spot_imgspot_img

தொழிலாளர்: உள்ளக தொழிலாளரா அல்லது வெளியிலிருந்து பணி அமர்த்தப்பட்டவரா?

உங்கள் வியாபாரத்தின் நாளாந்த செயற்பாடுகளை நிர்வகிப்பதில் நீங்கள் வேலைப்பளு கொண்டவராக இருக்கும்போது, முக்கியமான பணி ஒன்றை ஆரம்பிக்க வேண்டுமாயின், அந்த இடத்திற்கு தகுதியான தொழிலாளர் ஒருவரை நியமிப்பதே சிறந்தது என்பதே உங்கள் முதலாவது தேர்வாக இருக்கும். அந்த பணியை செய்வதற்கு வெளியிலிருந்து ஒருவரை நியமிப்பதா அல்லது உள்ளக பணியாளரைக் கொண்டு பணியை செய்வதா என்பது பற்றிய முடிவானது, பெரும்பாலும் முன்னர் நீங்கள் எடுத்த தீர்மானத்துடனேயே ஒத்துப்போகும். ஆனால் ஒரு குறிப்பிட்ட தொழிலுக்கு அல்லது முழு வேலை வகைக்கும் கூட எந்த அணுகுமுறை சிறந்தது என்று சிந்திப்பது நன்மை பயக்கும்.

உள் மற்றும் வெளி தொழிலாளர்களை பணியில் அமர்த்ததும்போது அதில் நன்மை தீமை ஆகிய இரண்டும் கலந்ததாகவே இருக்கும். நீங்கள் அனைத்தையும் சிறிய மற்றும் வளர்ந்து வரும் தொழிலாக கருதி நோக்கும்போது, அது உங்களுக்கு சிறந்த பலனைத் தருவதாக அமையும்.

தொழிலாளர்: அத்தியாவசிய வியாபார செயற்பாடுகளை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்

உங்கள் போட்டி நன்மை தொடர்பான பணிகளை உள்ளக தொழிலாளர்களை கொண்டு செய்யுங்கள். இல்லையெனில், உங்கள் வியாபாரமானது, வெளி பணியாளர்களின் உதவியை நம்பி இருக்க வேண்டிய அபாயகரமான நிலைமைக்கு தள்ளப்படும். ஆகவே உள்ளக ஊழியர்களில் தங்கியிருப்பது உங்கள் வியாபாரத்திற்கு சாதகமாக அமையும்.

விசேடமாக சிறு மற்றும் வளர்ந்து வரும் வியாபாரத்திற்கு ஆரம்ப அடிப்படையாக எவை இருக்க வேண்டும் என்பதை ஆழமாகப் பார்ப்பது முக்கியம். உங்கள் நிறுவனத்தின் போட்டி நன்மைகளை ஒருபோதும் வெளி பணியாளர்களிடம் கொடுக்காமல் இருப்பதே சிறந்தது. அவ்வாறு செய்யாவிடின் இது உங்கள் நிறுவத்தின் கலாசாரம் மற்றும் ஒட்டுமொத்த நன்மைக்கும் தீங்கு விளைவிக்கும். முக்கிய செயற்பாடுகளில் நீங்கள் வெளிநபர்களை ஈடுபடுத்தும்போது உத்வேகமற்ற சாதாரண செயற்பாடாகவே அவர்களால் முன்னெடுக்கப்படும்.

உங்கள் ஊழியர்களுக்கு, நிறுவனத்தின் வெற்றிக்கு பங்களிக்கக்கூடிய முக்கிய பணிகளை வழங்குவதன் ஊடாக அவர்களை ஈடுபாட்டுடனும் ஊக்கத்துடனும் வைத்திருக்க உதவும் ஒரு சிறந்த வழியாகும். பணியாளர்கள் தாங்கள் சுவாரஸ்யமாகக் கருதும் பணிகளில் பணிபுரியும் போது அதிக உந்துதலை தாமகவே பெறுவார்கள். நீங்கள் ஊழியர்களுக்கு சுவாரஸ்யமான வேலையைக் கொடுத்து, அவர்களின் பணி நிறுவனத்திற்கு எவ்வாறு உதவுகிறது என்பதை அவர்களுக்கு எடுத்துக்காட்டினால், அவர்களது உந்துதல் அதிகரிக்கும்.

தொழிலாளர்: உங்களிடம் திறன்கள் அல்லது நிபுணத்துவம் இல்லாதபட்சத்தில் வெளி ஒருவரிடமிருந்து அதனை பெற்றுக்கொள்ளுங்கள்

உங்கள் வியாபாரத்திலுள்ள பணியாளர்கள் தொழில்நுட்பத்தில் வல்லுநர்களாக இல்லாதபட்சத்தில், உங்கள் வியாபாரத்தில் அன்றாடம் பாரிய அளவு தொழில்நுட்ப பணிகள் இல்லையெனில், அந்த பணிகளை வெளியிலிருந்து பெற்றுக்கொள்வது புத்திசாலித்தனமான முடிவாக இருக்கலாம். எடுத்துக்காட்டாக, இயற்கை உரம் கொண்ட காய்கறிகளை விற்பனை செய்யும் சிறு வியாபாரத்திற்கு சமூக ஊடகங்கள் தேவையில்லை. ஆனால் வெளியிலுள்ள சமூக ஊடக நபரை பணிக்கமர்த்துவது விற்பனையை அதிகரிக்க உதவக்கூடும். உங்கள் வியாபாரத்தின் போட்டி நன்மைக்கு முக்கியமல்லாத ஒரு பகுதியில் உங்களுக்கு அது தொடர்பாக பாரிய அறிவு இல்லாவிடின், வெளியிலிருந்து ஒருவரை அதற்கு அமர்த்துவது எளிமையான மற்றும் விலை குறைந்த தீர்வாக அமையும் என்பதை ஞாபகத்தில் வைத்திருங்கள்.

உங்கள் நிறுவனத்தின் நிபுணத்துவப் பகுதியுடன் ஒத்துப்போகும் வெளி ஊழியர் பணிகளை விட, அறிவு இடைவெளிகளை நிரப்புவதற்கான வழியாக வெளி ஊழியர்களை பயன்படுத்துங்கள். இது வெளிப்படையாகத் தெரிகின்றபோதிலும் சிறு வியாபாரங்கள் நாளாந்தம் இந்த தவறுகளை செய்வதை காணக் கூடியதாக உள்ளது. உங்களது பலம் வெளிப்படதாக இடங்களிலுள்ள பணிகளைக் கையாண்டு அவற்நை செய்வதற்கு வெளி ஊழியர்களை பணிக்கு அமர்த்துவதே சாலச் சிறந்தது.

நீங்கள் நேரக் கட்டுப்பாடுகள் தொடர்பாக அதிகம் கவனத்திற் கொள்வது நல்லது. உதாரணமாக, வாடிக்கையாளர் சேவை என்பது நேரத்தை அதிகம் செலவிட வைக்கும். தொலைபேசி அழைப்பு நிலைய சேவையை வெளியிலிருந்து பெற்றுக்கொள்வது அல்லது நேரடியாக பேசி தீர்வுகளைப் பெறும் வாடிக்கையாளர் சேவைக்கான தேவைகளைப் பூர்த்தி செய்வது உங்கள் வியாபார நேரத்தை சேமிப்பதற்கு உதவும். வெளி ஊழியர்கள் உதவக்கூடிய உங்கள் வியாபாரத்தின் பகுதிகளை அடையாளம் கண்டு அதற்கேற்ப செயற்படுவது முக்கியமாகும்.

உள் பணியாளர்களை பணியமர்த்த வேண்டுமா அல்லது வெளி பணியாளர்களை பணியமர்த்த வேண்டுமா? என்பதைத் தீர்மானிக்கும்போது, உங்கள் வியாபாரத்தின் தேவை எதுவென்பது பற்றி சிந்தித்து அதற்கேற்ப முடிவுகளை எடுப்பதே சாலச்சிறந்தது. ஏனெனில் இரண்டு விருப்பத் தேர்விலும் நன்மைகளும் தீமைகளும் உள்ளதை மறுப்பதற்கில்லை. உங்கள் வியாபாரம் எத்தகைய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதற்கான ஒப்பீட்டு தீர்மானங்களை எடுத்து அதில் சிக்கிக் கொள்ளாதீர்கள். தெருவில் இடம்பெறும் ஒரு வியாபாரத்தில் கூட அதாவது பேக்கரியை நடத்தினாலும், கணக்கியலில் பின்னணி கொண்ட ஒரு நிறுவனர் இருக்கலாம். அந்த வணிகமானது அதன் நிறுவனரின் நிபுணத்துவத்தின் காரணமாக கணக்குகளை சரிபரர்க்க வெளியிலிருந்து ஒருவரை பணிக்கமர்த்தாமல் இருக்கலாம், ஆனால் உங்கள் வணிகத்திற்கு கணக்கியல் அறிவில் குறைபாடு இருக்கலாம் அத்தகைய நேரத்தில் அந்த பொறுப்பிற்கு வெளியிலிருந்து ஒருவரை அமர்த்துவது சிறந்த தீர்வாக இருக்கும். இது நிறுவனத்திற்கு நிறுவனம் வேறுபடும். வெளி தொழிலாளர்களை அமர்த்துதல் மற்றும் உள்ளக பணியாளர்களை பணியமர்த்துதல் ஆகிய இரண்டிலும் குறைவுகளும் நிறைவுகளும் இருக்கத்தான் செய்கின்றன. எனவே அவற்றை கண்டறிந்து தீர்மானங்களை மேற்கொள்வது சிறந்தது.

Get in Touch

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

spot_imgspot_img

Related Articles

spot_img

Get in Touch

Latest Posts

X