spot_imgspot_img

பொருளாதார நெருக்கடியும் வியாபார தக்க வைப்பு

தற்போதைய பொருளாதார சூழலில் ஒரு வியாபாரத்தை பராமரித்து முன்னெடுத்துச் செல்வது இன்றியமையாததாகும். உங்களின்வி யாபாரம் வலுவானதாகவூம்இ நிலையானதாகவூம் இருந்தால் எந்தவொரு பொருளாதார நெருக்கடியின் போது குறைவான ஆபத்தையே உங்கள் வியாபாரம் எதிர்கொள்ள வேண்டி வரும் .​​​​உங்கள் வியாபாரத்தை வலுப்படுத்த நிதி நிர்வாகத்தைப் பற்றி மட்டும் இனி சிந்திப்பது உங்களுக்கு போதுமானதல்ல. உங்களது வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்வதற்கும் விரிவூபடுத்துவதற்கும் அதற்கான சந்தைப்படுத்தல் உத்திகள் பற்றியூம் நீங்கள் சிந்திக்க வேண்டும்இ அதே நேரத்தில் உங்கள் ஊழியர்கள் மத்தியில் அவர்கள் மன உறுதியை உயர்த்திஇ உங்கள் வியாபாரத்தை மேம்படுத்தவூம்இ கலாச்சாரம் மற்றும் நடைமுறைகளை பேணவூம் முடியூம். நெட்வொர்க்கிங் மற்றும் சரியான கூட்டணிகளை கொண்டு செல்வதன் ஊடாகஇ மிகவூம் நீண்ட தூரம் செல்ல மற்றும் அபாயங்களை குறைக்க உதவூம். உங்கள் வியாபாரத்தின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கான சில வழிகள் கீழே தரப்பட்டுள்ளன.

உங்கள் வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கவூம்

வாடிக்கையாளர் சேவை என்பது உங்கள் வாடிக்கையாளர்கள் அவர்கள் விரும்புவதைப் பெறுவதையூம் அவர்கள் விரும்பும் போது அதைப் பெறுவதையூம் உறுதி செய்தலாகும். உங்கள் வாடிக்கையாளர்களுக்கு நீங்கள் தொடர்ச்சியாக சிறந்த வாடிக்கையாளர் சேவையை வழங்கினால்இ அதன்மூலம் உங்கள் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்வதற்கு உங்களால் முடியூம். உங்கள் வாடிக்கையாளர் தளத்தை அதிகரிக்கவூம்இ உங்கள் வியாபாரத்தை புதிய சந்தைகள்இ தயாரிப்புகள் மற்றும் சேவைகளை நோக்கி நகர்த்த முடியூம் என்பதையே இது எடுத்துக்காட்டுகின்றது. பொருளாதார வீழ்ச்சியின்போது வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை அளிப்பதில் பின்வருவன உள்டங்குகின்றன.

  • நம்பிக்கை மற்றும் வாடிக்கையாளர்களுக்கான ஊக்கத் திட்டங்கள்
  • உங்கள் வாடிக்கையாளர்களின் தற்போதைய நிலையை நிவர்த்தி செய்ய உங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை மாற்றியமைத்தல்
  • வாடிக்கையாளரின் இழப்பால் ஏற்படும் சேதத்தைத் தக்கவைக்க உங்கள் வியாபாரத்தை புத்திசாலித்தனமாக பல்வகைப்படுத்துதல்
  • பொருளாதார நெருக்கடியின் போதும் கூட உங்கள் வியாபாத்தில் வைத்திருக்கும் சிறந்த விற்பனைக்குப் பின்னரான சேவையை தொடர்ச்சியாக வழங்குதல்

சரியான சந்தைப்படுத்தல் உத்திகளைப் பயன்படுத்தவூம்

உங்கள் சந்தைப்படுத்தல் உத்திகளை மதிப்பாய்வூ செய்துஇ விற்பனையை அதிகரிக்க புதிய வழிமுறைகளை கொண்டு வாருங்கள். அத்துடன் உங்கள் மூலதனத்தைப் பயன்படுத்துவதற்கான சிறந்த முறைகளைக் கண்டறியூங்கள். சந்தைப்படுத்தலில் உங்களின் போட்டி நன்மையை தெரிவிக்க எப்போதும் முயற்சி செய்ய வேண்டும். தனிப்பட்ட விற்பனை திட்டங்களேஇ உங்களை ஏனையவர்களிடமிருந்து தனித்தன்மையூடன் மிளரச் செய்யூம். ஆனால் உங்கள் சந்தைப்படுத்தும் செயல்திறனைக் கணக்கிடுவதற்கான முறைகள் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் வியாபாரத்தை சந்தைப்படுத்துவது சில நேரம் அதிக செலவூ கொண்டதாக இருக்கலாம் என்பதுடன் பொருளாதார நெருக்கடியின் போது வாய் மூலம் மற்றும் சமூக ஊடக சந்தைப்படுத்தல் போன்ற பல இலவச சந்தைப்படுத்தல் வழிமுறைகளை நீங்கள் முயற்சி செய்து பார்ப்பது உங்களுக்கு சிறந்த பலாபலன்களை தரும்.

உங்கள் ஊழியர்களை நன்கு நிர்வகிக்கவூம்

சிறந்த மற்றும் நன்கு புதுப்பிக்கப்பட்ட மனித வள தரவூகள் மற்றும் திட்டங்களை வைத்திருங்கள். உங்களது ஊழியர்களின் செலவூகளை நிர்வகிக்க அதனை உபயோகியூங்கள். இது உங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை சரியான விலையில் விற்பனை செய்வதற்கு உங்களுக்கு உதவூம். தகவல் தொடர்புகளை எப்போதும் வெளிப்படையாகவூம்இ நேர்மையாகவூம் வைத்திருங்கள். ஏனெனில் இது உங்கள் வாடிக்கையாளர்களிடையே மன உறுதியை உருவாக்கும். முடிவெடுக்கும் செயல்பாட்டில் முடிந்தவரை அவற்றைச் சேர்க்க முயற்சிக்கவூம். பொருளாதார நெருக்கடியின் போது உங்கள் பணியாளர் ஏற்பாடுகளை நீங்கள் மாற்ற வேண்டும் எனின்இ ஒப்பந்தங்களை இரத்து செய்ய வேண்டுமெனின்இ உங்களுக்கு இருக்கும் கடமைகளைப் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் பணிநிறுத்தம் செய்வதற்கு முன்இ வேலைப் பகிர்வூ மற்றும் பணி செய்வதற்கான நேர அட்டவணை அடிப்படையில் ஊதியம் பெறும் வேலையை வழங்குதல் போன்ற பிற விருப்பங்கள் தொடர்பாகவூம் கவனம் செலுத்துங்கள். இதனால் எவரும் திடீரென வேலையை விட்டு விலக விரும்பமாட்டார்கள்.


பொருளாதார நெருக்கடியின் போதும் உங்கள் வியாபாரம் செழிப்பாக இருப்பதை உறுதிசெய்ய இன்னும் பல வழிகள் உள்ளன. ஒரு தொழில்முனைவோராக உங்கள் அனைத்து தளங்களையூம் நீங்கள் உள்ளடக்கியிருப்பதை உறுதிசெய்வதும்இ நீங்கள் நெகிழ்வாகவூம் நம்பிக்கையூடனும் இருப்பதை உறுதிசெய்வதும் அதிக முக்கியமானது.

  • முறள
  • தொழில்முனைவோர்
  • வியாபாரம்
  • பணியாளர்கள்
  • குறைந்த செலவூ
  • சந்தைப்படுத்தல் உத்திகள்
  • பொருளாதாரம்
  • தொழில் வளர்ச்சி
  • ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள்
  • மனித வளம்
  • வாடிக்கையாளர் சேவை
  • வாடிக்கையாளர்கள்

Image by Gerd Altmann from Pixabay

Get in Touch

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

spot_imgspot_img

Related Articles

spot_img

Get in Touch

Latest Posts

X