spot_imgspot_img

நியாயமான ஊதியம் அவசியம்!

சமத்துவத்தை உறுதி செய்யும் வகையில், நன்கு வடிவமைக்கப்பட்ட ஊதியத் திட்டத்தை கொண்டிருப்பது, அனைத்து தொழில்தருநர்களுக்கும் மிகுந்த முன்னுரிமையாக இருக்க வேண்டும். எந்தவொரு நபரும் வேலை செய்ய ஊக்குவிப்பினையும், உந்துசக்தியையும் உணர வேண்டும் என்றால், அவர்கள் என்ன செய்கிறார்களோ அதற்கேற்ப நியாயமான ஊதியம் வழங்கப்படுவதாக உணர வேண்டும். ஒவ்வொரு பணியாளரும் தனது சகாக்களுக்கு சமமாக நடத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள். மேலும் மக்கள் உள்ளுணர்வாக நியாயமற்ற தன்மையை உணரும் போது,  இது மிகவும் பாதிக்கும் விளைவை ஏற்படுத்தும். இது அவர்களின் செயல்திறனையும் வினைதிறனையும் பாதிக்கும் என்று நீங்கள் நினைக்கவில்லையா?

எந்தவொரு சட்டபூர்வ கடமைகள் மற்றும் பொறுப்புகள் தவிர, உங்கள் நிறுவனத்திற்கான நியாயமான ஊதிய மூலோபாயத்தை உருவாக்குவதில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்றாகும்.

“எப்படி” என்பதைப் பார்ப்பதற்கு முன், நியாயமான ஊதியம் என்ன என்பதைப் பார்ப்போம்.

நியாயமான ஊதியம்

ஊதியம் என்பது ஒரு பணியாளருக்கு உங்கள் வணிகத்திற்காக அவர்கள் செய்யும் பணிக்கு ஈடாக நீங்கள் வழங்கும் மொத்த பணம் மற்றும் பணமில்லாத கொடுப்பனவு ஆகும். இது பொதுவாக பெரும்பாலான வணிகங்களுக்கான மிகப்பெரிய செலவுகளில் ஒன்றாகும். ஆனால் ஊதியம் என்பது ஒரு ஊழியரின் வழக்கமான அடிப்படை ஊதியத்தை விட அதிகம். இது அவர்களின் கூடுதல் பணி நேர கொடுப்பனவுகள், போனஸ் ஊதியம் மற்றும் பிற ஊக்குவிப்பு அடிப்படையிலான கொடுப்பனவுகள், அங்கீகாரம் மற்றும் வெகுமதிகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பல கூறுகளை உள்ளடக்கியிருக்கும்.

இந்த ஊதியமானது தொழில்துறை, வருவாய், இலாபம், அளவு மற்றும் எந்தவொரு இணைப்பு ஸ்தாபனங்கள் போன்ற நிறுவன பண்புகளையும் சார்ந்துள்ளது. உதாரணமாக, வெளிநாட்டு வாடிக்கையாளர்களுடன் (குறிப்பாக ஐரோப்பிய அல்லது அமெரிக்கர்கள்) கையாளும் பல உள்ளூர் நிறுவனங்கள் தங்கள் சகாக்களுடன் ஒப்பிடும்போது அதிக சம்பளம் மற்றும் சிறந்த வரப்பிரசாதங்கள்/கொடுப்பனவுகளை வழங்குவதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். அந்த வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு ஒரு வழங்குநர் ஆக தகுதிபெற, அத்தகைய நிறுவனங்கள் வெளிநாட்டு நியாயமான ஊதிய நடைமுறைகளுடன் ஒத்துப்போவதும், சில சமயங்களில் செலுத்த வேண்டிய தொகைகளும் கூட கட்டாயமாக இருப்பதால் இது ஓரளவுக்கு காரணமாகும். உங்கள் பணியாளர் ஊதியம் நியாயமானதாக இருக்க, அவர்கள் என்ன செய்கிறார்கள், அவர்களின் பொறுப்புகள், பதவி மற்றும் தொழில் சந்தையில் தற்போதைய ஊதிய வீதங்கள்/தரநிலைகள் அல்லது தொழில்முறை நிறுவனங்களால் பரிந்துரைக்கப்பட்டவற்றின் படி நீங்கள் அவர்களுக்கு ஊதியம் வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும். சில தொழில்களில், ஊதிய வீதங்கள் தொழிற்சங்கங்களுடனான பேச்சுவார்த்தைகள் மூலம் நிர்ணயிக்கப்படலாம் அல்லது அரசாங்க பரிந்துரைகளுக்கு உட்பட்டு இருக்கலாம்.

இதை எப்போது செய்ய வேண்டும்?

எந்தவொரு நிறுவனத்திலும் நியாயமான ஊதிய மூலோபாயம் அவசியம் இருக்க வேண்டும், கைமீறும் நிலைமை வரும் வரை அதற்காக காத்திருக்கக்கூடாது. நிறுவனம் எந்த நெருக்கடியில் இருந்தாலும், நிறுவனம் எந்த வளர்ச்சி நிலையில் இருந்தாலும், அல்லது நாட்டின் பொருளாதாரம் எவ்வளவு மோசமாக இருந்தாலும், நிறுவனம் தனது ஊழியர்களுக்கு சரியான நேரத்தில் ஊதியம் செலுத்த சட்டபூர்வமாக கடமைப்பட்டுள்ளது. நிறுவனம் நெருக்கடி, இணைப்பு அல்லது ஊழியர்களின் பணியின் நோக்கத்தையும் நிறுவனத்தின் செயல்பாட்டு மாதிரியையும் பாதிக்கும் எந்த வகையான மாற்றத்தையும் சந்திக்கும் போது, ஊதிய மூலோபாயம்/கொள்கையை மறுபரிசீலனை செய்து தேவையான திருத்தங்களைச் செய்வது முக்கியம்.

உங்கள் ஊழியர்களுக்கு எப்படி சம்பளம் கொடுக்கிறீர்கள்?

ஒரு ஊழியரின் நியாயமான ஊதியத் தொகுப்பைத் தீர்மானிக்க பல வழிகள் உள்ளன. நீங்கள் பணியாளர் ஊதியத்தை எவ்வாறு நிர்ணயித்தாலும், நீங்கள் உள்ளக சமத்துவத்தை கருத்தில் கொள்ள வேண்டும். நியாயமான ஊதியத்தை உறுதி செய்வதற்காக உங்கள் வணிகத்தில் உள்ள பதவி நிலைகளை நீங்கள் ஒப்பிட்டுப் பார்க்கும் போது உள்ளக சமத்துவத்தைப் பேணலாம். உங்கள் வணிகத்தின் ஆரம்ப கட்டங்களில், தொழில்துறை தரங்களுடன் பொருந்துவது மற்றும் கணிசமான உயர் ஊதியத்தை வழங்குவது கொஞ்சம் விவகாரமானதாகவும் கிட்டத்தட்ட சாத்தியமற்றதாகவும் இருக்கும் (உங்களிடம் கணிசமான அளவு மூலதன கையிருப்பு இல்லாவிட்டால்). நீங்கள் உங்கள் நிறுவனத்திடம் ஊதியம் பெற்றால், உங்கள் இலாபத்தில் இருந்து பணம் செலுத்துவதே சிறந்த நடைமுறையாக இருக்கும், வருவாயில் இருந்து அல்ல.

இருப்பினும், மேலே குறிப்பிடப்பட்ட அம்சங்களைத் தவிர, நீங்கள் எப்போதும் பின்வருவனவற்றை உறுதிப்படுத்த வேண்டும்

இருப்பினும், மேலே குறிப்பிட்டுள்ளவற்றை தவிர நீங்கள் கீழ்வருவனவற்றையும் எப்போதும் உறுதிப்படுத்த வேண்டும்

  • ஊதியம் பாரபட்சமின்றி நேர்மையாக, தகுதியின் அடிப்படையில் புறநிலையான முறையில், எந்தவித தயவும் அல்லது பாரபட்சமும் இல்லாமல் தீர்மானிக்கப்பட வேண்டும்.
  • உள்ளக சமத்துவத்தை உறுதி செய்வதற்காக, ஒரே மாதிரியான வேலையைச் செய்யும் அதே மட்டத்திலான சிரேஷ்ட நிலையில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் சமமாக ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
  • ஊதியம், குறிப்பாக பிற்காலத் திருத்தங்கள், மேலதிகாரியின் அகநிலை மதிப்பீட்டைக் காட்டிலும், முடிந்தவரை புறநிலை செயல்திறன் முடிவுகளின் முழுமையான பகுப்பாய்வு மூலம் தீர்மானிக்கப்பட வேண்டும்.
  • இரகசியத்தன்மை – அனைத்து ஊழியர்களும் அவர்களது ஊதிய விபரங்களை தனிப்பட்ட முறையில் வைத்திருக்க ஊக்குவிக்கப்பட வேண்டும், மேலும் ஊதியத் தொகைக்கு பொறுப்பு வகிக்காத எவரும் வேறு எந்தவொரு ஊழியரின் ஊதியத்தை அறிய முடியாது என்பதை உறுதி செய்தல் வேண்டும்.
  • சந்தை வீதங்கள். உங்கள் மொத்த ஊதிய மதிப்பு சந்தை வீதங்களில் இருந்து வெகுவாக வேறுபட்டிருப்பதை நீங்கள் அறிந்தால், உங்களுக்கு பிரச்சினை எழும். நீங்கள் குறைவான ஊதியம் வழங்கினால், சிறந்த திறமையாளர்களை ஈர்க்கவோ தக்கவைக்கவோ முடியாது. நீங்கள் அதிக ஊதியம் வழங்கினால், நீங்கள் ஒரு குறிப்பிட்ட மூலோபாயத்தைப் பின்பற்றாவிட்டாலன்றி, உங்கள் போட்டியாளர்களை விடவும் பாதகமான ஸ்தானத்தில் நீங்கள் இருப்பீர்கள், மேலும் உங்கள் ஊழியர்களுக்கு மோசமான ஊக்கத் தொகையை உருவாக்கலாம்.

நிறைவாக, நிறுவனத்தின் உற்பத்தித்திறன், ஊழியர்களின் செயல்திறன் மற்றும் சிறந்த வேட்பாளர்களின் ஈர்ப்பு மற்றும் தக்கவைத்தல், நிறுவனம் மீதான அவர்களின் நேர்மறையான அணுகுமுறையை நம்பியிருக்கும். நிறுவனத்தின் மீதான அவர்களின் அணுகுமுறையை வடிவமைப்பதில் ஊதியம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பரிசீலனைகளை புறக்கணித்தால் அது உங்களுக்கு ஆபத்தாக மாறலாம்.

Get in Touch

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

spot_imgspot_img

Related Articles

spot_img

Get in Touch

Latest Posts

X