spot_imgspot_img

பயனுள்ள விளக்கக்காட்சிக்கு செய்ய வேண்டிய மற்றும் செய்யக்கூடாதவை தொடர்பான உதவிக்குறிப்புகள்

ஒரு எழுத்தாளர் மிகச் சிறந்த வார்த்தைகள், எண்ணங்கள், கதைக்கருவைக் கொண்டிருக்கலாம், ஆனால் மிகவும் பிரபலமான sit-com Friends இடமிருந்து Rachel’s waitressing skills திறமைக்கு சமமான எழுத்து நடையை அவர் கொண்டிருந்தால் என்னவாகும்? இதேபோல் ஒரு விளக்கக்காட்சியுடன், இணைந்ததாக மிகச் சரியாக வழங்க முடியாத ஒரு சிந்தனை என்பது சமிக்ஞை இல்லாத தொலைபேசியைப் போல பயனற்றது. மோசமான விளக்கக்காட்சி திறன்கள் வழிவகுக்கும் விடயங்களின் பட்டியலில் வேலைவாய்ப்பின்மை, வங்குரோத்து, மற்றும் எல்லாவற்றையும் விட மோசமான தோற்றம் என பல அடங்கியுள்ளன. சுருக்கமாக கூறுவதாயின், ஒரு நல்ல நிகழ்ச்சித் தொகுப்பாளராக அல்லது படைப்பாளராக இருப்பது இன்றியமையாத திறமை!

பின்வரும் உதவிக் குறிப்புகள் மூலம் உங்கள் விளக்கக்காட்சி திறன்களை மேம்படுத்தவும்:

செய்ய வேண்டியவை

  • உங்கள் முன்னால் உள்ள அரங்கத்தினரை அறிந்து கொள்ளுங்கள். அவர்கள் எதைப் பற்றி பேசுவார்கள், என்ன பதிலளிப்பார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
  • உங்கள் செய்தியை 3 அல்லது 4 முக்கிய புள்ளிகளாகக் குறைக்க சில அணி மட்ட கருத்துதிர்ப்பு அமர்வுகளை மேற்கொள்ளுங்கள்.
  • எளிய, குறுகிய வாக்கியங்களை தயார் செய்து அவற்றைப் பயன்படுத்தவும். பல உட்பிரிவுகளைக் கொண்ட (இது போன்ற) சிக்கலான வாக்கியங்களை உபயோகிக்கும் வழிமுறையைப் பின்பற்றினால், நீங்களும் உங்கள் முன்னாலுள்ள அரங்கத்தினரும் சொல்ல வேண்டிய மற்றும் செல்ல வேண்டிய மையக்கருத்தினை இழக்க நேரிடும்.
  • உதாரணங்கள் கூடுதல் அர்த்தமுள்ளதாக இருக்க உதவுகின்றன, சிந்தனைகளை விளக்குவதற்கு அவற்றைத் தொடர்ந்து பயன்படுத்தவும்.
  • வார்த்தைகள் மற்றும் வாக்கிய காட்சிச்சட்டங்கள் மாத்திரம் போதாது, நீங்கள் முன்வைக்கும் செய்தியை வலுப்படுத்த உடல் மொழியையும் பயன்படுத்தவும்.
  • உங்களிடம் வாக்கிய காட்சிச்சட்டங்கள் இருந்தால், அவற்றை எளிமையாகவும், ஆர்வமூட்டுபவையாகவும், ஒரு நேரத்தில் ஒரு செய்தியில் கவனம் செலுத்தும் வகையிலும் ஆக்கவும்.
  • உங்கள் விளக்கக்காட்சியை படைப்பதற்கு முன்பே போதுமான அளவில் பயிற்சி செய்யுங்கள்.
  • எழுத்துப் பிழைகளை சரிபாருங்கள்! உங்கள் வாக்கிய காட்சிச்சட்டங்கள் மற்றும் உங்கள் ஒத்திகையை வேறு எவர் முன்பும் மேற்கொண்டு அவரை பார்க்கச் செய்யுங்கள் – அது அவருக்குப் புரியும்படியாக உள்ளது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்!
  • சௌகரியமான ஆடைகளை அணியுங்கள். நீங்கள் இதற்கு முன் அந்த ஆடைகளையோ அல்லது அந்த ஜோடி பாதணிகளையோ அணிந்திருக்கவில்லை அல்லது பல ஆண்டுகளாக கழுத்துப்பட்டி அணியவில்லை என்றால், ஒரு முக்கியமான விளக்கக்காட்சியின் போது உங்களை அசௌகரியமாக நீங்களே ஆக்கிக்கொள்வதை விடவும் மோசமான விடயம் எதுவும் இருக்க முடியாது. 
  • இடம் மற்றும் மிக முக்கியமாக, உபகரணங்களை (எப்போதும் சோதித்துப் பாருங்கள்!) விளக்கக்காட்சிக்கு முன் பரிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். 
  • விளக்கக்காட்சியை ஆரம்பிக்க முன் ஆழமாக சுவாசித்து, ஓய்வெடுத்து, உங்கள் முன்னால் அரங்கத்தில் உள்ளவர்களைப் பார்த்து புன்னகைக்கவும்.
  • விளக்கக்காட்சியின் வெவ்வேறு கட்டங்களில் கண்ணும் கண்ணும் தொடர்பு கொள்ளும் வகையில் அரங்கத்திலுள்ள பார்வையாளர்கள் மத்தியிலிருந்து அவ்வப்போது தோராயமாக அவர்களை தேர்ந்தெடுக்கவும்.
  • இது ஒரு தனிநபர் நிகழ்வு என்று நினைக்காதீர்கள், இடைத்தொடர்பாடல்களுக்கு ஏனையவர்களையும் அழைக்கவும், உங்கள் விளக்கக்காட்சியைப் பொறுத்தவரை உங்கள் முன் அரங்கத்தில் உள்ளவர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த இடமளியுங்கள்.
  • அமைதி ஒரு சிறந்த விளக்கக்காட்சிக்கான கருவி என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒவ்வொரு விளைவுக்கும் இடைநிறுத்தம் உண்டு, ஒரு கேள்வியைக் கேட்ட பிறகு அல்லது உங்கள் செய்திக்கு மையமாக ஏதாவது கருத்தைச் சொன்ன பிறகு பார்வையாளர்களுடன் கண்ணும் கண்ணும் தொடர்பு கொள்ளும் வகையில் சற்று இடைநிறுத்தவும் – இது அரங்கத்தில் உள்ளவர்களை இன்னும் நெருக்கமாக ஈர்க்கிறது.
  • பொருத்தமான தருணங்களில், சில நகைச்சுவைகளை தெறிக்க விடவும்.

செய்யக்கூடாதவை

  • அதிக வாசகங்கள் அல்லது விசேட சொற்கள்/வெளிப்பாடுகளைப் பயன்படுத்துதல்.  
  • அதிக நேரத்திற்கு உங்கள் முன்னுள்ளவர்களுக்கு உங்கள் முதுகைக் காண்பித்தல் அல்லது அவர்களிடமிருந்து இடைத்தொடர்புகளை விலக்கிக் கொள்ளுதல்.  
  • உங்கள் விளக்கக்காட்சியின் போது ஏனையவர்களுடன் கண்ணும் கண்ணும் தொடர்பு கொள்ளாதிருத்தல் அல்லது ஒரு நபருடன் மாத்திரம் கண் தொடர்பைப் பேணுதல்.  
  • விளக்கக்காட்சியின் போது ஒன்றுக்கு மேற்பட்ட செயல்பாடுகளில் ஈடுபடுதல் – விளக்கக்காட்சியுடன் முழுமையாக ஐக்கியமாக இருக்க வேண்டும் மற்றும் ஆற்றும் கருமம் மற்றும் அரங்கத்தினர் மீது கவனம் செலுத்துங்கள்.
  • பார்வையாளர்களுக்கு முன்னால் மிக வேகமாக அல்லது அடிக்கடி நகர்தல் – அவர்களின் கவனம் திசைதிருப்பப்படுவதையோ அல்லது ஆர்வக்குறைபாட்டை ஏற்படுத்துவதையோ நீங்கள் விரும்பமாட்டீர்கள்.  
  • உங்கள் கைகளை உங்களுக்கு முன்னால் அல்லது உங்களுக்குப் பின்னால் கட்டிக்கொள்ளுங்கள் – நீங்கள் சொல்லும் விடயத்தை வலியுறுத்த விரும்பினால் மாத்திரம் கைகளை உபயோகிக்கலாம்.  
  • உங்கள் விளக்கக்காட்சி முழுவதும் உங்கள் கைகளை உங்கள் சட்டைப் பைகளில் வைத்துக் கொள்ளுதல்… அல்லது,
  • உங்கள் கைகளை அதிகமாக அல்லது திரும்பத் திரும்ப நகர்த்துதல். உங்கள் வார்த்தைகளை வலியுறுத்தும் வகையில் இயற்கையான அசைவுகளைப் பேணுங்கள். எஞ்சிய நேரத்தில், அது இயற்கைக்கு மாறானதாக உணர்ந்தாலும், கூட உங்கள் கைகளை உங்கள் பக்கவாட்டில் தொங்க விடுங்கள், உங்கள் அடுத்த கருத்தை வலியுறுத்த அல்லது பிரதிபலிக்க தயாராக இருக்க வேண்டும்.
  • பொருத்தமற்ற உடை அல்லது அதிக ஆபரணங்களை அணிதல். பார்வையாளர்கள் உங்கள் விளக்கக்காட்சியைப் பார்ப்பதற்காகவே உள்ளார்கள், உங்களை ஒரு காட்சிப் பொருளாகப் பார்க்க அல்ல.
  • ஒருவரின் பாணியைப் பின்பற்றுதல். உங்கள் சொந்த பாணியைப் பயன்படுத்தவும், நீங்கள் பயிற்சி செய்யும் போது அது தானாகவே அமையும், மேலும் விளக்கக்காட்சிகளை படைக்கத் தொடங்கும் போது அதை நீங்கள் உருவாக்கிக் கொள்வீர்கள்.

உங்களுக்குப் பிடித்தமான செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவற்றை நாங்கள் தவறவிட்டோமா? உங்களுக்கு எது சிறந்தது என்பதை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்!

Get in Touch

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

spot_imgspot_img

Related Articles

spot_img

Get in Touch

Latest Posts

X