spot_imgspot_img

ஒரு தலைவரை தெரிவு செய்கையில் கவனிக்க வேண்டிய பண்புகளும் குணாதிசயங்களும் எவை?

  • தலைவர்கள் குழு செயற்பாட்டு திறன் கொண்டவர்களா?
  • அவர்கள் தைரியம் மிக்கவர்களாகவும் உணர்வுபூர்வமான ஆர்வம் மிக்கவர்களாகவும் இருப்பதன் அவசியம்.
  • அவர்கள் நேர்நோக்கு மற்றும் தீர்க்கமான முடிவெடுக்கக் கூடியவர்களாக இருப்பதன் அவசியம்.

தலைமைத்துவம் என்பது பல்வேறு சொற்களால் வர்ணிக்கப்பட்டாலும் பொதுவாக வியாபாரத்தில் முகாமைத்துவம் என்ற வரையறைக்குட்படுத்தி பல நேரங்களில் அது தவறாக பயன்படுத்தப்படுகிறது. தலைவர் என்பவர் ஒரு பொது நோக்கு மற்றும் குறிக்கோளை அடைய தங்கள் குழுவை திறமையாக வழிநடத்தக் கூடியவர் என்பது சரியான பொருள் . எனவே ஒரு தலைவரின் செயற்பாடானது, அந்த வியாபாரத்தை முன்னேற்றத்திற்கான சக்தியாகவோ அல்லது வீழ்ச்சிக்கான காரணியாகவோ மாற சாத்தியங்கள் உள்ளன.

கீழ்வரும் குறிப்புகள் உங்கள் வியாபாரத்தில் ஒரு தலைவரை தேர்வு செய்யும் போது அவதானிக்க வேண்டிய பொதுக் காரணிகளை எடுத்துரைக்கின்றது.

அவர் குழு அங்கத்தவராக செயல்பட வேண்டிய அவசியம்

கூட்டுறவு வர்த்தகத்தில் மேல் நிலையில் இருக்கும் எந்த ஓர் வியாபாரத்தினதும் சிறப்பம்சமானது அதன் அங்கத்தவர்களின் உடன்பாட்டுடன் ஆன ஒருமித்த செயல்பாடாகும். ஒரு வியாபாரத்தில் அதன் குழு உறுப்பினர்களை முதலாளிகள் சாதகமான காரணியாக பார்க்கின்றனர். ஏனெனில் அவர்களின் பங்களிப்பு அவ் வியாபாரத்தின் அனைத்து துறைகளிலும் சிறப்பாக இயங்குவதற்கு முக்கிய காரணியாக அமைவதே ஆகும். இதனால் முதலாளிகளின் வாழ்க்கை சீராகவும் இலகுவாகவும் அமைந்து விடுகின்றது. எனினும் வியாபாரங்கள் முற்பட்ட காலத்தில் தலைவர்கள் வியாபாரத்தில் இத்தகைய விதிவிலக்கான தலைவர்களாக இயங்க முடியாது என்றும், தலைவரானவர் பொதுவாக சில காரியங்களை செயலாற்ற, அல்லது அவர்கள் வேலை செய்ய வேண்டிய அவசியம் இல்லை, மற்றவர்கள் வேலை செய்வதை நிர்வகித்து குழுக்களுக்கு ஆலோசனை மட்டுமே வழங்கினால் போதும் என்றும் தலைவர்கள் சுய சிந்தனையோடு தங்கள் முடிவுகளை தாங்களாகவே எடுத்து அவற்றை தனித்து நின்று செயல்படுத்தக் கூடியவர்கள் என்ற கருத்தை கொண்டிருந்தனர்.

தலைவர்கள் தைரியம் மிக்கவர்களாகவும் உணர்வுபூர்வமான ஆர்வம் மிக்கவர்களாகவும் இருப்பதன் அவசியம்.

எந்த ஒரு தொழில் துறையிலும் அதன் தலைவரானவர் ஊழியர்களுடனான உடன்பாடு மற்றும் நம்பிக்கை பேணுவது மிக அவசியமாகும். தலைவர் ஆர்வத்துடன் செயல்படுவாராயின் எந்த ஒரு கடினமான சூழ்நிலையையும் மிக இலகுவாக முன்னேறிச் செல்ல முடியும். இத்தகைய தலைவர்கள் அவர்களை சுற்றியுள்ள ஊழியர்களை இலக்கை நோக்கி கடினமாக உழைக்க தூண்டுவதோடு தடைகளை தகர்த்து இடையூறுகளை சந்திக்க கடினமான முடிவுகளை தைரியத்துடன் எடுக்க உறுதுணையாக இருப்பர். எனவே ஒரு தலைவரை தேர்ந்தெடுக்கும் போது இத்தகைய குணாதிசயங்கள் கொண்டவரை தேர்ந்தெடுப்பது மிக முக்கியமாகும்.

தலைவர்கள் நேர்நோக்கு மற்றும் தீர்க்கமான முடிவெடுக்கக் கூடியவர்களாக இருப்பதன் அவசியம்.

ஒரு வியாபாரத்தில் தலைவரானவர் தெளிவான தொலைநோக்கு அல்லது இலக்கு இல்லாமல் அதன் ஊழியர்களை எவ்வாறு சரியான பாதையில் வழி நடத்த முடியும்? எனவேதான் சிறந்த தலைவர்கள் எதிர்காலத்தை நோக்கிய கருதுகோள்களுக்கு ஏற்றார் போல் தங்கள் இலக்குகளை வரையறுத்து அவற்றிற்காக கடின உழைப்புடன் செயல்பட அதன் ஊழியர்களை தூண்டுகின்றனர். எனினும் இத்தகைய நீண்ட பயணத்திற்கு உறுதியான எடுக்கும் திறன். நல்ல தலைவர்கள் தீர்க்கமான மற்றும் தேர்வுகளால் தபால்களை எதிர்கொண்டு அவற்றை தகர்த்தெரிகின்றனர். அவர்கள் முடிவெடுக்கும் முன்னர் நிதானமாக யோசித்து கவனக்குறைவுகளால் வரக்கூடிய விளைவுகளை கவனத்தில் கொண்டு, எத்தகைய பரிவர்த்தனைகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு முடிவுகளை சரியாக எடுக்கின்றனர்.

பரிவு மற்றும் புரிந்துணர்தல்

ஒரு தலைவருக்கு அவருக்கு கீழ் வேலை செய்யும் ஊழியர்கள் மீது பரிவு மற்றும் புரிந்துணர்வு இருப்பது மிக அவசியம். தலைவர் தன் ஊழியர்களின் பிரச்சினைகளை பரிவுடன் புரிந்து கொள்வதன் மூலம் அவர்களது எண்ணத்தில் தனித்து நிற்கின்றார். புரிந்துணர்வற்ற மேலதிகாரிகள் தங்கள் ஊரியர்கள் இடையே ஒரு வித ஏமாற்ற போக்கை ஏற்படுத்துவதன் மூலம் வேலையில் ஊக்கமின்மையை உண்டாக்குகின்றனர். எனவே தலைவர்கள் தங்கள் ஊழியர்களின் பிரச்சினைகளை ஆர்வத்தோடு செவிமடுத்து அவர்கள் பிரச்சினைகளை புரிந்து கொண்டு சிறப்பாக செயலாற்ற முடியும்.

எனவே நீங்கள் உங்கள் வியாபாரத்தில் தலைவர் ஒருவரை தெரிவு செய்யும்போது அல்லது ஏற்கனவே உள்ள ஒருவரை தலைவராக பதவி உயர்வு வழங்க இருக்கும் போது இத்தகைய குணாதிசயங்கள் மற்றும் தன்மைகள் கொண்டவரா என்பதை ஆராய்ந்து தெரிவு செய்யுங்கள்.

Get in Touch

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

spot_imgspot_img

Related Articles

spot_img

Get in Touch

Latest Posts

X