது. களத்தில் சக்தி மற்றும் தெரிவுநிலையைக் கொண்ட வலிமையின் சுயவிவரத்தை உருவாக்குவதே இதற்கான தீர்வு. உங்கள் ஆடைகள் அல்லது உரையாடலின் ஆரம்பத்தில் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பது உங்கள் செல்வாக்கை நிலைநிறுத்த உதவுமா? இது குறித்த விடயத்தில் நீங்கள் கொண்டுள்ள அனுபவமாக இருக்கலாம், அல்லது குறித்த உரையாடலுடன் தொடர்புடைய உங்கள் தகைமைகளாக இருக்கலாம். வெறும் பெருமையாக மட்டும் தம்பட்டம் அடிப்பதால் அது நிச்சயமாக நடப்பதில்லை. இது உங்கள் திறமைக்கான நேரடியான நிரூபணமாகவும் இருக்கலாம். பல மேற்கத்திய துப்பாக்கி சுடும் காட்சிகள் துப்பாக்கி ஏந்துபவர்கள் தங்கள் கைத்துப்பாக்கிகளுடன் தங்கள் திறமையை வெளிப்படுத்துவது அல்லது தற்காப்புக் கலை வீரர்கள் பல்வேறு நகர்வுகளைக் காட்டுவது போன்றவற்றுடன் தொடங்குவதற்கு ஒரு காரணம் இருக்கிறது – துப்பாக்கிச் சூடு அல்லது சண்டை ஆரம்பிப்பதற்கு முன் வாதத்தைத் தீர்க்க முயற்சிக்கும் வகையில் இது உள்ளது. - நீங்கள் உங்கள் மீது நம்பிக்கை கொள்ளச் செய்ய முயற்சிக்கும் நபரைப் புரிந்து கொள்ளுங்கள்:
உங்கள் முன்னால் உள்ளவர்களை நீங்கள் வழங்கும் தகவல் விபரங்களால் மூழ்கடிக்க முயற்சிக்கும் முன், அவர் உங்கள் தயாரிப்பில் ஆர்வம் காட்டுகிறாரா என்பதை அறிந்து கொள்ள முயற்சிக்கவும். இல்லை என்றால், உங்கள் நேரத்தை வீணடிப்பதில் அர்த்தமில்லை. அவரது மனநிலையைப் புரிந்து கொள்ள முயற்சிக்கவும் மற்றும் அவர்களின் மனநிலை மற்றும் ஆர்வங்களுக்கு ஏற்ற கோணத்தில் முயற்சிக்கவும். உங்கள் முன்னால் உள்ளவர்கள் தொடர்பான ஒரு அனுதாப மதிப்பீடு உங்கள் அணுகுமுறையை மாற்றியமைக்கவும் சரியான தொனியில் உங்கள் மீது நம்பிக்கை ஏற்படுத்துவதற்கு உங்களுக்கு வழிகாட்டும். - அவசரப்படாமல் நிதானமாகக் கூறுங்கள்:
நீங்கள் நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள், வாடிக்கையாளருக்கு நேரத்தை எடுத்துக்கொள்ள இடமளியுங்கள், வாடிக்கையாளர் தாமாகவே உங்கள் மீது நம்பிக்கையை ஏற்படுத்திக் கொள்ளட்டும். நம்பிக்கை கொள்ளத் தூண்டுதலின் வலுவான வடிவங்களில் இதுவும் ஒன்றாகும். நம்பிக்கை கொள்ளச் செய்வது ஒரு நுட்பமான கலை. உங்கள் வார்த்தைகளை கவனமாகத் தேர்ந்தெடுத்து, தேவையான பல காட்சி விளக்க உதவிகளைப் பயன்படுத்தவும். நீங்கள் அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனை கூறுங்கள் மற்றும் உங்கள் ஆலோசனையைப் பின்பற்றாததால் ஏற்படும் விளைவுகள் பற்றிய நடைமுறை உதாரணங்களைக் கொடுங்கள். ஒரு நிதானமான அணுகுமுறையை கைக்கொள்ளுங்கள் (Adopt a calm approach). கணிப்பிடப்பட்ட மற்றும் நியாயமான முறையில் ஒரு நபரை நீங்கள் நம்ப வைக்க அதிக வாய்ப்பு உள்ளதாக ஆய்வு முடிவுகள் புலப்படுத்தியுள்ளன. இந்த நடவடிக்கைகள் மற்றும் நியாயமான அளவில் பரஸ்பரம் விவாதித்த பிறகும் அவர்களுக்கு நம்பிக்க பிறக்கவில்லை என்றால், அவர்கள் எளிதாக நம்புவதை மேற்கொள்வது சாத்தியமில்லை.
நீங்கள் சொல்வதை எல்லோரையும் நம்ப வைக்க முடியாது. இதுவே உலக வழக்கம். ஆனால் அலுவலகத்தில், கற்கும் இடத்தில், மற்றும் கோப்பி மேசை மற்றும் சமையலறை மேசையைச் சுற்றிலும் கூட, மேலே உள்ள மூலோபாயங்களைப் பயன்படுத்துவது உங்கள் முன்னால் உள்ளவர்களை உங்கள் பால் சிறப்பாக ஈர்க்கச் செய்ய உதவும்.