எப்போதும், எப்போதும் திறந்த மனதைக் கொண்டிருங்கள்!
ஒரு மனக்குறை என்பது “உண்மையான அல்லது கற்பனை செய்யப்பட்ட தவறான அல்லது துயரத்திற்கு காரணமான எதிர்ப்புக்கான பிற காரணம்”. உங்கள் ஊழியர்களிடையே அவர்களின் அன்றாட வேலை தொடர்பான குறைகளை காண்பது மிகவும் அரிதானது அல்ல. மனக்குறை என்பதும் ஒரு வகையான ‘கருத்து’ ஆகும், இது முந்தைய நிலைகளில் இன்னும் ஆக்கபூர்வமான முறையில், அவற்றை ‘குறைகளை’ அதிகரிக்க விடாமல் எடுத்துக்கொள்ளலாம். வெவ்வேறு நபர்கள் மற்றும் சில மேலதிகாரிகள் மற்றும் கீழ்நிலை அதிகாரிகளுடன் நீங்கள் பணியாற்றுவதை கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் உங்களை அவர்களின் ஸ்தானத்தில் வைத்துக்கொண்டால் இதுபோன்ற சூழ்நிலைகளை எதிர்கொள்வது தவிர்க்க முடியாதது அல்லவா? இதனால்தான் நீண்ட கால அடிப்படையில் நிறுவனமொன்று ஊழியர்களிடமிருந்து கருத்துக்களைப் பெறுவது முக்கியம். அவர்களின் கருத்துக்களைப் பெறுவது நிறுவனம் அதன் செயல்திறனை மேம்படுத்துவதோடு, நிறுவனத்தின் மீது ஊழியர்களின் விசுவாசத்தைப் பெறவும் உதவுகிறது. உங்கள் வாடிக்கையாளர்கள் இதற்கு விதிவிலக்கல்ல. தொடர்ச்சியான முன்னேற்றத்தை அடைய வழக்கமான பின்னூட்டம் சிறந்த வழியாகும். SKS முறையானது கருத்துக்களைப் பெறுவதற்கான சிறந்த முறைகளில் ஒன்றாக அடையாளம் காணப்படலாம். உங்கள் நிறுவனத்தின் எதிர்பார்க்கப்படும் முடிவுகளை அடைவதற்கான திறவுகோலாக இது இருக்கலாம். கீழே காட்டப்பட்டுள்ளபடி இது மிகவும் எளிமையானது மற்றும் நேரடியானது.
நிறுத்துதல் (STOP)
நான் என்ன செய்வதை நிறுத்த வேண்டும்? இவை (சிறியது அல்லது பெரியது) நீங்கள் செய்யும்/செய்துகொண்டிருக்கும் ஆனால் சிறப்பாக நிறுத்தப்பட்ட நடைமுறைகள். ஒவ்வொரு நாளும் 30 – 40 நிமிடங்களைச் செலவிடும் தினசரி தகவல் பரிமாறல் கூட்டம் இருந்தால், மேலும் மூன்று நாட்களுக்கு ஒருமுறை அல்லது அதற்கு மேலாக மட்டுமே முக்கியமான தகவல் பரிமாற்றம் வந்தால், ‘தினசரி” கூட்டங்களை நிறுத்துமாறு உங்கள் பணியாளர்களிடமிருந்து பரிந்துரைகளைப் பெறுவீர்கள். நீங்கள் நடைமுறையில் பழகிவிட்டதால், இதை நீங்கள் ஒரு சிக்கலாகப் பார்க்காமல் இருக்கலாம், ஆனால் வேலை நேரத்தை வீணடிப்பதை மற்றவர்கள் உங்களுக்குக் காண்பிக்க முடியும்.
தொடர்தல் (KEEP)
நான் எதை தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும்? நீங்கள் தெரிந்தோ தெரியாமலோ செய்யும் நல்ல விடயங்கள் இருக்கலாம். இதேபோல், நீங்கள் செய்யும் சில நல்ல விடயங்கள் உங்கள் நிறுவனத்திற்கு நீங்கள் நினைப்பதை விட அதிக மதிப்பை சேர்க்கலாம். உங்களுக்கு கீழே நேரடியாகப் பணியாற்றி வரும் ஊழியர்களுடன் நீங்கள் மாதாந்த அடிப்படையில் உரையாடலை மேற்கொள்வது ஒரு உதாரணம். ‘மேலதிகாரிக்கு வழங்கும் தகவலைப் புதுப்பிப்பதற்கான வாய்ப்பாக’ இருப்பதைக் காட்டிலும், இது அவர்களை ‘ஊக்குவிப்பதாக’ இருப்பதை அவர்கள் கண்டறிந்திருக்கலாம். உங்கள் எல்லா ஊழியர்களுக்கும் நீங்கள் இதைச் செய்யலாம்.
ஆரம்பித்தல் (START)
நான் என்ன செய்ய ஆரம்பிக்க வேண்டும்? நீங்கள் கேட்கும்போது, நீங்கள் இது வரை செய்யாத விடயங்களைப் பற்றிய சிந்தனைகளை மக்கள் உங்களுக்கு வழங்குவார்கள், ஆனால் நீங்கள் அவற்றைச் செய்யத் தொடங்கினால் மதிப்பு சேர்க்கலாம். கூட்டங்கள் மற்றும் கலந்துரையாடல்களின் உதாரணங்களுக்கு மீண்டும் திரும்பிச் செல்லும்போது, தற்போதுள்ள ஆண்டு இறுதி மதிப்பீடுகளுக்குப் பதிலாக ஆண்டுக்கு இரு முறை செயல்திறன் மதிப்பீட்டு செயல்முறையை நடத்துவதற்கான ஆலோசனையைப் பற்றி சிந்தியுங்கள். இது அடுத்த சில மாதங்களுக்கு உங்களுக்கும் உங்கள் பணியாளர்களுக்கும் சில திருத்தமான ஆலோசனைகளையும் நுண்ணறிவுகளையும் வழங்கலாம்.
இது பயனுள்ளதாக இருந்தது மற்றும் உங்கள் வணிகமும் இந்த வழிமுறையிலிருந்து பயனடையும் என்று நம்புகிறோம்.
வணிக வளர்ச்சிக்கான கூடுதல் உதவிக்குறிப்புகள் மற்றும் நுணுக்கங்களுக்கு இங்கே (this space) பாருங்கள்!