- ஒரு தொழில் முனைவராக வாழ்க்கைச் சமநிலை பேணுவதன் முக்கியத்துவம் என்ன?
- உங்கள் பிரத்தியேக வாழ்க்கையில் இதனை எவ்வாறு செய்வது?
- உங்கள் தொழில் ரீதியான வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் எவை?
ஒரு தொழில் முனைவராக இருப்பது வரப் பிரசாதம் என்பது போலவே தனிப்பட்ட வாழ்க்கையில் பலசவால்களை எதிர்கொள்ளவும் வேண்டியுள்ளது. ஒரு சிறந்த தொழில் முனைவராக ஆரோக்கியமானபிரத்தியேக வாழ்க்கை மற்றும், தொழில் ரீதியான வாழ்க்கை போன்ற இரு நிலைகளிலும் வாழ்க்கைசமநிலையை பேணுவது மிக முக்கியம். வெற்றிகரமான பல தொழில் முனைவர்கள் தங்கள் வாழ்வின்இலக்குகளை அடைவதற்கும், சாதனைகள் பல புரிவதற்கும் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையின்சமநிலை பேணுதலே முக்கிய காரணம். எனவே நீங்களும் இத்தகைய நிலையான ஆரோக்கிய மிக்கவாழ்க்கை சமநிலையை பேணி நீண்ட கால வெற்றிகளுக்கான உறுதுணை சக்தியாக மாற்றிக் கொள்ளலாம். தொழில் முனைவராக தடைகளை தகர்த்து சாதனைகளை புரிய உதவும் சில வழிமுறை குறிப்புகள் இதோ.
உங்கள் பிரத்தியேக வாழ்க்கையில்
- ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் பற்றி அதிக கவனம் செலுத்துங்கள். உடற்பயிற்சி, ஆரோக்கிய மற்றும் சுத்தமான உணவுப் பழக்க வழக்கம் மற்றும் தேவையான ஓய்வு போன்றவற்றை அடிப்படை பழக்க வழக்கங்களாக கடைப்பிடியுங்கள்.
- உங்கள் உள ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துங்கள். உங்கள் மனவலிமையை பாதிக்கும் நபர்களிடமிருந்தும், சூழ்நிலைகளில் இருந்தும் தள்ளி இருங்கள். இது உங்கள் மனவலிமை மற்றும் ஆற்றலை வலிமையாக்க உதவும்.
- நல்ல குடும்ப வாழ்க்கை, நட்பு வட்டாரங்கள் போன்றவற்றை பேணிப் பாதுகாக்க நேரம் ஒதுக்குங்கள். உங்களைப் புரிந்துகொண்டவர்களின் நெருங்கிய தொடர்புகளை பேணிப் பாதுகாத்து அவர்கள் ஆதரவை தேவையானபோது பெற்றுக் கொள்ளுங்கள்.
- ஒவ்வொரு மாதத்திலும் ஓரிரு நாட்கள் உங்களுக்காக ஒதுக்கிக் கொள்ளுங்கள். இது நீங்கள்தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டிருக்கும் ஆற்றல் மற்றும் சக்தியை மீள பெறுவதற்கு, புத்துணர்ச்சி வழங்கவும் ஒரு அவகாசமாக அமையும்.
- உங்கள் அன்றாட தொழில் ரீதியான வேலைகளை தொழில் இடத்திலேயே முடித்துக் கொள்ளுங்கள். அதனை வீட்டுக்கு எடுத்துச் செல்லாதீர்கள். இது அவ்வளவு எளிதான ஒன்று இல்லாவிட்டாலும் உங்கள் ஆரோக்கியமிக்க நல்வாழ்வுக்கு பயனளிக்கும் ஒரு வழிமுறையாகும்.
உங்கள் தொழில் ரீதியான வாழ்க்கை முறையில்
- ஒரு தொழில் முனைவராக அது உங்கள் சொந்த தொழிலாக இருப்பினும் ஒவ்வொரு விடயத்திலும் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டு நுண் நிர்வாகம் செய்வதை விடுத்து உங்கள் பணியாளர்களுக்கு பொறுப்புகளை வழங்கி சுய ஆற்றலுடன் செயல்படுத்த உதவுங்கள். இதன் மூலம் உங்கள் நிறுவனத்தில் வலுவான குழு செயலாற்றலை வெளிக் கொண்டுவர முடியும்.
- பிரதிநிதித்துவம் மிக்க ஆற்றல்களுக்கு மதிப்பளியுங்கள். ஒரு தனி மனிதனாக உங்களால் எல்லாவற்றையும் செய்ய முடியாது என்பதை நீங்கள் உணர வேண்டும். எனவே உங்கள் நிறுவனத்தில் ஆற்றல் மிக்கவர்களின் பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்துங்கள்.
- சிறந்த தொழில் தேர்ச்சி பெற்ற பணியாளர்களுக்கு அவர்கள் தகுதிகளுக்குரிய சரியான பதவிகளை வழங்குங்கள். உங்கள் வளங்களை சரியாக பயன்படுத்தாவிட்டால் உங்கள் பிழையான தெரிவை சரி செய்ய வருமானத்தை விட தனிப்பட்ட உங்கள் கடின உழைப்பை தேவையற்று செலவு செய்ய வேண்டி வரும். அத்துடன் உங்களுக்க கவனச் சிதைவுகளும் ஏற்படலாம்.
- எதிர்மறையான கருத்துக்கள் தோல்விகள் என்பவற்றை ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கை வளர்த்துக் கொள்ளுங்கள். இது உங்கள் மனவலிமையை வளர்த்துக் கொள்ள, சவால்களுக்கு முகம் கொடுக்க உதவும்.
- தனித்தன்மைகளுடன் முதன்மையானவர்களாக உங்களை கருதுங்கள். உங்களை நீங்களே உற்சாகப்படுத்தி முழு நிறைவுடன் மகிழ்ச்சியாக செயல்படுங்கள்.
உங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில் ரீதியான சமநிலை மிக்க ஆரோக்கிய வாழ்விற்கான சில முக்கிய குறிப்புகள் இவை. இவற்றை கடைபிடிப்பதன் மூலம் உங்களை நீங்கள் ஆற்றல் மிக்க தொழில் முனைவராக சிறப்பாக நிர்வகித்துக் கொள்ள முடியும்.