spot_imgspot_img

பணியாளர் ஒருவரை பணியமர்த்தும்போது நீங்கள் எத்தகைய சிறப்பு பண்புகளைப் பார்க்க வேண்டும்?

  • விண்ணப்பதாரர் எத்தகைய சிறந்த பண்புகளை கொண்டிருக்க வேண்டும்?
  • இப்பண்புகள் நிறுவன வளர்ச்சிக்கு எத்தகைய பங்களிப்பினை வழங்கும்?
  • இப்பண்புகளை நீங்கள் பார்க்க வேண்டியதன் அவசியம் என்ன?

உங்கள் நிறுவனத்திற்கு வெகுவிரைவில் புதிய உறுப்பினர் ஒருவரை அல்லது பலரை பணியமர்த்தத் திட்டமிட்டுள்ளீர்களா? ஒரு சிறப்பானதும், நடைமுறை இணக்கம் கொண்ட ஒரு விண்ணப்பத்தாரரை தேர்ந்தெடுக்க தேவையான முக்கிய பண்புகளை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். இருந்தபோதிலும் நீங்கள் பணிக்கமர்த்த விரும்புபவர்களிடையே பல்வேறு ஆளுமைப் பண்புகளையும், பொதுவான பண்புகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இருந்தபோதிலும் சில பொதுவான பண்புக் கூறுகள் மூலம் விண்ணப்பித்தவர்களில், உங்களுக்கு பொருந்தும் சரியான விண்ணப்பதாரரை கண்டறிய உங்களால் முடியும்.

நேர்மை

பணியிடத்தில் மிக உயர்ந்த மதிப்புமிக்க பண்புகளில் ஒன்றாக நேர்மை விளங்குகின்றது. நேர்மையை கொண்டிருப்பது என்பது, வலுவான தார்மீக அல்லது நெறிமுறைக் கொள்கைகளைக் கொண்டிருப்பதாகும். நேர்மையாக இருப்பது என்பது விண்ணப்பதாரர் நேர்மையானவர், கண்ணியமாக நடந்துகொள்ளல் மற்றும் மற்றவர்களை மரியாதையுடன் நடத்துவது எனக் கூறலாம். இதன் பொருள் யாதெனின், அவர்கள் விநியோகம் மற்றும் முயற்சிகளில் சிறப்பாக செயற்படுவார்கள். நேர்மையான பணியாளர்கள் தொழில்சார் கலாச்சாரத்தை மேம்படுத்த உதவுகின்றனர். அத்துடன் தமக்கும் தமது ஒட்டுமொத்த நிறுவனத்திற்கும் நேர்மறையான நற்பெயர் கிடைக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தையும் கொண்டுள்ளனர்.

திடமான பணி நெறிமுறைகள்

கடினமாக உழைக்கும் பணியாளர்களை முதலாளிகள் ஏன் நன்றாக மதிக்கின்றார்கள் என்பதை புரிந்துகொள்வது மிக எளிதாகும். கடின உழைப்பாளிகள் தமது தொழிலையும், தாம் பணியாற்றும் நிறுவனத்தின் மீதும் அதிக அக்கறையை வெளிப்படுத்துவார்கள். இது சக ஊழியர்கள் மத்தியில் செல்வாக்கை ஏற்படுத்தக்கூடிய ஒரு செயற்பாடாகும். அத்துடன் உற்பத்திகளுக்கான மேம்பாட்டை எற்படுத்தவும் உதவும். கடின உழைப்பாளிகள் தமது முதலாளிகள், சக பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் நலன்களை விரும்புகின்றனர்.

ஒத்துப்போகும் தன்மை

பணியாளர்கள் சூழலுக்கு ஏற்ப தம்மை பொருத்திற் கொள்வதும், புது சூழ்நிலைக்கேற்ப விரைவாக இணைந்து பணியாற்றுவதும் எவ்வளவு முக்கியம் என்பதை கொரோனா வைரஸ் தொற்றுநோய் எமக்கு மிகச் சரியாக விளக்கியது. வீட்டிலிருந்து பணியாற்றுதல் ஒரு தேவையாக மாறிய அதேநேரம் புதிய பணி செயல்முறைகளும் நடைமுறைகளும் இடம் பெற்றன. இது ஒரு சிறந்த உதாரணமாகும். எனினும் எந்த வேலையில் மாற்றங்கள் ஏற்படக்கூடும். எனவே அவர்கள் எதிர்கொள்ள வேண்டிய அனைத்தையும் சமாளிக்கும் திறன் ஊழியர்களுக்கு இருக்க வேண்டியது மிக முக்கியமாகும்.

இரக்கமுள்ளவரராக இருங்கள்

சிறந்த பணியாளர்கள் தம்முடன் பணி புரியும் சக ஊழியர்களை மனிதாபிமானத்துடன் நோக்கி, பணிக்கு வெளியில் அவர்களது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாகவும் ஆர்வம் செலுத்துகின்றனர். அத்துடன் அவர்களை சக மனிதர்கள் என்ற நல்ல கண்ணோட்டத்துடன் பார்க்கின்றனர். சக ஊழியர்கள் தொடர்பாக அறிந்துகொள்ளவும், அவர்களுக்கு உண்மையிலேயே உதவிகள் தேவைப்படும் தருணத்தில் அதனை செய்வது எப்போதும் பணியாளர்களின் முக்கிய பண்பாக இருக்க வேண்டும்.

இலக்கு சம்பந்தமானது

இந்த புதிய நிலைமைகளை ஒரு திடமான ஊழியர் சவாலாகவே பார்க்கின்றார். புதிய வேலையை சம்பளத்தை நோக்கமாகவோ அல்லது பட்டியலில் உள்ள ஒரு வேலையாகவோ பார்க்காமல், ஓர் இலக்கை நிறைவேற்றுவதாக எண்ணி பணிபுரியும் ஊழியரிடமிருந்து நீங்கள் சிறந்த செயற்திறன் கொண்ட வேலைகளைப் பெற்று நிறுவனத்தை முன்னேற்றலாம்.

சில எளிய கேள்விகளைக் கேட்பதன் மூலம், உங்கள் விண்ணப்பதாரர் எவ்வளவு இலக்கு சார்ந்தவர் என்பதை நீங்கள் கண்டறியலாம்:

  • அவர்கள் தமது சொந்த வெற்றியை எப்படி அளவிடுகிறார்கள் என்று கோருங்கள்?
  • அவர்களது குறுகிய அல்லது நீண்ட கால வாழ்க்கை இலக்குகளை விவரிக்குமாறு கோருங்கள்
  • அவர்களது கடைசி தொழில், இந்தத் திட்டத்தில் எப்படிப் பொருந்தியது அல்லது பொருந்தவில்லை என்பதை கேளுங்கள்
  • இந்த வேலையானது,உங்கள் தொழில் இலக்குகளை எவ்வாறு பூர்த்தி செய்யும்? என கோருங்கள்.

இவை பணியிடத்தில் தனிப்பட்ட முறையில் வளரத் தயாராக இருக்கும் ஒரு நல்ல பணியாளரைக் கண்டறிய உதவும் அதேநேரம் நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் பங்களிப்பு செய்யும் சில முக்கிய பொதுவான பண்புகள்.

இவையாகும். இதுதவிர அவர்களது திறன்களைப் பார்க்க வேண்டும், நாம் மேலே கூறிய விடயங்கள் நிச்சயம் ஒரு முழமையான பட்டியல் இல்லை என்றபோதிலும், நீங்கள் பணிக்கு ஆட்சேர்ப்பு செய்யும்போது அது உங்கள் செயல்முறையை எளிதாக்கும் என நம்புகின்றோம்.

ஒரு பணியாளரிடம் இருக்கக்கூடிய பண்புகள் என நீங்கள் நினைக்கும் வேறு ஏதாவது பண்புகள் இருப்பின் அதனை எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Get in Touch

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

spot_imgspot_img

Related Articles

spot_img

Get in Touch

Latest Posts

X