spot_imgspot_img

பங்குச் சந்தையைப் பற்றி சிந்திக்கிறீர்களா?

“பங்குச் சந்தை” எனப்படும் போது இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு செய்தி நிருபரும் எதைப் பற்றி கவலைப்படுகிறார்கள்? இது மிகவும் எளிமையானது, அதே நேரத்தில் மிகவும் சிக்கலானது. இந்தக் கட்டுரையில், நாம் பார்த்த அல்லது கேள்விப்பட்ட பங்குச் சந்தையின் பங்கு வர்த்தகப் பக்கத்தைப் பற்றி அல்லாது, ஆனால் நிறுவனங்கள் உண்மையில் எவ்வாறு பட்டியலிடப்பட்டு பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்யப்படுகின்றன – மற்றும் அவை ஏன் அவ்வாறு செய்யப்படுகின்றன என்பதைப் பற்றி கலந்துரையாடுவோம்.

பங்குச் சந்தை என்றால் என்ன?

பங்குச் சந்தை என்பதை வாங்குபவர்களும் விற்பவர்களும் பங்குகளை அல்லது நிறுவனங்களில் பங்குகளை பரிமாறிக்கொள்ள சந்திக்கும் ஒரு சந்தையாக வரையறுக்கலாம். ஒரு பங்கு என்பது ஒரு நிறுவனத்தின் பங்கு உரிமையாண்மையின் ஒரு அலகைக் குறிக்கிறது. பல வணிகங்கள், குறிப்பாக பங்குச் சந்தைகளுக்கு முன்பு, தனிநபர் அல்லது ஒரு சிறிய குழுவின் முதலீடுகளால் மட்டுமே மூலதன நிதியளிக்கப்பட்டன. இன்றும் கூட பல வணிகங்கள் “தனியார் உரிமையுடன்” ஒன்று அல்லது ஒரு சில தனிநபர்கள் பெரும்பாலும் குறிப்பிடத்தக்க தொகையை முதலீடு செய்யும் வகையில் இயங்குகின்றன. 

பெரிய வணிகங்களின் தோற்றம் மற்றும் பொருளாதாரங்களின் விரைவான வளர்ச்சியுடன், தனியார் நிறுவனங்களால் மட்டும் அதிக ஆபத்துகள் மற்றும் புதிய சவால்கள் மற்றும் போட்டியாளர்களை எதிர்கொள்ளத் தேவையான பெரிய அளவு மட்டத்தை அடையத் தேவையான மூலதனத் தேவைப்பாடுகள் ஆகியவற்றைத் தொடர்ந்து தக்க வைக்க முடியவில்லை. எனவே, பொது நிறுவனங்கள் என்ற கோட்பாடு உதித்தது. நிறுவனங்கள் தங்கள் உரிமையின் குறிப்பிட்ட பங்கை பொது மக்களுக்கு ஒரு குறிப்பிட்ட விலைக்கு வழங்கத் தொடங்கின. இந்த பங்குகளில் ஒரு தனிநபருக்கு எத்தனை பங்குகள் உள்ளன என்பதைப் பொறுத்து, அவர் நிறுவனத்திற்குள்ளேயே மாறுபட்ட தெரிவுநிலை மற்றும் செல்வாக்கு செலுத்தும் திறன் ஆகியவற்றைக் கொண்டிருப்பார். இன்று அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் ஒழுங்குமுறையுடன், இக்கட்டமைப்பு மிகவும் மேம்பட்டுள்ளதுடன், ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

பொதுப் பங்கு வழங்கலை யார் மேற்கொள்ளலாம்?

வணிகத்தைக் கொண்டுள்ள அனைவரும் பங்குச் சந்தையில் தம்மைப் பதிவு செய்து, தமது பங்குகளை பொதுமக்களுக்கு விற்க முடியாது. காலி முகத்திடலில் உள்ள “இஸ்ஸோ-வடே” விற்பனையாளர் பங்குச் சந்தையில் பங்குகளை நிரற்படுத்த முடியுமா? இல்லை, அவரால் முடியாது. இலங்கையில், ஒரு நிறுவனமானது அதன் பங்குகளை பொதுமக்களுக்கு விற்பதற்கு “பொது வரையறுக்கப்பட்ட நிறுவனமாக (பிஎல்சி)” பதிவு செய்யப்படல் வேண்டும். இருப்பினும், பிஎல்சி இன் பதிவு செயல்முறை மிகவும் கடினமானது மற்றும் பங்குச் சந்தையில் நிறுவனத்தின் இருப்பை நிர்வகிக்க நிறுவனங்களுக்குள் நிறைய சரிபார்ப்புக்கள் மற்றும் உறுதிப்படுத்தல்கள் மற்றும் ஆவணங்கள் தேவைப்படுகிறது. நீங்கள் உங்களை ஒரு பிஎல்சி ஆக பதிவுசெய்த பிறகு, நீங்கள் ஒரு ஆரம்பப் பொது வழங்கல் நடவடிக்கையை முன்னெடுக்க தகுதியுடையவர்.

ஆரம்ப பொதுப் பங்கு வழங்கல் என்றால் என்ன? (மேலும், இரண்டாம் பொதுப் பங்கு வழங்கல் பற்றி சிறிதளவு)

ஒரு ஆரம்ப பொதுப் பங்கு வழங்கல் என்பது ஒரு நிறுவனம் தனது பங்குகளை முதல் முறையாக பொதுமக்களுக்கு வழங்குவதாகும். ஒரு ஆரம்ப பொதுப்பங்கு வழங்கலுக்கு முன், ஒரு நிறுவனம் “தனியார்” ஆகும், அங்கு நிறுவனத்தின் உரிமை தனியார் வசம் உள்ளது.

பெரிய தனியார் நிறுவனங்களின் வணிகச் செய்திகளில் “பொது நிறுவனமாக மாறுவதை” நீங்கள் பார்த்திருக்கலாம். இது பெரும்பாலும் பத்திரிகைகள் மற்றும் முதலீட்டாளர்களிடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்துகின்ற ஒரு விடயமாகும். இதுதான் ஆரம்ப பொதுப் பங்கு வழங்கல். பொதுவில் பட்டியலிடப்பட்ட பங்குகளில் “அவற்றை வாங்க” முன்வரும் புதிய முதலீட்டாளர்களிடமிருந்து கிடைக்கப்பெறும் பணத்திற்காக, ஆரம்ப தனியார் முதலீட்டாளர்கள் தங்களுடைய தற்போதைய உரிமையை கைமாற்றிக்கொள்ள இது ஒரு வாய்ப்பாகும். பெரும்பாலும், ஒரு ஆரம்ப பொதுப் பங்கு வழங்கல் நாளில் பங்கு விலைகள் ஆரம்பத்தில் மதிப்பிடப்பட்டதை விட பல மடங்குகளாக இருக்கலாம், அதாவது நிறுவன ஸ்தாபகர், ஆரம்பகால ஊழியர் அல்லது முதலீட்டாளர் என தங்கள் பங்குகளை விற்பவர்களுக்கு நேர்த்தியான இலாபம் ஈட்ட வாய்ப்புள்ளது. மேலும் எந்த ஆரம்ப பொதுப் பங்கு வழங்கலைச் சூழவுள்ள ஆர்வத்தையும் இது விளக்குகிறது.

தனிநபர்கள் அல்லது பொதுமக்களுக்கு நிறுவனங்கள் அதிக பங்குகளை வழங்குவதற்கான ஒரே வாய்ப்பு அல்லது ஒரே வழிமுறை இதுவல்ல. ஆரம்ப பொது வழங்கலுக்குப் பிறகு நடைபெறும் எந்தவொரு பொது வழங்கலும் ஒரு இரண்டாம் பொதுப் பங்கு வழங்கல் நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. இது பொதுமக்களிடையே நிறுவனத்தின் உரிமையாண்மையை மேலும் நீர்த்துப்போகச் செய்யும்.

பெரும்பாலும் மோசடிகளைத் தடுக்கவும், சிறு-அளவு முதலீட்டாளர்களைப் பாதுகாக்கவும், நிறுவனத்தின் உரிமை மற்றும் பொதுப் பங்கு வழங்கல்களைச் சூழ கடுமையான விதிகள் உள்ளன. நிறுவனங்கள் ஏற்கனவே இயங்கியிருக்க வேண்டும் மற்றும் பொது வழங்கல்களுக்குத் தகுதிபெறுவதற்கு முன்பு அவை பொருளாதாரரீதியாக சாத்தியமான நிறுவனங்கள் என்று கட்டுப்பாட்டாளர்களை திருப்திப்படுத்த வேண்டும். இத்தனை இருந்தாலும் கூட, பொதுமக்களுக்கு பங்குகளை வழங்காத பல நிறுவனங்கள் உள்ளன என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். ஏன், என்று நீங்கள் ஆச்சரியப்படலாம்.

ஏன் பொது நிறுவனமாக மாறுவதில் அனைவருக்கும் விருப்பம் இல்லை?

பெரும்பாலான நிறுவனங்களுக்கு, பொது நிறுவனமாக மாறுவது நிதியைத் திரடம்டுவதற்கான கடைசித் தெரிவாகும், ஏனெனில் இது மிகவும் “செலவான” மூலதனத்திரட்டு வழிமுறைகளில் ஒன்றாகும். இதன் பொருள் என்னவென்றால், உரிமையை நீர்த்துப்போகச் செய்யத் தேவையில்லாது, நிதி திரட்டும் பிற வழிமுறைகளுடன் ஒப்பிடுகையில், பொதுப் பங்கு நிரற்படுத்தல் அனைத்து வகையான செலவுகளையும் உள்ளடக்கியது, குறிப்பாக முழு செயல்முறையையும் நிர்வகிக்கும் ஒப்பந்ததாரர்களுக்கு பெரும் தொகை செலுத்த வேண்டி ஏற்படும்.

இன்னும் குறிப்பிடத்தக்க வகையில், இது முடிவெடுக்கும் செயல்பாட்டில் ஆரம்ப உரிமையாளர்களின் சக்தியை நீர்த்துப்போகச் செய்கிறது. எனவே, உங்கள் நிறுவனம் நிறுவப்பட்ட ஆரம்ப நோக்கமானது, முடிவெடுப்பதில் சில பிரதிநிதித்துவங்களைக் கொண்ட பரந்த உரிமை காரணமாக, அது செயல்படுவதைப் பார்க்க விரும்புவதிலிருந்து வேறுபடலாம்.

ஆயினும்கூட, இந்த அபாயங்களை நீங்கள் கையில் எடுக்கத் தயாராக இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், பொது நிறுவனமாக மாறுவது என்பது உங்கள் நிறுவனத்தின் பங்கை கைமாற்றுவதற்கான ஒரு பொது வழியாகும். அதற்கு ஈடாக அது முன்னர் மதிப்பிடப்பட்டதை விட அதிகமாக தொகையாக இருக்கும். ஒரு தொழில் முயற்சியாளராக, இதனை நிர்வகித்தல், இதில் உள்ள அபாயங்கள் சரியா? அதைப் பற்றி சிந்திக்க உங்கள் நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். மேலும், பொது நிறுவனமாக மாறுவது என்பது உங்களிடம் உள்ள ஒழுங்குமுறைச் சுமையைப் பெருக்குவதாகும், ஏனெனில் முன் எப்போதும் இல்லாத வகையில் நிறைய விதிகள், ஒழுங்குமுறைகள், தரநிலைகள் மற்றும் சிறந்த நடைமுறைகளுக்கு இணங்க வேண்டியிருக்கும். உங்கள் சட்ட மற்றும் இணக்கச் செலவுகள், ஒழுங்குமுறைச் சுமை ஆகியவை மிக வேகமாக அதிகரிக்கும். உங்கள் முகாமைத்துவ நிர்வாக அணி மற்றும் தற்போதைய பங்குதாரர்களுடன் நீங்கள் கலந்துரையாட வேண்டும், மேலும் அந்த ஆரம்ப பொதுப்பங்கு வழங்கலின் விரைவான பணப்பரிமாற்றம் மற்றும் தெரிவுநிலையுடன் ஒப்பிடுகையில், செயல்முறையுடன் தொடர்புடைய செலவு மற்றும் முயற்சியை முழுமையாக ஆராய வேண்டும்.

Get in Touch

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

spot_imgspot_img

Related Articles

spot_img

Get in Touch

Latest Posts

X