spot_imgspot_img

உங்களது தற்போதைய வியாபாரத்தை மேம்படுத்தவும், முன்னெடுத்துச் செல்லவும் வியாபார முகாமைத்துவம் ஏன் முக்கியம் பெறுகின்றது?

உங்கள் வியாபாரம் வலுவாகவும் பலம் பொருந்தியதாகவும் இருந்தால்> அந்த வியாபரரத்திற்கு ஏற்படக்கூடிய ஆபத்துகள் அல்லது எதிர்பாராத சம்பவங்களால் ஏற்படக் கூடிய அனர்த்தங்கள் குறைவாகவே இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் வியாபாரத்தை பலமுள்ளதாக்குவது என்பது நிதி நிர்வாகத்தை மட்டும் உள்ளடக்கியதல்ல. உங்கள் வாடிக்கையாளர் தளத்தை தக்கவைத்தல்> வாடிக்கையாளர் வலையமைப்பை விரிவுபடுத்துதல்> உங்கள் வியாபார பொருட்களை குறைந்த விலைக்கு வழங்குதல்> உங்கள் ஊழியர்களின் மன உறுதியை உயர்த்துதல் மற்றும் வியாபார நடைமுறைகளை மேம்படுத்துதல் போன்ற உத்திகளும் இதில் உள்ளடங்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். வேறு வார்த்தைகளில் கூறுவதானால்> இவை அனைத்திலும் வியாபார முகாமைத்துவம் முக்கியமானது. பொருளாதார நெருக்கடியின் மத்தியில் உங்கள் தற்போதைய வியாபாரத்தை மேம்படுத்தி முன்னெடுத்துச் செல்வதற்கு வியாபார முகாமைத்துவம் இன்றியமையாததாக இருப்பதற்கான காரணங்கள் சில கீழே தரப்பட்டுள்ளன.

சந்தைப்படுத்தல் உத்திகளை மதிப்பாய்வு செய்வதற்கும் புதுப்பிப்பதற்கும் வியாபார முகாமைத்துவம் உதவுகின்றது

உங்கள் சந்தைப்படுத்தல் உத்திகளை மதிப்பாய்வு செய்வதானது> உங்கள் விற்பனையை அதிகரிக்க புதிய யோசனைகளைக் கொண்டு வருவதற்கும்> உங்கள் சந்தைப்படுத்தல் டொலர்களைப் பயன்படுத்துவதற்கான சிறந்த வழிகளைக் கண்டறிவதற்கு நீங்கள் முயற்சி செய்யலாம். உங்கள் போட்டி நன்மைகளைத் தொடர்பாடல் ஊடாக வெளிப்படுத்த நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் தனிப்பட்ட விற்பனையானது ஏனையவர்களிமிடமிருந்து உங்களை பிரித்து காண்பிக்கும் தனித்துவ பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும். இதுதவிர உங்கள் சந்தைப்படுத்தல் செயற்திறனை அளவிடுவதற்கான உத்திகளை உருவாக்குவது மிக முக்கியம் என்பதை நினைவில் வைத்திருங்கள்.

உங்கள் வியாபாரத்தை சந்தைப்படுத்துவது என்பது விலை அதிகம் கொண்டதாக அமையக்கூடும். அதேநேரம் பொருளாதார வீழ்ச்சியின் போது உங்களுக்கு கிடைக்கும் இலவச சந்தைப்படுத்தல் கருவிகளை ஆராய்ந்து அவற்றை பயன்படுத்துவது சாலச் சிறந்தது. இதில் சமூக ஊடகங்கள் மற்றும் வாய்வழி விளம்பரம் போன்றவற்றை குறிப்பிடலாம். இவை அனைத்தும் உங்களுக்கு சிறந்த வியாபார முகாமைத்துவத்தை வழங்கும்.

இது வாடிக்கையாளர் சேவை மற்றும் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்வதற்கு வியாபார முகாமைத்துவம் உதவும்

வாடிக்கையாளர் சேவை என்பது வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் விரும்பியதை> அவர்கள் விரும்பும் நேரத்தில் வழங்குவதாகும். உங்கள் வியாபாரம் தரம் நிறைந்த> சிறப்பான வாடிக்கையாளர் சேவையை வழங்கினால்> உங்களுடன் ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களை நீங்கள் தக்கவைத்துக் கொள்ளலாம். இது உங்கள் வாடிக்கையாளர் தளத்தை வைத்திருக்கவும், அதிகரிக்கவும் உங்களுக்கு அதிக வாய்ப்பை ஏற்படுத்தித் தரும். இது உங்கள் வியாபாரத்தை புதிய சந்தைகள் அல்லது தயாரிப்புகள் மற்றும் சேவைகளை நோக்கி நகர்த்தி செல்லும் என்பதை ஞாபகத்தில் வைத்திருங்கள்.

பொருளாதார நெருக்கடியின்போது வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை வழங்குவதில் பின்வரும் விடயங்கள் அடங்கும்:

  • லோயல்டி அல்லது வாடிக்கையாளர் ஊக்கத் திட்டங்களை செயற்படுத்துதல்
  • உங்கள் வாடிக்கையாளர்களது தற்போதைய தேவைகளுக்கு மிகவும் பொருத்தமானதாக உங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை மாற்றியமைத்தல்
  • கணிசமான வாடிக்கையாளர்களை இழந்துவிடாமல் இருப்பதற்காக உங்கள் வியாபாரத்தை பல்வகைப்படுத்துதல்.

நிதிச் சரிவின்போது கூட விற்பனைக்கு பின்னரான சிறந்த வாடிக்கையாளர் சேவையை வழங்குவதன் மூலம் உங்கள் தற்போதைய வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்வதற்கான வழிகளைக் கண்டறிவது மிகவும் முக்கியமானது.

இது நெட்வொர்க்கிங்கை வளர்க்கும்

பொருளாதார வீழ்ச்சியின் போது நெட்வொர்க்கிங் செய்வது மற்ற வியாபாரங்களை எவ்வாறு சமாளிக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள பயனுள்ளதாக இருக்கும். குறைந்த செலவில் உங்கள் வியாபாரத்திற்கான புதிய வாய்ப்புகள்> வாடிக்கையாளர்கள்> பணியாளர்கள்> சப்ளையர்கள் மற்றும் வியாபார பங்காளர்களை நீங்கள் கண்டறியலாம். ஏனைய வியாபாரங்களுடன் கூட்டணிகளை உருவாக்குவதைக் கருத்தில் கொள்ளுங்கள். உதாரணமாக வெகுமதி வழங்குதல் மற்றும் சலுகைகள் வழங்குதன் ஊடாக செய்யலாம்.

மேற்குறிப்பிட்ட அனைத்து காரணிகளும் நன்கு வளர்ந்த மற்றும் செயல்படுத்தப்பட்ட வியாபார முகாமைத்துவ திட்டத்தின் பண்புக் கூறுகளுக்குள் உள்ளடங்கின்றன. இலங்கையில் உள்ள வியாபாரங்கள் தற்போது தங்களால் இயன்ற சிறந்த வியாபார முகாமைத்துவ உத்திகளை நடைமுறைப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டியுள்ளமைக்கு இதுவே காரணமாகும்.

உங்கள் வியாபாரத்தை மேம்படுத்த வியாபார முகாமைத்துவம் என்பதன் முக்கியத்துவத்தைப் பற்றிய மேலதிக தகவல்களை அறிந்து கொள்ள திரிய இணையத்தளத்தைப் பார்க்கவும்.

Get in Touch

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

spot_imgspot_img

Related Articles

spot_img

Get in Touch

Latest Posts

X