spot_imgspot_img

சிறு வியாபாரங்களுக்கான வளர்ச்சி வியூகங்கள்: உங்களது வாடிக்கையாளர் தொகுதி விரிவுபடுத்தல் மற்றும் சந்தையில் செழித்தோங்குதல்

சிறு வியாபாரங்களை பொறுத்தவரை விரிவடையும் வாடிக்கையாளர் அமைப்பினைக் கொண்டிருப்பது நீண்டகாலம் குறித்த வியாபாரம் நிலைத்திருக்க அத்தியாவசியமானதாக அமைகின்றது. எனினும் போட்டித்தன்மை கொண்ட சந்தையில் புதிய வாடிக்கையாளர்களை பெறுவதும், தனித்துவமான ஒரு வியாபாரமாக தெரிவதும் சவாலானதாகும். இந்த கட்டுரை மூலம் நிரூபிக்கப்பட்ட சில உத்திகள் சிறு வியாபாரங்கள் தங்களது வாடிக்கையாளர் அமைப்பினை விரிவுபடுத்தவும், சந்தையில் செழித்தோங்கவும் ஆராயப்படுகின்றது.

உங்களது ஒன்லைன் இருப்பினை (Online Presence) சிறந்த முறையில் உறுதிப்படுத்துங்கள்: தற்கால டிஜிடல் உலகில், பல்வேறு விதங்களில் ஒன்லைன் இருப்பினை உறுதி செய்வது வாடிக்கையாளர்களை கவர அத்தியாவசியமானதாகும். பயனர்களுக்கு தொழில்முறை இணையதளம் ஒன்றினை உருவாக்கி அதனை தேடு தளங்களுக்காக (Search Engines) இசைவாக்கி (Optimization) கொள்ளுங்கள். நீங்கள் இலக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களை சமூக வலைதளங்களை பயன்படுத்தி இணைந்து கொள்வதோடு, பெறுமதியான உள்ளடக்கங்களை அவர்களுடன் பகிருங்கள். இன்னும் உங்களது உற்பத்திகளையும், சேவைகளையும் விளம்பரம் செய்வதற்கும் சமூக வலைதளங்களை உபயோகிக்கவும் அத்தோடு ஒன்லைன் மூலமான விளம்பரத்திற்கு முதலீடு செய்து உங்களது வியாபாரத்திற்கான எல்லையை (Reach) இன்னும் அதிகரித்துக் கொள்ளுங்கள். 

உங்களது இலக்கு வாடிக்கையாளர்களை (Target Audience) புரிந்து வையுங்கள்: உங்களது வாடிக்கையாளர்களை வினைத்திறனான முறையில் அதிகரித்துக் கொள்ள உங்களது இலக்கு வாடிக்கையாளர்கள் குறித்து அறிந்து வைத்திருப்பது அத்தியாவசியமானதாக காணப்படுகின்றது. சந்தை ஆய்வு ஒன்றை மேற்கொண்டு அவர்களின் தேவைகள், விருப்பம் மற்றும் கொள்முதல் அமைப்பு என்பவை குறித்து அறிந்து கொள்ளுங்கள். இது உங்களுக்கு உங்கள் சந்தை பற்றிய செய்திகளை அறிந்து அதற்கு இசைவாக வழிவகுக்கும். அதன் மூலம் உங்கள் தயாரிப்பு வழங்கலை சரியாக வடிவமைக்கவும், உங்கள் வாடிக்கையாளர்களாக மாறவிருப்பவர்களை அறிந்து சேவை வழங்கவும் முடியும்.

சிறந்த வாடிக்கையாளர் சேவையை வழங்குங்கள்: மிகவும் சிறப்பான வாடிக்கையாளர் சேவையை வழங்குவது உங்களது சிறு வியாபாரத்தினை ஏனைய போட்டியாளர்களிடம் இருந்து தனித்து தெரிய வைக்கும். வாடிக்கையாளர்களின் வியாபாரம் தொடர்பிலான வினவல்களுக்கு சரியாக பதில் வழங்குவதோடு, அவர்களது எதிர்பார்ப்பிற்கு மேலான சேவையை வழங்குங்கள். திருப்திக்கு உள்ளான வாடிக்கையாளர்கள் உங்களது வியாபார தூதுவர்களாக மாறி அவர்கள் உங்களது வியாபாரம் தொடர்பில் இன்னொருவருக்கு பரிந்துரை செய்வார்கள்.

பரிந்துரைகளின் வலிமை அறிந்து செயற்படுங்கள்: சிறு வியாபாரங்களுக்கு வாய் மூலம் மேற்கொள்ளப்படும்  பரிந்துரையானது (Word of Mouth) மிகவும் வலுவான ஒரு கருவியாக உபயோகப்படுகின்றது. திருப்தியடைந்த வாடிக்கையாளர்களை அது தொடர்பில் நண்பர்களுக்கு, குடும்பத்தினருக்கு, சகபாடிகளுக்கு பரிந்துரைக்க ஊக்கப்படுத்துங்கள். பரிந்துரைகளுக்கான ஊக்கப்படுத்தல் செயற்திட்டம் (Referrals Program) ஒன்றை நிறுவி உங்களது வியாபார உற்பத்திகள் அல்லது சேவைகள் பற்றிய செய்திகளை பரப்புவதற்காக வேலை செய்யுங்கள். விலைக்கழிவுகள், இலவச சேவை அல்லது பொருட்கள் வழங்குதல் (Freebies) மற்றும் பிரத்தியேகமான சேவை என்பவற்றை உங்களது பரிந்துரை செய்யும் வாடிக்கையாளர், பரிந்துரை செய்ய ஆரம்பிக்காத வாடிக்கையாளர் என இரண்டு தரப்பிற்கும் வழங்குங்கள்.

ஏனைய நிரப்பு வியாபாரங்களுடன் ஒன்றிணைவது (Collaborate with Complementary Businesses): நீங்கள் வழங்கும் விடயங்களை ஏற்கின்ற ஏனைய சிறு வியாபாரங்களுடன் பங்காளர்களாக மாறுங்கள். இருதரப்புகள் ஒன்றிணைந்து ஒவ்வொரு தரப்பினதும் உற்பத்திகளை அல்லது சேவைகளை பரஸ்பர ஒப்பந்தம் அடிப்படையில் விளம்பரம் செய்வது, உங்களுக்கு வாடிக்கையாளர் வாய்ப்பினை ஏற்படுத்தி தருவதோடு அது உங்களது வியாபார எல்லையையும் விரிவடையச் செய்யும். உதாரணமாக உடற்பயிற்சி நிலையம் (Fitness Studio) ஒன்று, ஆரோக்கிய உணவு (Health Food) வணிக நிறுவனம் ஒன்றுடன் இணைந்து செயற்படலாம். இந்த இரண்டு வியாபாரங்களும் ஒன்றிணைந்த வியாபார விளம்பரங்களையும், வாடிக்கையாளர் பயன்பாடு (Loyalty Programs) நிகழ்ச்சி திட்டங்களையும் செய்ய முடியும்.

இலக்குவைத்த சந்தைப் பிரச்சாரங்களை உருவாக்கல் (Implement Targeted Marketing Campaign): பரந்த வாடிக்கையாளர் தொகுதி ஒன்றை அடைவதனை தவிர்த்து, இலக்குவைத்த சந்தைப் பிரச்சாரங்களை உருவாக்குங்கள். இதற்காக தரவுப் பகுப்பாய்வு, வாடிக்கையாளர் பகுதியாக்கம் (Customer Segmentation) போன்ற எண்ணக்கருக்களை உபயோகம் செய்து குறிப்பிட்ட குழுக்களை இனம் காண முடியும். மின்னஞ்சல் சந்தைப்படுத்தலோ அல்லது உள்ளடக்க சந்தைப்படுத்தலோ அல்லது செல்வாக்கு கொண்டிருப்பவர் உடனான பங்களிப்போ (Influencer Partnership) என எதுவாக இருந்த போதிலும் சந்தைப்படுத்தல் செய்திக்கு இசைவாகிக் கொள்ளுங்கள்.

தொடர்ச்சியாக புதியவற்றை கொண்டுவர பழகுங்கள் (Continuously Innovate and Adapt): வியாபாரத்துறையானது தொடர்ச்சியாக மாற்றங்களுக்கு உட்பட்டு வருவதன் காரணமாக அது தொடர்பில் விழிப்புணர்வுடன் இருந்து, மாற்றமடையும் சந்தைகளுக்கு ஏற்ப இசைவாக்கம் பெறுவது முக்கியமானது. உங்களது உற்பத்திகள் மற்றும் தயாரிப்புக்களில் புதிய விடயங்களை புகுத்துவதோடு அது வாடிக்கையாளர் சேவையை திருப்திபடுத்துகின்றதா என்பதை உறுதிப்படுத்துவது அவசியம். தொழிற்துறைகளில் புதிய போக்குகள் (Industrial Trends) பற்றியும், வாடிக்கையாளர்களின் விருப்பங்கள் தொடர்பிலும் அவதானிப்பது முக்கியம் என்பதோடு, இதனால் புதிய வாய்ப்புக்களை இனம்கண்டு கொள்ள முடியும்.

இறுதியாக உங்கள் வாடிக்கையாளர் பரப்பினை அதிகரித்து சந்தையில் செழித்தோங்க நீங்கள் உத்திகள் உடனான, வியூக அணுகுமுறையை கடைப்பிடிப்பது அவசியம். சிறப்பான ஒன்லைன் இருப்பினை கட்டியெழுப்புவது, உங்களது இலக்கு வாடிக்கையாளர்களை இனம் காண்பது, சிறந்த வாடிக்கையாளர் சேவையை வழங்குவது, ஏனைய வியாபாரங்களுடன் கைகோர்ப்பது, இலக்குவைத்த சந்தைப் பிரச்சாரங்கள், பரிந்துரைகளை ஊக்குவிப்பது மற்றும் புதுமைகளை புகுத்துவது என விடயங்களை முயற்சிப்பது சிறு வியாபாரங்களுக்கு நீண்ட கால அடிப்படையில் வெற்றி பெறுவதற்கும், வளர்ச்சியடைவதற்கும் உதவியாக இருக்கும். அத்துடன் எப்போதும் மாறுகின்ற சந்தைகள், வாடிக்கையாளர் அடிப்படையில் விடயங்களை திட்டமிடுவது பற்றி அறிந்திருப்பதும் மிக அத்தியாவசியமானதாகும்.


Diriya Sri Lanka
Diriya Sri Lankahttps://www.diriya.lk
Diriya.lk is a sustainability and social innovation initiative of Dialog Axiata PLC. The content available herein is aimed solely for the purposes of educating, guiding and assisting Micro, Small and Medium Enterprises (MSMEs) in navigating the challenges of the fast paced business world. As such, Dialog Axiata PLC, its staff, its officers or Directors shall not be liable for any direct, indirect, incidental, special, consequential, or punitive damages or damages for any loss of profits, revenue, business, savings or data, incurred due to the use of the content available on Diriya.lk.

Get in Touch

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

spot_imgspot_img

Related Articles

spot_img

Get in Touch

Latest Posts

X