spot_imgspot_img

ஒரு பயனுள்ள கட்டுப்பாட்டுக் கருவியாக பட்ஜெட்டின் வகிபாகம்

வணிகச் சூழலில் “பட்ஜெட்” என்பது ஒரு குறிப்பிட்ட வணிகத்தின் எதிர்காலத்திற்கான நிதியை மதிப்பிடுவது மற்றும் அதன் செயல்பாடுகளைத் திட்டமிடுவது என வரையறுக்கப்படுகிறது. புரிந்ததா? ஆம், நானும் முதல் நான்கு முறை இதனை விளங்கிக்கொள்ளவில்லை. இது உண்மையில் விளங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு கடினமான கோட்பாடு இல்லை என்றாலும். சுலபமாக இதனை விளங்கிக் கொள்ள நான் பாகம் பாகமாக பிரிக்கிறேன்.

பட்ஜெட் என்றால் என்ன என்பது பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாது என்று நீங்கள் கூறினால், நீங்கள் (கவனக்குறைவாக) பொய் சொல்கிறீர்கள். இது ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மாதமும் நாம் செய்யும் ஒன்று. இந்தக் ஆக்கத்துக்கு வருவதற்கு முன்பே நீங்கள் சில வரவு செலவுத் திட்டங்களைச் செய்திருக்கலாம். இதை என்னிடம் சொல்லுங்கள், “நான் இந்த ஆக்கத்தை ஒரு நிமிடம் வாசித்துவிட்டு ஒரு மணி நேரம் தொலைக்காட்சி நாடகத்தைப் பார்க்கப் போகிறேன்” என்று நீங்கள் நினைக்கிறீர்களா அல்லது இல்லையா? இதுவும் ஒரு வகை திட்டமிடல் ஆகும். நாங்கள் எங்கள் நேரத்தை திட்டமிடல் செய்கிறோம், இது ஒரு விலைமதிப்பற்ற “வளம்” ஆகும். இந்த விடயத்தில், எதிர்காலத்தில் செலவழிக்கப்பட வேண்டும் என்று நேரத்தை நாங்கள் திட்டமிடுகிறோம். இப்போது கோட்பாடு புரிந்ததா? நன்று.

பட்ஜெட் செயல்முறையின் முக்கிய படிகள்

படி 1: சந்தை நிலவரத்தை மதிப்பிடுங்கள்

  • உங்கள் வணிகம் முந்தைய ஆண்டு விற்பனையின் அதே தொகை மதிப்பை ஈட்ட முடியுமா என்பதை ஆராயவும் 
  • வணிகம் விற்பனையை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதா என ஆராயவும்
  • வரவிருக்கும் ஆண்டிற்கான உங்கள் விற்பனை இலக்கு தொகையை ஆராயவும்

படி 2: தற்போதைய சந்தை சூழலில் உங்கள் இலக்கு சாத்தியமானதா என ஆராயவும்

  • அந்த இலக்கை அடைய, உங்களிடம் போதுமான வளங்கள் உள்ளதா என ஆராயவும் (இது தேவைக்கேற்ப நிலம், தொழிலாளர் மற்றும் மூலதனமாகக் கருதப்பட்டது, இருப்பினும் இன்றைய வணிகங்கள் இந்தக் கலவையைப் பிரதிபலிக்கவில்லை)
  • உங்களின் தற்போதைய வளங்கள் உண்மையில் அந்த இலக்கை அடையும் திறன் கொண்டவையா என்பதை ஆராயவும் – இயந்திரங்களால் அதைக் கையாள முடியுமா, பணியாளர்கள் போதுமான பயிற்சி பெற்றவர்களா?
  • நீங்கள் அதிக/ சிறந்த வளங்களில் முதலீடு செய்ய வேண்டுமா இல்லையா என்பதை ஆராயவும் 
  • தற்போதைய முகாமைத்துவ வளங்கள் திறன் கொண்டவையா மற்றும் கூறப்பட்ட வளங்களை நிர்வகிக்க போதுமானதா என ஆராயவும்

படி 3: செலவுகளைக் கவனத்தில் கொள்ளுங்கள்

  • நீங்கள் வழங்கும் ஊதியம் எவ்வளவு அதிகரிக்கப்பட வேண்டும் – சந்தை நிலையானதாக இல்லாமல் இருக்கலாம், ஆனாலும் உங்கள் ஊழியர்களுக்கு நீங்கள் ஊதியத்தை வழங்கும் கடப்பாட்டைக் கொண்டிருக்கலாம்
  • மூலப்பொருட்களின் செலவு எவ்வளவு
  • களஞ்சியப்படுத்தலுக்கு எவ்வளவு செலவாகும்
  • கூடுதல் இயந்திரங்கள் மற்றும் இயந்திர பராமரிப்பு செலவுகளை ஆராயவும் 
  • மற்ற செலவு வகைகள் அதிகரிக்காது அப்படியே இருக்குமா என ஆராயவும்

படி 4: இப்போது, உங்கள் இலக்குகளுக்கு எவ்வாறு நிதியளிக்க முடியும் என்பதை ஆராயவும்

  • கூடுதல் வளத் தேவைக்கு நிதியளிக்க, வணிகத்திடம் போதுமான பணம் உள்ளதா என ஆராயவும் 
  • நீங்கள் விலையை அதிகரிக்க வேண்டுமா மற்றும் ஆம் எனில், எவ்வளவு என்று ஆராயவும்
  • செலவுகளைக் குறைக்கும் வழிமுறைகளை உருவாக்குதல்
  • வங்கிக் கடன்கள் போன்ற கடன் தெரிவுகளை ஆராயவும்

சரி, இந்தத் தகவல்களைச் சேகரித்த பிறகு, பட்ஜெட் திட்டமிடலைத் தொடங்கத் தயாராக உள்ளீர்கள்.

பட்ஜெட்டை ஒரு கட்டுப்பாட்டு கருவியாகப் பயன்படுத்துதல்

பட்ஜெட்டை எவ்வாறு தயாரிப்பது என்பது குறித்து இப்போது உங்களுக்கு சற்று தெளிவு உள்ளது. இந்த அலகின் மிகவும் சுவாரசியமான அம்சத்திற்கு செல்லலாம். பண உட்பாய்ச்சல் மற்றும் பண வெளிப்பாய்ச்சல் ஆகியவற்றை உகந்த அளவில் உச்ச சமநிலைப்படுத்துவது மிகவும் கடினம் என்பதை நாங்கள் இருவரும் அறிவோம். பண உட்பாய்ச்சல் அதிகமாக இருக்கும் போது வியாபாரம் நன்றாக இருக்கும் ஆனால் பண உட்பாய்ச்சல் குறையும் போது நன்றாக இருக்காது. இருப்பினும், இது அவ்வாறு இருக்கக்கூடாது. பட்ஜெட் திட்டமிடல் இருக்கும்போது, உங்கள் பண உட்பாய்ச்சலை நீங்கள் நிர்வகிக்கலாம். இதனால் எதிர்பாராத பண வெளிப்பாய்ச்சல் இருந்தாலும் வணிகம் நிலையானதாக இருக்கும். “ஆனால் எப்படி?” என்று நீங்கள் கேட்கலாம்? சரி, நீங்கள் குறைக்கக்கூடிய சில வகையான செலவுகள் உள்ளன மற்றும் உங்கள் விற்பனை வெளியீடு எதுவாக இருப்பினும், சில வகையான செலவுகளை நீங்கள் மேற்கொண்டே ஆக வேண்டும். செலவுக் கட்டுப்பாடு என்று வரும்போது ஒவ்வொரு வகையான செலவுகளும் வித்தியாசமாக கைக்கொள்ளப்பட வேண்டும். அவை என்னவென்று அறிந்து கொள்வோம். 

நிலையற்ற செலவுகள் மற்றும் நிலையான செலவுகள்

நிலையற்ற செலவுகள் என்பது வெளியீட்டின் மாற்றத்திற்கு ஏற்ப மாறுபடும் செலவுகளின் வகைகள். நீங்கள் உங்கள் உற்பத்தியை அதிகரிக்க விரும்பினால், உற்பத்தி அதிகரிப்பு மற்றும் அதற்கு நேர்மாறாக (உ.ம்.: மூலப்பொருள் செலவுகள், பொதியிடல் செலவுகள்) தொடர்பாக நிலையற்ற செலவுகள் தவிர்க்க முடியாமல் அதிகரிக்கும். இப்போது, இந்த வகை செலவை எப்படிக் குறைப்பது என்று பார்ப்போம்?

  • உடனடி உற்பத்திக்குத் தேவையானதை மட்டும் வாங்க முயற்சி செய்யுங்கள்
  • நீங்கள் நிச்சயமாக விற்கக்கூடியதை மட்டுமே உற்பத்தி செய்ய முயற்சிக்கவும்
  • கையிருப்புகளை முடிந்தவரை குறைவாக வைத்திருங்கள்
    • கையிருப்பால் பணம் செலவாகும் என்பதுடன் அபாயங்கள் உள்ளன
      • களஞ்சியப்படுத்தல்
      • வழக்கொழிந்துபோதல்
      • திருட்டு
      • சேதம்
    • சில்லறை வணிகங்கள் வேகமாக நகரும் வழங்கல் சங்கிலியைக் கொண்டிருக்க வேண்டும். சங்கிலியில் எப்போதும் களஞ்சியத்தில் சிறிய அளவு மேலதிகமாக கையிருப்பு இருத்தல் வேண்டும்
  • முடிந்தவரை கடனுக்கு வாங்கவும்
  • முடிந்தால் பொருட்களை விற்று பணம் பெற்ற பின்னரே நீங்கள் கொள்வனவு செய்தவற்றுக்கு பணம் செலுத்த ஏற்பாடு செய்யுங்கள்

அடுத்து, நிலையான செலவுகள். நிலையான செலவுகள் நிலையற்ற செலவுகளுக்கு எதிர்மாறானவை. இவை உற்பத்தி மட்டங்களில் ஏற்படும் மாற்றங்களுக்கேற்ப வேறுபடுவதில்லை. எவ்வாறாயினும் உற்பத்தி அளவுகள் அதிகரித்தாலும் அல்லது குறைந்தாலும், நிலையான செலவுகள் அப்படியே மாறாதிருக்கும் (உ.ம்: வாடகை, காப்புறுதி). எனவே, “இவை மாறாதவை என்றால், நான் அவற்றை எவ்வாறு கட்டுப்படுத்துவது?” என்று நீங்கள் ஆச்சரியப்படக்கூடும். சரி, விற்பனைப் பகுதி தொடர்பான செலவுகளைக் குறைப்பதன் மூலம் நீங்கள் நிலையான செலவுகளைக் குறைக்க மாட்டீர்கள். இருப்பினும், சரியான திசையில் பயணிப்பதற்கான நடவடிக்கை எடுப்பதன் மூலம் நிலையான செலவின் அளவைக் குறைக்கலாம். 

  • ஒவ்வொரு மாதமும் செலவழிக்க ஒரு தொகையை கவனமாக நிர்ணயம் செய்து அதை கடைபிடிக்கவும்
  • பகுதி நேர ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை பணியமர்த்துவது மற்றும் விற்பனை அதிகரிக்கும் போது அவர்களின் நேரத்தை அதிகரிப்பது அல்லது அதற்கு பதிலாக தினசரி ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்துவது
  • சிரேஷ்ட ஊழியர்களுக்கு செலவுக் கட்டுப்பாட்டை ஒரு முக்கிய செயல்திறன் காரணியாக மாற்றவும்
  • சில செயல்பாடுகளை வெளிச்சேவையமர்வு செய்வதைக் கருத்தில் கொள்ளுங்கள்
    • கணக்கியல்
    • ஊதியத் தாள் 
    • போக்குவரத்து (வெறுமனே தரித்து நிற்கும் லொறிகளுக்கு ஏன் கட்டணம் செலுத்த வேண்டும்?) / விநியோகம்
    • சந்தைப்படுத்தல் / இணையவழி சந்தைப்படுத்தல்
    • தரக் கட்டுப்பாடு
    • துப்புரவுப்பணி 

இப்போது, இந்த அலகினை நிறைவு செய்வோம். இது மிகவும் அக்கறையுடன் உள்வாங்கிக் கொள்ளப்பட வேண்டிய ஒன்று என்பதை நான் புரிந்துகொள்கிறேன். சுருக்கமாகச் சொல்கிறேன். வரவு செலவுத் திட்டம் என்பது உங்கள் எதிர்கால பண உட்பாய்ச்சல் மற்றும் வெளிப்பாய்ச்சலை நிர்வகிக்க நீங்கள் பயன்படுத்தக்கூடிய ஒரு முக்கியமான கட்டுப்பாட்டு கருவியாகும். உங்கள் எதிர்பார்ப்புகளையும் அவற்றின் சாத்தியக்கூறுகளையும் கவனமாகத் திட்டமிட்டு அவற்றை எழுத்தில் குறித்துக் கொள்ளவும். பின்னர், வரவிருக்கும் காலத்தில் உங்களுக்கு என்ன வகையான செலவுகள் ஏற்படும் என்பதை பகுப்பாய்வு செய்யுங்கள். செலவு வகையைப் பொறுத்து, செலவுகளைக் குறைப்பதில் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுங்கள். உங்கள் நிறுவனத்தை தொடர்ந்து கண்காணிக்கும் மற்றும் அதன் இலக்குகளை அடையும் ஒரு உயர்தர பட்ஜெட் உங்கள் கைவசம் இருக்கும். உண்மையான பட்ஜெட் திட்டமிடலைக் கருதும்போது, உங்கள் வணிகத்தைப் பொறுத்து சில சிறந்த நடைமுறைகள் மற்றும் பல்வேறு வகையான பட்ஜெட்டுகளை நீங்கள் பின்பற்றலாம். ஒரு தனி ஆக்கத்தில் இந்த விடயங்களை இன்னும் ஆழமாக ஆராய்வோம்.

Get in Touch

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

spot_imgspot_img

Related Articles

spot_img

Get in Touch

Latest Posts

X