சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு, வர்த்தக உலகில் இணைய சந்தைப்படுத்தல் கிட்டத்தட்ட முக்கியமற்றதாக இருந்தது. இருப்பினும், இன்று இது சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு நிறுவனத்திற்கு தனது வர்த்தகநாமம் மற்றும் தயாரிப்புகளை சந்தைப்படுத்துவதற்கான முதல் தெரிவு சந்தைப்படுத்தல் கருவியாகும். இணையம் அனைவரையும் எட்டிவிட்டது. உங்கள் வசம் என்ன வகையான இணைய சந்தைப்படுத்தல் உள்ளது என்பதை அறிந்து கொள்வோம். உங்கள் நிறுவனத்திற்கு எது சிறந்தது என்பதை நீங்கள் தெரிவுசெய்து, நீங்கள் இலக்கு வைக்கும் வாடிக்கையாளர்களை அடையாளம் கண்டு அவர்களை எட்டலாம்.
சமூக ஊடகம் மற்றும் தொடர்பு வலைப்பின்னல்
இன்றைய சந்தையில் உங்கள் வசம் இருக்கும் வலுவான இணைய சந்தைப்படுத்தல் வழிமுறையாக சமூக ஊடகம் உள்ளது. பெரிய நிறுவனங்கள் தங்கள் பட்ஜெட்டில் பல மில்லியன் கணக்கான தொகையை சமூக ஊடக சந்தைப்படுத்தல் பிரச்சாரங்களுக்காக செலவிடுகின்றன. ஏன்? ஏனெனில் இது தொலைக்காட்சி அல்லது பிற ஒலிபரப்பு முறைகள் போன்ற ஒரு வழி தொடர்பாடல் முறை மட்டுமல்ல.
சமூக ஊடகங்கள் நிறுவனங்களுக்கு உற்சாகத்தை உருவாக்கவும், வாடிக்கையாளர்களை குறிவைக்கவும், வாடிக்கையாளர் கருத்துக்களைப் பெறவும் உதவும். நீங்கள் இலக்கு வைக்குடன் சந்தையுடன் நிகழ்நேர இடைத்தொடர்புகளைப் பெறுவீர்கள். அவர்கள் விரும்புவதையும் விரும்பாததையும் சில வினாடிகளில் நீங்கள் கண்டுபிடிக்கலாம், அவர்களின் பதிலை அளவிடலாம் மற்றும் நிகழ்நேரத்தில் எதிர்வினையாற்றலாம். மேலும், நீங்கள் விரும்பும் நபர்களுக்கு மட்டுமே தெரியும் வகையில் நீங்கள் ஒரு முழுமையான குறித்த இலக்குடனான சந்தைப்படுத்தல் பிரச்சாரத்தைத் தொடங்கலாம். உதாரணமாக, நீங்கள் உதட்டுச்சாயத்தை விற்பனை செய்கிறீர்கள் என்றால், குறிப்பிட்ட வயது வரம்பிற்குள் உள்ள பெண்களுக்கு மட்டுமே உங்கள் விளம்பரம் காண்பிக்கப்பட வேண்டும் என்று நீங்கள் குறிப்பாக இலக்கு வைக்கலாம். திறமையான மற்றும் பயனுள்ள, அதாவது செலவழித்த ஒவ்வொரு டொலருக்கும் நீங்கள் சிறப்பான வழியில் உங்கள் இலக்கினை அடைவீர்கள்.
மேலும், வாசகர்களை ஈர்க்கும் உள்ளடக்கத்தை உருவாக்கி, அவர்களின் சொந்த சமூக ஊடகக் கணக்குகள் மூலம் உள்ளடக்கத்தைப் பகிர ஊக்குவிப்பதன் மூலம் இணையதள பார்வையாளர் எண்ணிக்கை அதிகரிப்பைப் பெற நீங்கள் சமூக ஊடகத் தளங்களைப் பயன்படுத்தலாம். இது நிறுவனத்தின் மீது நம்பிக்கையை வளர்த்து, உங்களைப் பின்பற்றுபவர்கள் தமது வடம்டத்தில் உங்களைப் பற்றி பிரலப்படுத்தும் வகையில் நீங்கள் மிகுந்த உச்சப்பயனை பெற முடியும்.
இணைய விளம்பரம்
நிறுவனங்கள் விளம்பர இடைவெளியை அல்லது அனுசரணையாளர் இடைவெளியை ஒரு இணையதளத்தில் வாங்குகின்றன. பத்திரிகை அல்லது செய்தித்தாளில் வர்த்தகநாம விழிப்புணர்வை ஏற்படுத்த அல்லது தங்கள் சொந்த இணையதளங்களுக்கு கிளிக் செய்வதன் மூலம் அவற்றைப் பார்வையிடுவதைப் போன்றே இதுவும் நிகழ்கிறது. மோட்டார் கார் ஆர்வலர் தளம் அல்லது நீங்கள் மோட்டார் வாகன வணிகத்தில் ஈடுபட்டிருந்தால் அல்லது நீங்கள் ஆடையணி விற்பனையில் ஈடுபட்டிருப்பின் நவநாகரிக பக்கம் போன்ற உங்கள் குறித்த இலக்கு பார்வையாளர்களிடையே பிரபலமான வலைச் சொத்துடமை இருந்தால், இது எளிதான தீர்மானமாகும்.
மின்னஞ்சல் சந்தைப்படுத்தல்
நிறுவனங்கள், உறவுகளை வளர்ப்பதற்கும், விசுவாசத்தை ஊக்குவிப்பதற்கும், வாடிக்கையாளர்களுடன் தொடர் வணிகத்தை முன்னெடுப்பதற்கும், புதிய வாடிக்கையாளர்களைப் பெறுவதற்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்குத் தங்கள் செய்தியை அனுப்ப, கண்காணிக்கக்கூடிய, நேரடி சந்தைப்படுத்தல் முறையைப் பயன்படுத்துகின்றன. இருப்பினும், Boxbe போன்ற சேவைகளின் அறிமுகம் மற்றும் கூகுள் ஜிமெயிலின் புரொமோஸன் ஃபில்டர் (Google Gmail’s Promotion filter) மற்றும் தொடர்ந்து வளர்ந்து வரும் தேவையற்றதைக் (spam) கண்டறிதல் தொழில்நுட்பம் போன்ற அம்சங்களுடன், இந்த மூலோபாயம் முன்பு இருந்ததைப் போல் பயனுள்ளதாக தற்போது இல்லை. மின்னஞ்சல் சந்தைப்படுத்தல் பரவலாக தவறாகப் பயன்படுத்தப்பட்டதால் இந்தக் கருவிகள் பெரும் மாற்றம் கண்டுள்ளன. இணையத்தில் நிறைய மின்னஞ்சல் உலாவரும் போது “spam” அல்லது தேவையற்ற என அடையாளப்படுத்தப்படுவதுடன், தேவையற்ற மின்னஞ்சல் (விளம்பர மின்னஞ்சல்களைத் தவிர வேறு பல வகைகளுக்கும் பொருந்தும்) என வகைப்படுத்தப்படுகிறது.
தேடுபொறி உகப்பாக்கம் (SEO) மற்றும் சந்தைப்படுத்தல்
இப்போதெல்லாம் கிட்டத்தட்ட யாரும் ஒரு முடிவைக் கண்டறிய தேடல் முடிவுகள் பக்கத்தின் கீழே செல்வதில்லை. எனவே, அதிகளவானோரின் கவனத்தை ஈர்க்க, உங்கள் இணையதளத்தை முடிவுகள் பக்கத்தின் உச்சியிலே காண்பித்து விளம்பரப்படுத்த விரும்பலாம். இதனால்தான், தேடுபொறி சந்தைப்படுத்தல் எனப்படும் கட்டண விளம்பரம் அல்லது தேடுபொறி தரவரிசையை மேம்படுத்துவதற்காக தங்கள் தளங்களில் மாற்றங்களைச் செய்வதன் மூலம், தேடுபொறி உகப்பாக்கம் எனப்படும், சில சமயங்களில் தந்திரமான செயல்முறை மூலம், தேடுபொறியில் தங்கள் வலைத்தளத்தின் தெரிவுநிலையை நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்த முயல்கின்றன.
இணை சந்தைப்படுத்தல் மற்றும் செல்வாக்கு செலுத்துபவர்கள்
நிறுவனங்கள் ஒவ்வொரு இணையத்தள வருகைக்கும் அல்லது இணை சந்தைப்படுத்தல் மூலம் பெறப்பட்ட விற்பனைக்கும் அவற்றுடன் இணைக்கப்பட்ட சொத்துகளுக்கு வெகுமதி அளிக்கிறது. இங்கே, உங்கள் தளத்திற்கு நபர்களைக் கொண்டு வர அல்லது விற்பனையைத் தொடங்க ஒரு துணை நிறுவனம் பிற விளம்பர முறைகளைப் பயன்படுத்தலாம். இது, உறவு/நம்பிக்கையால் முன்னெடுக்கப்படும் பரிந்துரை சந்தைப்படுத்துதலில் இருந்து வேறுபட்டது. ஏனெனில் தொடர்புடைய சந்தைப்படுத்தல் நிதி ரீதியாக மட்டுமே முன்னெடுக்கப்படுகிறது. பெரும்பாலும் வருவாய் பகிர்வு, விற்பனைக்கு பணம் செலுத்துதல் அல்லது ஒரு செயலுக்கு இழப்பீட்டு முறையாக பயன்படுத்தப்படுகிறது. மேலும், இப்போது செல்வாக்கு செலுத்துபவர்களில் முதலீடு செய்யும் போக்கு உள்ளது. இன்ஸ்டாகிராம், யூடியூப் மற்றும் பிற தளங்களில் அதிகப் பின்தொடர்பவர்களைக் கொண்ட “செல்வாக்கு செலுத்துபவர்கள்” அவர்களின் உள்ளடக்கத்திற்காக பெரும் எண்ணிக்கையானவர்களை ஈர்க்கின்றனர். மேலும் இந்த செல்வாக்கு செலுத்துபவர்களின் சமூகம் உங்கள் வழங்கலை ஆதரிக்கும் சமூகத்துடன் ஒன்றுடன் ஒன்று இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், நீங்கள் அனுசரணை வழங்க முயற்சிக்க விரும்பலாம். அவர்களின் ஒன்று அல்லது இரண்டு வீடியோக்கள், அல்லது உங்கள் வானலை வழி விளம்பர அங்கீகாரத்தை வழங்க, செல்வாக்கு செலுத்துபவர்களுடன் இணைந்து பணியாற்றுங்கள்.
மேலும் உசாத்துணை ஆதாரங்களுக்கு:
- உங்கள் சமூக ஊடக மூலோபாயத்தை மேம்படுத்த 3 வழிகள் (3 ways to optimize your social media strategy)
- உங்கள் தேடுபொறி தரவரிசையை மேம்படுத்த 5 உதவிக்குறிப்புகள்
- சரியான சந்தைப்படுத்தல் கலவையைக் கண்டறிதல் (Finding the correct Marketing Mix)