spot_imgspot_img

வலுவான அணியை உருவாக்குவதற்கு செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை

பணியிடத்தில் ஒரு சமநிலையான அணியை உருவாக்குவதற்கு முயற்சி செய்வது ஏன் மிகவும் முக்கியமானது என்று நீங்களே கேட்கக்கூடும்.

ஒரு நொடி உங்களை மார்க் ஸக்கர்பேர்க்கின் பணி நிலைமையில் கற்பனை செய்து பாருங்கள். ஃபேஸ்புக் எனப்படும் முகநூல் முற்றிலும் அவருடைய சிந்தனையில் உதித்தது என்பது உண்மைதான், அது அவருடைய முயற்சி என்பதும் உண்மைதான். ஆனால், கடின உழைப்பாளர்கள் மற்றும் அவர்களது ஆற்றல்கள் இல்லாமல், அவரது கண்டுபிடிப்பு உலகெங்கிலும் உள்ள பலரின் கைகளை எட்டியிருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அல்லது எல்லா வேலைகளையும் அவரே தனியாளாக கையாள முடியுமா?

எப்போதும் உங்கள் அணியே உங்கள் வேலையை மேலும் முன்னெடுத்துச் செல்கிறது, மேலும் அவர்களை நிறுவனத்தின் முதுகெலும்பு என்றும் அழைக்கலாம். அதனால்தான் உற்பத்தித்திறன் மிக்க ஒரு அணியை உருவாக்குவது மற்றும் கட்டியெழுப்புவது அவசியம். திறம்பட்ட அணி உருவாக்கத்தில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவைகளைப் பார்ப்போம்,

எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்,

தெளிவான நோக்கங்களை அமைத்து, தெளிவான பாத்திரங்களை ஒதுக்குங்கள்

ஒரு தெளிவான இலக்கை நோக்கி அணி வழிநடாத்திச் செல்லப்பட வேண்டும். அவர்கள் தனிப்பட்ட வேறுபாடுகள் மற்றும் இலக்கை அணுகுவதற்கான வெவ்வேறு வழிகளைக் கொண்டிருப்பது பரவாயில்லை, ஆனால் முடிவில், அந்த முயற்சிகள் அனைத்தும் நிறுவனம் மற்றும் அணியின் நோக்கங்களுடன் ஒத்திசையும் வகையில் சீரமைக்கப்பட வேண்டும். ஆனால் ஒரு நபர் அல்லது ஒரு குழுவினர் தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய சூழ்நிலைகள் இருக்கலாம், இது அணியில் உள்ள மற்றவர்களுக்கு ஜீரணிக்க கடினமாக உள்ளது. அணியாக உழைக்கும்போது இந்த துருவமுனைப்பு எப்போதும் தவிர்க்கப்படல் வேண்டும். இந்த சூழ்நிலைகளைச் சமாளித்து நிர்வகிக்க ஒரு அணித் தலைவரை நியமிப்பது உதவியாக இருக்கும். 

தனிப்பட்ட திறனை வளர்த்துக் கொள்ளுங்கள்

தனிப்பட்ட திறன்கள் மற்றும் ஆற்றல்;களை வளர்க்கும் போது செயற்திறன்மிக்க அணிகள் ஒன்றாக வளர்ச்சி காண்கின்றன. எனவே, மக்கள் பலதரப்பட்டவர்கள் என்பதையும், அவர்களுக்கே உரிய திறன்கள் மற்றும் ஆற்றல்கள் இருப்பதையும் மனதில் கொள்ள வேண்டியது அவசியம். இந்தத் திறன்களைக் கண்டறிந்து, அவற்றைப் பட்டைதீட்டுவதற்கு அந்த நபர்களுக்கு உதவுவது அணியின் பொறுப்பாகும். ஏனெனில் அந்தத் திறமைகள்தான் அணியை நிலைநிறுத்துகின்றன.

செயல்திறன்மிக்க தொடர்பாடல்

அணி ஒன்றாக இணைக்கப்பட்டு ஒருமித்து உழைக்க வேண்டும். யாரேனும் ஒருவருக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் அல்லது ஒரு சிந்தனை உதிக்கும் போது, அவர்கள் அதைத் தெரவிக்கும் வகையில் தொடர்பாடல் இருத்தல் வேண்டும். அணிக்குள் தொடர்பாடல் முடிந்தவரை சீரானதாக அமைதல் வேண்டும். இது அணியின் ஒத்துழைப்பையும், செயல்திறனையும் மேம்படுத்தும். தொடர்பாடல் என்பது அணி உறுப்பினர்களுக்கும் உங்களுக்கும் அல்லது மற்ற தலைவர்களுக்கிடையிலும் வழக்கமாக நிகழ வேண்டியவை. இது முடிந்தவரை திறந்த மற்றும் வெளிப்படையானதாக இருக்க வேண்டும். மற்றும் வழக்கமானதாக இருக்க வேண்டும். அணியை ஈடுபாட்டுடன் வைத்திருக்கவும், மேலும் தீர்க்கப்பட வேண்டிய எந்தவொரு சிக்கல்களையும் தீர்ப்பதை தலைமைத்துவம் கூடிய விரைவில் கற்றுக்கொள்ளவும் இது இடமளிக்கிறது. 

அணி செயல்பட பாதுகாப்பான இடம்

பாதுகாப்பான இடம் என்பது உடல் பாதுகாப்பை மாத்திரம் உறுதி செய்யும் இடமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. உடல் பாதுகாப்பு அவசியம், ஆனால் அணி உறுப்பினர்களிடையே நல்லெண்ணம் அதே அளவுக்கு ஈடாக முக்கியமானது. இது பணியிடத்தை அதிக ஈடுபாட்டுடன் புதிய சிந்தனைகளை வெளிக்கொண்டுவருவதற்கு கதவுகளைத் திறக்கும். மற்றவர்களின் தனியுரிமையையும், அந்தரங்கத்தையும் ஆக்கிரமிக்காமல், தங்கள் எல்லைகளுக்குள் இருந்துகொண்டு தங்களை வெளிப்படுத்துவதையே பாதுகாப்பாக உணருவார்கள். தேவைப்படும்போது உங்கள் சந்தேகங்கள் மற்றும் உங்கள் பாதிப்புகளைக் காண்பிப்பதன் மூலம் ஆறுதல் மற்றும் ஆதரவு மற்றும் வெளிப்படையான இந்த கலாச்சாரத்தை உருவாக்கும் பொறுப்பின் பெரும்பகுதி அணித் தலைவராக உங்களுக்கு உள்ளது.

வலுவான தலைமைத்துவத்தை நிறுவுங்கள் ஆனால் ஆதிக்கம் செலுத்தாதீர்கள்

தலைமைத்துவம் என்பது அதிகாரத்தை அதிக அளவில் திணிப்பது அல்ல. நீங்கள் எப்போதும் புதிய சிந்தனைகளை வரவேற்க வேண்டும் மற்றும் அனைவருக்கும் சமமான அணுகலுக்கான வாய்ப்பினை வழங்க வேண்டும். உங்கள் அணித் தலைவர்கள் அனைவரும் சிறந்த அழைப்பின் மூலம் வழிநடத்தப்படுகிறார்கள் என்பதை நினைவூட்டுங்கள்.

அணி மிகவும் பெரியதாக இருக்கக்கூடாது

இது எப்போதும் ஆபத்தானது மற்றும் சரியான எண்ணிக்கையைத் தீர்மானிப்பது எப்போதும் கடினம். ஆனால் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டியது என்னவென்றால், அதிக சமையல்காரர்களைக் கொண்டிருப்பது சூப் கெட்டுப்போவதற்கு வழிவகுக்கும் என்ற முதுமொழி உள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த விடயத்தில் நிறைய ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன, மேலும் பொதுவான ஒருமித்த கருத்தை பெரும்பாலான இராணுவத்தினர் பின்பற்றுகிறார்கள். 3 மற்றும் 6 அல்லது 8 வரையிலான எண்ணிக்கை நிறுவனத்தின் மிகவும் பயனுள்ள பிரிவு என்பதுடன், அனைத்து தரவரிசைகளிலும் இதுவே பின்பற்றப்படல் வேண்டும். 

பன்மைத்துவம் போற்றப்படல் வேண்டும் – மற்றும் தீவிரமாக பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும்

Groupthink” எனப்படுகின்ற ஒருமித்த அணிச் சிந்தனை தொடர்பில் நிறைய ஆய்வு செய்யப்பட்டுள்ளது, ஏனெனில் இது வணிகம் மற்றும் வாழ்க்கையின் பிற துறைகளில் மிகவும் பேரழிவு தரும் சில முடிவுகளுக்கு பொதுவானது என்று கண்டறியப்பட்டுள்ளது. ஒரு அணியை ஒரே போக்கில் நிலைநிறுத்துவது முக்கியம் என்றாலும், மக்கள் அறிவாற்றல் காரணமாக குறுக்குவழிகளை எடுக்கத் தொடங்குவதற்கும், அவர்கள் தமது வழக்கத்திற்கு மாறாக அதைத் தாண்டிச் சிந்திக்காததற்கும் பழக்கப்பட்டு விடக்கூடாது.

இதன் ஒரு பகுதி அணியின் பன்மைத்துவத்திலிருந்து வெளிவருகிறது – அவர்கள் வாழ்க்கையின் வெவ்வேறு நிலைகள், கல்வி பின்னணி, வயது, அனுபவம் என பலவற்றால் வேறுபட்டாலும் பன்மைத்துவம் அவர்களை ஒருங்கிணைக்கிறது. அணி மிகவும் பலதரப்பட்டவர்களைக் கொண்டதாக இருந்தாலும், அவர்கள் நீண்ட காலம் திசை மாறாமல் ஒன்றாக வேலை செய்தால், அவர்கள் ஒரே மாதிரியாக சிந்திக்கத் தொடங்குவார்கள். இது இனம் இனத்தைச் சாரும் என்ற பழமொழிக்கு ஏற்புடையதாக உள்ளது. இது உண்மைதான், ஆனால் ஒரு அணிக்குள், ஒவ்வொருவரினதும் தனித்துவம் மிகவும் முக்கியமானது, ஏனெனில் இது ஒரு அணியை தனித்துவமாக்குகிறது, மேலும் இதை இழப்பது ஒருபோதும் நல்லதல்ல. அத்தகைய அணிகளை அவ்வாறு நிரந்தரமானதாக விட்டுவிடக்கூடாது. அணிகளுக்கு இடையே சில மாற்றங்களைச் செயல்படுத்துவதும், புதியவர்களை அணிக்குள் உள்வாங்குவதும், குழுவாக ஒரே போக்கில் மாத்திரம் சிந்திப்பதுடன் நின்றுவிடுவதைத் தடுப்பது முக்கியம்.

சிறந்த அணியைக் கட்டியெழுப்புவது உண்மையிலேயே பலனளிப்பதுடன், தொடர்ந்து உயர் மட்டத்தில் செயல்படும் ஒரு சிறந்த அணியை உருவாக்குவது விஞ்ஞானத்தைக் காட்டிலும் மேன்மையான ஒரு கலையாகும். மேலும் இது பெரும்பாலும் நிறைய அதிர்ஷ்டத்தையும் உள்ளடக்கியது. சரியான நபர்கள் சரியான பாதையில் நடக்கிறார்களா, சரியான நபர்கள் உள்ளக பணி மாற்றங்களுக்கு சரியான நேரத்தில் தயாராக இருக்கிறார்களா, கொடுக்கப்பட்ட பணிக்காக நீங்கள் விரும்பிய நிலைக்கு அணி மற்றும் தனிநபர்கள் வளர்ந்துள்ளார்களா? நாங்கள் இங்கு ஆராய்ந்த விடயங்களை மனதில் வைத்திருப்பது, முகாமையாளராகவும், அணியைக் கட்டியெழுப்புபவராகவும் உங்கள் வாழ்க்கையை எளிதாக்கும் என்பதுடன், மேலும் உங்கள் அணியும் பலமானதாக மாறும்.

Get in Touch

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

spot_imgspot_img

Related Articles

spot_img

Get in Touch

Latest Posts

X