spot_imgspot_img

செலவுகளை குறைப்பதற்கு வீட்டிலிருந்து பணியாற்றுதல் – அதற்கான குறிப்புகள் மற்றும் வழிமுறைகள்

கொவிட்-19 தொற்றின் பின்னர் நாடு பாரிய பொருளாதார பின்னடைவைச் சந்தித்தது. 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் நாடு முடக்கப்பட்டதிலிருந்து பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களிடையே சமூக இடைவெளியை பேணும் பொருட்டும் செலவுகளை குறைப்பதற்கும் தத்தமது வீட்டிலிருந்து வேலை செய்யும் திட்டத்தை ஊக்குவித்ததை காண முடிந்தது.

எல்லா தொழில் துறைகளுக்கும் வீட்டிலிருந்து பணிபுரியும் சூழல் சாத்திப்படாவிட்டாலும், நாட்டில் ஏற்பட்ட பாரிய பொருளாதார சரிவானது வியாபாரங்கள் மற்றும் நிறுவனங்கள் தமது ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய தேவையான வழிமுறைகளை கண்டறிய நிர்பந்திக்கப்பட்டன. முதலில் இது மிகப் பெரிய சவாலான விடயமாக தோன்றினாலும் காலப்போக்கில் தற்கால தொழில்நுட்ப வசதிகள் காரணமாக இதனை இலகுவாக செய்யக்கூடிய சாத்தியக் கூறுகளை ஏற்படுத்தின.

இலங்கை தற்போது எதிர்கொள்ளும் இப்பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக உங்கள் வியாபார பணியாளர்களை வீட்டில் இருந்து வேலை செய்ய வைக்கும் திட்டங்களை வகுப்பதன் ஊடாக வியாபாரத்தில் சேமிப்புகளை செய்ய இயலுமா?

இதற்கு தேவையான மூலோபாய செயல்முறைகள் சில கீழே உள்ளன.

நிறுவனச் செலவுகளை சேமித்தல்

நாளாந்தம் தொலைத் தொடர்புக்கு செலுத்தப்படும் செலவுகளான வாடகை, கட்டணங்கள்>பயன்பாட்டு செலவுகள் போன்ற நிறுவனச் செலவுகளை குறைப்பதன் ஊடாக பணத்தை சேமிக்க் முடியும். உங்கள் பணியிடத்தில் உங்கள் ஊழியர்களின் குறைந்த அளவினரே பணியில் இருந்தால், உங்கள் பணியிட அளவை குறைக்க முடியும். அதன்மூலம் வாடகை, ஏனைய பயன்பாடுகளுக்கான செலவுகளை சேமிக்க முடியும். வீட்டிலிருந்து வேலை செய்வதன் மூலம் பணியிடத்தில் மிகக்குறைந்த அளவிலான பணியாளர்கள் மட்டுமே பணி நடவடிக்கைகளில் ஈடுபடுவதானது> நிறுவனங்கள் செலவிடும் கட்டட செலவுகள்> வாடகைகள், உணவுச் செலவு> சுத்திகரிப்பு செலவு மற்றும் போக்குவரத்திற்கான பிற செலவுகளை மிகப் பாரிய அளவில் கட்டுப்படுத்தவோ அல்லது முற்றாக தவிர்க்கவோ முடியும்.

நிறுவனங்களில் காணப்பட்ட பாரிய செலவீனமான பல பிரதேசங்களுக்கு செல்லும் பயணச் செலவுகள், வெளிநாட்டுப் பயணச் செலவுகள் என்பவற்றை வீட்டில் இருந்து வேலை செய்யும் காலங்களில் வெகு இலகுவாக வீடியோ செட் மூலம் தேவைகள் பரிவர்த்தனை செய்யப்பட்டு வர்த்தக பயணச் செலவுகள் கணிசமான அளவை குறைக்க முடியும் என்பதை நிறுவனங்கள் புரிந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொலைதூர பணி மூலம் ஊழியர்களது செயற்திறனை அதிகரிக்க முடியும்.

உங்கள் ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிப்பதற்கு அவர்கள் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும். அது உங்கள் வியாபார செயற்திறனுக்கு அதிக நன்மைகளை தந்து உற்பத்தி திறனை அதிகரிப்பதற்கு சிறந்த தீர்வாகும். அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களை விட 13 % அதிக உற்பத்தித் திறனை வீட்டிலிருந்து வேலை செய்வோர் வழங்குவதாக ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் உறுதியாகியுள்ளது.

உற்பத்தி திறன் அதிகமாவதற்கான காரணிகள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

  • வீட்டு சூழலானது அலுவலகச் சூழலை விட அமைதியானது.
  • சக ஊழியர்களால் ஏற்படும் கவனச் சிதறல்கள் மட்டுப்படுத்தப்படுகிறது.
  • நிச்சயமற்ற போக்குவரத்துகளால் ஏற்படும் நேர தாமதங்கள் தவிர்க்கப்படுகிறது.
  • பிரயாணத்தின் போது ஏற்படும் தேவையற்ற மன அழுத்தம் குறைகிறது.
  • சுகயீன விடுமுறை மற்றும் திட்டமிடப்படாத விடுமுறைகள் தவிர்க்கப்படுகின்றன.
  • அனாவசிய ஒன்றுகூடல்கள் தவிர்க்கப்படுகின்றது.

திறமையான ஊழியர்களை நிறுவனத்தில் தக்கவைத்துக்கொள்ளல்

எந்தவொரு வியாபாரத்திலும் சிறந்த ஆட்சேர்ப்பு என்பது மிகப்பெரிய சவாலான ஒன்றாகவே காணப்படுகின்றது. அவ்வாறு உங்களால் வேலைக்கு அமர்;த்தப்பட்டவருக்கு தொழிற்பயிச்சி மற்றும் அவர்களது முன்னேற்றத்திற்கு அதிக முதலீடுகளை செய்த பின்னர் அவர்கள் பணியிலிருந்;து விலக தீர்மானத்தால், நிறுவனம் என்ற வகையில் அது உங்;களுக்கு மிகக் கடினமானதாக இருக்கும்.
வீட்டில் இருந்து வேலை செய்யும் காலத்தில் பெற்றோர்கள் தமது பிள்ளைகளை பராமரிக்கும் சந்தர்ப்பத்தை பெற்றுக்கொள்கின்றனர். அதேசமயம் அவர்களது தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்வில் சமநிலை பேணப்பட்டு அவர்கள் மேலும் உற்சாகமாக வேலை செய்வதற்கு அது காரணியாக அமைகின்றது. இவ்வாறு பணிபுரிய சந்தர்ப்பம் கிடைக்கும்போது, வியாபாரத்தில் பணியாளர்களை தங்களுக்குள் தக்கவைத்துக் கொள்வதில் மிகப் பெரும் பங்கை வகிக்கின்றது.

மட்டுப்படுத்தப்பட்ட சம்பள கொடுப்பனவுகள்

எந்த ஒரு ஊழியரும் குறைந்த சம்பளத்தை வழங்கும் நிறுவனத்தை விரும்பமாட்டார்கள். இருந்தாலும் சம்பள உயர்வைவிட வீட்டிலிருந்து பணிபுரியும் விருப்பத்தையே மூன்றில் ஒரு பங்கு பணியாளர்கள் விரும்புகின்றனர் என ஆராய்ச்சியில் குறிப்பிடப்படுகிறது.
சம்பள உயர்வை விட> வீட்டில் இருந்து அர்ப்பணிப்புடன் தங்கள் பணிகளை நிறைவேற்றும் உங்கள் ஊழியர்களுக்கு அவர்களின் செயல்திறனை அதிகரிப்பதற்காக வெகுமதிகள் வழங்கி அவர்களை ஊக்கப்படுத்தலாம். இவ்வாறு செய்வதால் உற்பத்தி திறன் அதிகரிப்பதோடு சம்பள செலவுகளை குறைக்க முடியும்.

உங்கள் பணியாளர்களின் சேவை உடலளவில் தேவைப்படாத சந்தர்ப்பங்களில்;> அவர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்வதற்கு அனுமதி வழங்குவதன் ஊடாக குறைந்த சம்பள செலவில் செயல்திறன் மிக்க சேவையை பெற்றுக்கொள்வதோடு பணியாளர்களை திருப்திகரமாக வைத்திருக்கவும் முடியும் என்பதை நினைவில் வைத்திருங்கள்.

Get in Touch

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

spot_imgspot_img

Related Articles

spot_img

Get in Touch

Latest Posts

X