spot_imgspot_img

நிறுவனமொன்றின் பணிப்பாளர் சபை அங்கத்தவர்கள்

பணிப்பாளர் சபை என்பது வணிகத்தின் இதயநாடி போன்றது. எல்லாமே அவர்களைச் சுற்றிச் சுழன்று அவர்களை அனைத்திலும் உள்ளடக்கியது. பணிப்பாளர்கள் நிறுவனத்தின் பாரிய இலக்கினை எப்போதும் உற்றுநோக்குவதுடன், அவர்கள் வணிகத்தை அதன் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்கிறார்கள். சிறு வணிகங்களில், ஸ்தாபக முதலீட்டாளர்கள் பொதுவாக பணிப்பாளர்களாக மாறுகிறார்கள். இருப்பினும், வணிகம் வளரும் போது, வணிகம் (சில நேரங்களில், ஒழுங்குமுறை தேவைகளின் அடிப்படையில்) மிகவும் மாறுபட்ட பணிப்பாளர் சபைiயைக் கொண்டிருப்பது இன்றியமையாததாகிறது. பணிப்பாளர் சபை அங்கத்தவர்கள் குழுவின் அம்சங்களைப் பற்றி மேலும் அறிந்து கொள்வோம்.

வணிகத்திற்கான ஒரு மூலோபாய பாதையை கற்பனை செய்து அதனை திட்டமிட ஒரு பணிப்பாளர் தயாராக இருக்க வேண்டும். சில பணிப்பாளர்களுக்கு பொதுவான திறன்கள் இருக்கும், மற்றவர்களுக்கு வணிகத்திற்கு அவசியமான குறிப்பிட்ட திறன்கள் இருக்கலாம். இந்த திறன்கள் நிறுவனத்திற்கு மதிப்பு சேர்க்கும். ஒரு சிறந்த பணிப்பாளரிடம் இருக்கும் திறன்கள் என்ன?

  • நீண்ட கால பார்வை
  • புதிய முன்னோக்கு
  • உயர் செயல்திறன்
  • நீண்ட கால அனுபவம்
  • நிறைய தொடர்புகள்

ஒரு பணிப்பாளரின் வகிபாகம் சிக்கலானது மற்றும் முகாமைத்துவப் பாத்திரத்திலிருந்து வேறுபட்டது. முகாமையாளர்கள் மற்றும் பணிப்பாளர் சபை அங்கத்தவர்கள் இடையே உள்ள வலுவான உறவு, நிறுவனத்தின் வளர்ச்சிக்கான வரைபடத்தை உருவாக்கும் பாதையை இட்டுக்கொள்ள வழிகோலுகிறது. ஒரு பணிப்பாளரின் வகபாகம் என்பது சரியாக என்ன? பணிப்பாளரின் சில வகிபாகங்கள் இங்கே வருமாறு:

  • முகாமைத்துவத்துடன் கலந்தாலோசித்து நிறுவனத்தின் மூலோபாய குறிக்கோளை அமைத்துக் கொள்ளல்
  • நிறுவனத்திற்குள் நல்ல ஆட்சி நிர்வாகத்திற்கான சூழலை அமைத்தல்
  • சிறந்த திறமைசாலிகளின் வளர்ச்சியை நிர்வகித்தல் மற்றும் நிறுவனத்தில் முக்கிய பதவிகளுக்கான அடுத்த வாரிசுகளைத் திட்டமிடுதல்
  • சுயாதீன கணக்காய்வாளர்களால் மேற்கொள்ளப்படுகின்ற நிறுவனத்தின் கணக்குகள் மற்றும் பிற முக்கிய பகுதிகளின் கணக்காய்வை மேற்பார்வையிடுதல்
  • நிறுவனத்தின் நலனுக்காக செயல்படுதல்
  • நிறுவனம் வளர்ச்சி காண இடமளிக்கும் வழிகளில் தொழில்முறை தொடர்புகளை கட்டியெழுப்புதல் மற்றும் மேம்படுத்துதல்

இவை தவிர, நிறுவனம் தத்தளிக்கும் போது அதனை வழிநடத்துவதில் பணிப்பாளர்கள் முக்கிய பங்கு வகிக்க முடியும். பணிப்பாளர் சபை அங்கத்தவரின் சொந்த அறிவு மற்றும் நிபுணத்துவத்தில் நிறைய தங்கியிருக்க வேண்டும். எனவே, வணிகத்தின் பல்வேறு அக்கறைகளை நிவர்த்தி செய்வதில் மேற்பார்வை மற்றும் வழிகாட்டி முகாமைத்துவத்தை வழங்கக்கூடிய ஒரு பணிப்பாளர் சபையைத் தேர்ந்தெடுப்பது இன்றியமையாதது. சிறந்த பணிப்பாளர் சபை அங்கத்தவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளீர்களா? காலியான இடங்களை நிரப்ப இன்னும் சந்தர்ப்பம் உள்ளது.

Get in Touch

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

spot_imgspot_img

Related Articles

spot_img

Get in Touch

Latest Posts

X