spot_imgspot_img

வியாபாரங்களுக்கு அந்நிய செலாவணி ஏன் தேவைப்படுகின்றது?

அந்நிய செலாவணி, எஃப்எக்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இது வியாபாரமொன்றின் செலவுகள் மற்றும் வருமானம் ஆகிய இரண்டிற்கும் முக்கியமானது. ஒரு நாணயத்திலிருந்து இன்னொரு நாணயத்திற்கு மாற்றும்போது, நீங்கள் அவதானமான நிலையை எதிர்க்கொள்கின்றீர்கள். எனவே உங்கள் கட்டண உத்திகளைப் பற்றி நீங்கள் அதன்போது அதிகம் கவனம் செலுத்த வேண்டும். உங்களால் ஒருபோதும் நாணய அபாயத்தை முற்றிலுமாக அகற்ற முடியாது. இருந்தபோதிலும் அந்நியச் செலாவணியை எவ்வாறு கையாள்வது என்பதைப் புரிந்துகொள்வது மற்றும் உங்கள் இலாபத்தைப் பாதுகாக்கவும் இயன்றளவு பொருளாதார ரீதியாக வர்த்தகம் செய்ய நீங்கள் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பதையும் புரிந்துகொள்வது மிக முக்கியமாகும்.

நீங்கள் சிறு மற்றும் நடுத்தர அளவு வியாபாரங்களை முன்னெடுக்கும்போது அந்நிய செலாவணி எவ்வாறு பயன்படுகின்றது என்பது மற்றும் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய சில முக்கியமான விடயங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

நீங்கள் வெளிநாடுகளில் விற்பனை செய்யும் தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் விலைகளை அமெரிக்க டொலர்களில் நிர்ணயித்தல்

நீங்கள் இந்த அணுகுமுறையை கையாண்டால், நீங்கள் அறியாமலேயே உங்கள் விற்பனையானது கட்டுப்படக்கூடும். அமெரிக்க நாட்டவர்கள் வெளிநாட்டு நாணயத்தைப் பயன்படுத்தத் தயங்குவது போல், வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் அமெரிக்க டொலர்களைப் பயன்படுத்தத் தயங்கலாம். தமது உள்நாட்டு நாணயத்தை விட அமெரிக்க டொலரில் செலுத்துதன் சிரமத்தை உணரும் வாடிக்கையாளர்கள், வேறு இடத்தை நோக்கி செல்லக் கூடும்.

டொலருக்கும் உள்நாட்டு நாணயத்திற்கும் இடையிலான ஏற்ற இறக்கமானது, சந்தையில் மிக அதிகமாகவோ அல்லது குறைவாகவோ விலை நிர்ணயத்திற்கு உட்படலாம். உள்நாட்டு நாணயத்தில் உங்கள் உற்பத்திகளுக்கு விலையை நிர்ணயம் செய்வதன் ஊடாக இத்தகைய விளைவுகளை உங்களால் தவிர்க்க முடியும். அதேநேரம் விற்பனை மற்றும் இலாபத்தை அதிகரிக்கவும் முடியும்.

அந்நியச் செலாவணி மாற்று விகிதங்கள் எப்போதும் நிலையானதல்ல

உலகளாவிய அந்நிய செலாவணி சந்தையில் நாணயங்கள் ஜோடிகளாக வியாபாரம் செய்யப்படுகின்றன. அத்துடன் அவற்றின் மதிப்புகள் சந்தை சக்திகளுக்கு ஏற்ப மாறுபடும் தன்மை கொண்டது. நாணய ஜோடியின் ஒப்பீட்டு மதிப்பு நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருக்கும். எனவே சர்வதேச வியாபார மாற்று விகித உயர்வு மற்றும் தாழ்வுகளை உன்னிப்பாகக் அவதானிக்க வேண்டும். உதாரணமாக, நீங்கள் ஐரோப்பாவில் விற்பனை செய்யும் அல்லது ஐரோப்பிய சப்ளையர்களுடன் பணியாற்றும் இலங்கையை சார்ந்த வியாபாரமாக இருந்தால், சர்வதேச கொடுப்பனவுகளுக்கான உங்கள் நாணய ஜோடி ரூபாய்/ யூரோ (அல்லது LKR/EUR) ஆக இருக்கும். அனைத்து நாணயங்களைப் போலவே மாற்று விகிதமும் நிலையானது அல்ல என்பதை நினைவில் கொள்க.

ஒரு நாள் அது உங்களுக்குச் சாதகமாக அமையலாம். அதாவது யூரோவுக்கு எதிராக ரூபாய் பெறுமதி அதிகமாக இருக்கும். அடுத்த நாள் அது உங்களுக்கு பாதமாக இருக்கக்கூடும். அதாவது யூரோக்களுக்கு ஈடாக நீங்கள் குறைவான ரூபாய் தொகையை பெறுவீர்கள். மாற்று விகித ஏற்ற இறக்கங்களைத் தவிர்க்க, உங்கள் வியாபாரத்திற்கான நாணய விகிதங்கள் நன்றாக இருக்கும் போது உங்களுக்குத் தெரிவிக்கும் கட்டண எச்சரிக்கை சேவையைப் பயன்படுத்த வேண்டும். பல நிறுவனங்கள் தற்போது இந்த சேவையை வழங்குகின்றன. பொதுவாக உங்கள் நாணய ஜோடியானது, நீங்கள் விரும்பிய விகிதத்தை அடையும் போது மின்னஞ்சல் அல்லது குறுஞ்செய்தி ஊடாக உங்களுக்கு அறிவுறுத்தும் சேவையும் இதில் உள்ளடங்கும்.

வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து நீங்கள் கொள்வனவு செய்யும் உற்பத்திகள் மற்றும் சேவைகளுக்கு அமெரிக்க டொலரில் விலைப்பட்டியல்

இந்த சந்தர்ப்பத்தில் நீங்கள் செலுத்த வேண்டிய தொகையை விட அதிகமாக நீங்கள் செலுத்தலாம். சில சப்ளையர்கள் “பேட்” (விகித மதிப்பை அதிகரிப்பது) அமெரிக்க விலைக்கு சமமானதை நிர்ணயிக்கும் மாற்று விகிதத்தை பயன்படுத்துகின்றனர். நீங்கள் உங்கள் வாடிக்கையாளர்களுக்கு உள்நாட்டு நாணயத்தில் விலைப்பட்டியலைப் தயாரித்தல் மற்றும் அதை அமெரிக்க டொலர்களாக மாற்றுவதற்கு உங்கள் வங்கியுடன் இணைந்து பணிபுரிந்தால், நீங்கள் இறுதியில் குறைவான கட்டணத்தைச் செலுத்தலாம்.

வெளிநாட்டு நாணய கணக்குகள் உங்களுக்கு உதவியாக இருக்கக்கூடும்

உங்கள் வியாபாரமானது குறிப்பிட்ட வெளிநாட்டு நாணயத்தில் கொடுப்பனவுகளை அனுப்புவதும் பெறுவதும் வழக்கமாக இருந்தால், நீங்கள் வெளிநாட்டு நாணயக் கணக்கில் பணத்தைச் சேமிப்பது சாலச் சிறந்தது. வெளிநாட்டு நாணயத்தில் பணம் அனுப்புவதும் பெறுவதும் சாத்தியம் என்றால், அத்தகைய கணக்கு உங்களுக்கு மாற்று விகிதத்தில் சேமிக்க உதவும். நீங்கள் வெளிநாட்டு நாணயத்தில் பணம் செலுத்தி, அதை உங்கள் கணக்கில் வைப்புச் செய்தால், பின்னர் வெளிநாட்டு விற்பனையாளருக்குப் பணம் செலுத்த அதைப் பயன்படுத்தலாம். அமெரிக்க டொலருக்கு மாற்றுவதற்குப் பதிலாக அதை கணக்கில் வைத்திருப்பதன் மூலம், அதை மாற்றுவதற்கு நீங்கள் பணம் செலுத்த வேண்டியதில்லை.

தற்போது நாம் மிகவும் கொந்தளிப்பு மிக்க தண்ணீரில் பயணித்துக் கொண்டிருக்கும்போது, அந்நிய செலாவணி எவ்வாறு செயல்படுகிறது மற்றும் அது உங்கள் வியாபாரத்தை எவ்வாறு பாதிக்கலாம் என்பதைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியமானது. எனவே, அந்நிய செலாவணி போக்குகளை எப்போதும் அறிந்துகொண்டு அதனை படிக்கவும், அதனை ஆராய்ச்சி செய்யவும், அது புதுப்பித்த நிலையில் இருக்கவும் பார்த்துக் கொள்வது நல்லது.

Get in Touch

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

spot_imgspot_img

Related Articles

spot_img

Get in Touch

Latest Posts

X